அப்பாவை காணமா.. விஜயை வெளுத்து வாங்கிய எடப்பாடி.. மீண்டும் மீண்டும் திமுகவுக்கு ஆதரவாக பேச்சு

  • திருப்பூர்: மதுராந்கம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தவெக, திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட்கள், நாம் தமிழர் என 5 முனை போட்டி நிலவுகிறது. தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தவெகவை கடுமையாக விமர்சிக்கும் எடப்பாடி பழனிசாமி, திமுகவுக்கு ஆதரவாகவும் கருத்துகளை கூறி வருகிறார். சட்டமன்றத்தில் அப்பாவை காணோம் என விஜய் கூறிய கருத்தை எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.

    Advertisement

    தாராபுரத்தில் நடைபெற்ற பிரச்சாரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், "எங்கள் கட்சியினரை கைது செய்வது வழக்கு போடுவதா ஆளுங்கட்சிக்கு அழகு. இந்த அராஜகம் நீடிக்காது. கரூர் கூட்ட நெரிசல் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. மறந்துவிடாதே. உச்ச நீதிமன்றம், சிபிஐ நேரடியாக விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டது. அதை கண்காணிப்பதற்கு உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபயை நியமித்துள்ளனர். இரண்டு ஐஜி அதிகாரிகளும் விசாரணையை கண்காணிக்கிறார்கள்.

    Advertisement

    அப்பாவை தேடுவதா வேலை

    இந்த விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தீர்ப்பு வழங்கிய பிறகு தான் தவெக ஆட்சி தமிழகத்தில் இருக்குமா இருக்காதா என்று தெரியும். ஒரு சம்பவம் நடைபெற்றவுடனே துண்டை காணோம், துணியை காணோம் என்று ஓடியவர் தானே. உங்களுக்கு ஆப்பு அடிக்க போவதே அதிமுகவில் இருந்து உங்கள் கட்சியில் சென்றவர்கள் தான். வளர்த்துவிட்ட அதிமுகவுக்கே ஆப்பு அடிக்கிறார்கள் என்றால் உங்களுக்கு ஆப்பு அடிக்க எவ்வளவு நேரம் ஆகும்.

    அவர்கள் எல்லாம் பத்திரமாக சேர்க்க வேண்டிய இடத்தில் உங்களை சேர்ப்பார்கள். அப்படிப்பட்ட ஆட்கள் தான் அவர்கள். அவர்களை பற்றி எங்களுக்கு தெரியும். நிறைய பழகியுள்ளோம். எந்த நேரத்தில் எப்படி ஆப்பு அடிப்பார்கள் என்பது விஜய்க்கு தெரியாது. சட்டசபையில் கையை இப்படி வைத்து அப்பாவை தேடுகிறார். அப்பாவை தேடுவதாய் இருந்தால் வெளியே சென்று தேடு. சட்டமன்றத்தில் ஏன்யா தேடுற. சட்டமன்றத்தில் அப்பாவை தேடுவதற்காகவா மக்கள் ஓட்டு போட்டு உன்னை முதலமைச்சராக்கியுள்ளார்கள்.

    Advertisement

    வரலாற்று சிறப்புமிக்க

    சட்டமன்றத்தில் கிண்டலும், கேலியும் மட்டும் தான் நடக்கிறது. தமிழக சட்டமன்றம் ஒரு புகழ்பெற்ற மன்றம். வரலாற்று சிறப்புமிக்க மாநிலம். நம் முன்னோர்கள் பல சட்டங்களை இயற்றி நாட்டு மக்களுக்கு பல திட்டங்களை கொண்டு வந்தனர். அப்படிப்பட்ட மாமன்றத்தில் அப்பனை காணோம் என தேடி கொண்டிருக்கிறார். இதற்கா மக்கள் ஆட்சியை உங்கள் கையில் கொடுத்தார்கள்.

    நாட்டில் எவ்வளவு பிரச்சனைகள் நிலவுகின்றன. விலைவாசி உயர்ந்துவிட்டது. அதைப்பற்றி கேட்டால் பதிவ் வருவதில்லை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. பெண்களுக்கு, சிறுமிகளுக்கு பாதுகாப்பு இல்லை. பாட்டிகளுக்கு கூட பாதுகாப்பற்ற நிலை உள்ளது. அதைப்பற்றி காவல்துறை மானிய கோரிக்கையில், அதிமுக சார்பில் 50 நிமிடங்கள் பேசினோம். நம்முடைய குரல் சட்டமன்றத்தில் ஒலித்தது" என்றார்.

    English Summary

    ADMK Edappadi Palanisamy said, CM Vijay searching for appa in assembly. is people voted for him to search appa. he supported DMK.