ரூ. 900 கோடி விவகாரம்.. உதயநிதியை முன்வைத்து சீமான் எழுப்பிய அந்த கேள்வி!

  • திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் முதல்முறையாக தாராபுரத்தில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. அரசியல் களம் விறுவிறுப்பாகி உள்ள நிலையில், திமுகவுக்கு மார்ட்டின் நிறுவனம் ரூ. 900 கோடி வழங்கிய விவகாரத்தை முன்வைத்து நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கேள்விகளை எழுப்பியுள்ளார். சட்டப்பேரவையில் இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்ப வேண்டுமெனில், நாம் தமிழர் கட்சி வேட்பாளரை சட்டப்பேரவைக்கு அனுப்ப வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

    Advertisement

    திருப்பூர் மாவட்டம் இதுவரையில் இடைத்தேர்தலை சந்தித்ததில்லை. இந்நிலையில், முதல் முறையாக தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் அரசியல் களத்தில் பெரும் கவனம் பெற்றுள்ளது. 2026 சட்டப் பேரவைத் தேர்தலில் தாராபுரம் தொகுதியில் நான்குமுனைப் போட்டி நிலவியது. 88.84 சதவீத வாக்குகள் பதிவாகின.

    Advertisement

    இதில், அதிமுக சார்பில் போட்டியிட்ட சத்தியபாமா 81,100 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். திமுக சார்பில் போட்டியிட்ட இந்திராணி 64,373 வாக்குகளும்,
    தவெக வேட்பாளர் எஸ்.கெளரி சித்ரா 46,438 வாக்குகளும், நாதக வேட்பாளர் பி.திவ்யா 6,026 வாக்குகளும் பெற்றிருந்தார். இந்நிலையில், அதிமுக சார்பில் வெற்றி பெற்ற சத்தியபாமா தனது பதவியை ராஜினாமா செய்துதார்.

    இதைத்தொடர்ந்து, தவெகவில் இணைந்தார். இதனால், தற்போது தாராபுரம் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. கடந்த தேர்தலில் அதிமுக சார்பில் போடடியிட்ட சத்தியபாமா, தற்போது தவெக வேட்பாளராகப் போட்டியிடவுள்ளார். திமுக சார்பில் சுகன்யா, அதிமுக சார்பில் க.பானுமதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் லட்சுமணன், நாம் தமிழர் கட்சி சார்பில் கார்த்திகா ஆகியோர் இடைத்தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

    Advertisement

    திமுக 900 கோடி விவகாரம்

    தாராபுரம் தொகுதியில் நாதக சார்பில் போட்டியிடும் கார்த்திகாவை ஆதரித்து சீமான் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, சீமான் பேசியாதவது: ஒரு வாய்ப்பை எங்களுக்கு கொடுத்துப் பாருங்கள். தாராபுரம் சட்டமன்ற உறுப்பினராக எங்கள் வேட்பாளரை சட்டசபைக்கு அனுப்புங்கள். தாராபுரம் சட்டமன்ற உறுப்பினர் என்ற பெருமையை அவர் சேர்ப்பார். நாதக சார்பில் போட்டியிடும் கார்த்திகா கேட்கும் கேள்விகளுக்கு ஒருவரிடம் கூட பதில் இருக்காது.

    சட்டசபையில் உள்ள யாராவது ஒருவராவது அறிவுப்பூர்வமாக இருக்கிறார்களா. உதயநிதியை கைது செய்ததற்கு, சட்டசபையில் ஒருவர் 3 மணி நேரம் கழிவறையில் இருந்தவர் தானே என்கிறார். அதில் ஒருவராவது கரூர் சம்பவத்திற்குப் பிறகு 3 மாதம் கழிவறையில் இருந்தது யார் என்று கேட்டிருக்க வேண்டுமா இல்லை. அதைப் பேசுவதற்கு அறிவில்லை. ஆதவ் அர்ஜூனா பேசும்போது, லாட்டரி லாட்டரி என்று சொல்கிறீர்களே, 900 கோடியை வாங்கினீர்களே என்று கூறுகிறார்.

    Advertisement

    எல்லோருக்கும் பங்கு

    அதற்கு பதிலளித்துப் பேசிய உதயநிதி, உங்கள் மாமா தான் கொடுத்தார் என்கிறார், வாங்கியது உங்கள் அப்பா தான் என்கிறார் ஆதவ் அர்ஜூனா. சட்டசபையில் ஒருவர் கூட எழுந்து, 900 கோடியை தனியார் முதலாளி எதற்கு அரசாங்கத்திடம் கொடுத்தீர்கள், எதற்கு வாங்கினீர்கள் கேள்வி எழுப்பவில்லை. ஏனென்றால் அங்குள்ள அனைவருமே அதனை வாங்கியுள்ளார்.

    எந்தப் பதவியிலும் இல்லாத நீங்கள் எதற்கு 900 கோடி கொடுத்தீர்கள். எந்தக் கட்சியில் இப்போது பொதுப் பணித் துறையில் அமைச்சராக இருக்கிறீர்கள். இந்தக் கட்சிக்கு எவ்வளவு கொடுத்தீர்கள் என்று கேட்க வேண்டுமல்லவா. இந்தக் கேள்விகளை சட்டசபையில் கேட்க வேண்டும் என்றால் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை சட்டசபைக்கு அனுப்ப வேண்டும் என்று பேசினார்.

    English Summary

    During his Dharapuram by-election campaign, Seeman questioned the alleged Rs 900 crore issue while referring to remarks involving Udhayanidhi Stalin.