திருப்பூர் அருகே ரேஷன் அரிசியை எடை போட்டு பார்த்த பயனாளி அதிர்ச்சி! பெண் ஊழியர் சஸ்பெண்ட்

  • திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், வேலம்பாளையம் ரேஷன் கடையில் தராசில் மோசடி செய்த வீடியோ வெளியான நிலையில் கடை ஊழியர் வடிவுக்கரசி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    Advertisement

    திருப்பூர் மாவட்டம் வேலம்பாளையம் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் பொது மக்களுக்கு வழங்கப்படும் அரிசியின் எடை குறைவாக இருந்துள்ளது.

    Advertisement

    தொடர்ந்து பலமுறை இதேபோல நடந்த நிலையில் இன்று அரிசி வாங்கியவர்கள் வெளியே சென்று எடை வைத்த போது 3 கிலோ குறைவாக இருந்துள்ளது. 15 கிலோ அரிசியில் ஐந்து கிலோ என மூன்று முறை போட்டதாகவும் அதில் மூன்று கிலோ குறைந்து உள்ளதால் எடை இயந்திரத்தில் முறைகேடு நடந்துள்ளதாக பொதுமக்கள் அங்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது எடை இயந்திரத்தில் உள்பக்கம் ஒரு கிலோ எடைக்கல் வைத்து மோசடி செய்தது தெரிய வந்தது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அங்கு பணியாற்றும் பெண் பணியாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    Advertisement

    பொது மக்களிடம் எடையில் மோசடி செய்யப்படும் அரிசியை அந்த ஊழியர் வெளியே விற்பனை செய்து வருவதும் தெரியவந்துள்ளது. ரேஷன் கடை பணியாளரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ காட்சிகள் வெளியானதை தொடர்ந்து, பணியாளர் வடிவுக்கரசியை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட வழங்கல் அதிகாரி சரவணன் உத்தரவிட்டுள்ளார்.

    இது போல் கடந்த 2020ஆம் ஆண்டு ரேஷன் கடைகளில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்திய போது எடையில் மோசடி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளில் தொழிலாளர் துறையினர் ஒரே நேரத்தில் ஆய்வு நடத்தினர். அப்போது மதுரையில் மட்டும் ஒரே நாளில் 72 ரேஷன் கடைகளில் ஆய்வு செய்யப்பட்டது. இதில் 24 கடைகளில் எடை குறைவாக பொருட்களை விநியோகம் செய்வது கண்டறியப்பட்டது. இதற்காக ரூ 24 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    English Summary

    Ration shop employee suspended after a video shared in social that she has manipulated weighing scale in Tiruppur.