திருப்பூர் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டருக்கு ரூ.10 கோடி அறிவித்த அரசு! ஜவுளி துறையில் குவியுமா லாபம்

  • திருப்பூர்: திருப்பூர் பின்னலாடைத்துறை ஆண்டுக்கு 70 ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகம் செய்து நாட்டின் பொருளாதாரத்தில் முக்கியப் பங்காற்றி வருகிறது. இந்த சூழலில், திருப்பூரின் வர்த்தகத்தை மேலும் உயர்த்த தமிழக அரசு பட்ஜெட்டில் ரூ.10 கோடியில் "டெக்ஸ்டைல்ஸ் டெக்னாலஜி சென்டர்" மற்றும் பசுமை ஆடை உற்பத்தித் திட்டத்தை அறிவித்துள்ளது. அதை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்...!!

    Advertisement

    தமிழ்நாட்டின் தொழில் துறைக்கு எப்போதுமே டாப்பில் திகழும் நகரம் நம்முடைய திருப்பூர்... இந்தியாவின் பின்னலாடை தலைநகரம் என்று கெத்தாக அழைக்கப்படும் நகரம் திருப்பூர் தான்..

    Advertisement

    திருப்பூர் - அந்நிய செலாவணி

    ஏற்றுமதி மூலமாக மட்டுமே வருடத்துக்கு 40 ஆயிரம் கோடி ரூபாய் அந்நிய செலாவணியை ஈட்டி தருகிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.. அதுமட்டுமல்லாமல், உள்நாட்டு பனியன் உற்பத்தி மூலமாக 30 ஆயிரம் கோடி என மொத்தம் 70 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பிசினஸ் செய்யும் நகராக திருப்பூர் இன்றும் கம்பீரமாக இயங்கி வருகிறது.

    ஆனாலும் கடந்த சமீப காலமாகவே மூலப்பொருளான பருத்தி ஏற்றுமதி காரணமாக நூல் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்ததால், தொழிலதிபர்கள் மிகவும் கஷ்டத்தையும், நெருக்கடியையும் சந்தித்தார்கள்.

    Advertisement

    தொழில் துறையினர் எதிர்பார்ப்பு

    வேறு வழியில்லாமல் செயற்கை இழைகளுக்கு மாற ஆரம்பித்தபோது, அவையும் சீனா மற்றும் வட மாநிலங்களில் இருந்து வர வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனால் உற்பத்தி செலவு எகிறி, உள்நாட்டு வர்த்தகம் பெருமளவு சரிவைக் கண்டது.

    இப்படிப்பட்ட சூழலில் தான், கடந்த ஒரு வருடமாக திருப்பூர் மெல்ல மெல்ல மீண்டு வரத் தொடங்கியது. முக்கியமாக, அண்டை நாடான வங்கதேசத்தில் ஏற்பட்ட அசாதாரண அரசியல் சூழல், இந்திய ஜவுளித் துறைக்கு ஒரு தங்கமான வாய்ப்பாக மாறியது. சர்வதேச ஆர்டர்கள் திருப்பூரை நோக்கி வர தொடங்கியதால், இந்த நேரத்தில் அரசு ஏதாவது நல்ல செய்தி அறிவிக்காதா என்று தொழில் துறையினர் ஏகப்பட்ட எதிர்பார்ப்போடு காத்திருந்தனர்.

    Advertisement

    அவர்களின் எதிர்பார்ப்பை பொய்யாக்காமல், தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில், நிதியமைச்சர் மரிய வில்சன் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

    "டெக்ஸ்டைல்ஸ் டெக்னாலஜி சென்டர்"

    திருப்பூர் மாவட்டத்தின் டெக்ஸ்டைல்ஸ் துறையை உலகத் தரத்திற்கு உயர்த்தும் வகையில், அங்கு அதிநவீன வசதிகளுடன் கூடிய "டெக்ஸ்டைல்ஸ் டெக்னாலஜி சென்டர்" உருவாக்கப்படும் என்றும், இதற்காக முதற்கட்டமாக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு திருப்பூர் தொழிலதிபர்கள் மற்றும் தொழிலாளர்கள் மத்தியில் மிகப்பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ஏனென்றால் உலக அளவில் இப்போது சுற்றுச்சூழலுக்கு எந்தப் பாதிப்பும் வராத ஆடைகளுக்கே அதிக வரவேற்பு இருக்கிறது. இதைக் கருத்தில் கொண்டு, திருப்பூரில் சுற்றுச்சூழலுக்கு உகந்த "பசுமை ஆடை உற்பத்தி முறையை" ஊக்குவிக்க அரசு முழு வீச்சில் களம் இறங்கியுள்ளது.

    Advertisement

    பட்ஜெட்டில் அதிரடி

    இயற்கையை பாதிக்காத வகையில் ஆடைகளைத் தயாரிப்பது, கழிவுநீரை மறுசுழற்சி செய்வது மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல்களை பயன்படுத்துவது எனப் பல கட்டங்களில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளன.

    நிதியமைச்சர் மரிய வில்சன் வெளியிட்டுள்ள இந்த ரூ.10 கோடி மதிப்பீட்டிலான திட்டம், திருப்பூரின் வர்த்தகத்தை மீண்டும் உச்சத்திற்கு கொண்டு செல்வதுடன், லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகளையும் நம்பிக்கையையும் தரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது..!!

    English Summary

    Tiruppur Textiles Get ₹10 Crore Boost as Finance Minister Maria Wilson Announces Textile Technology Centre