தாராபுரத்தில் நாதக பேனர் அகற்றம்.. காவல் நிலையத்தை முற்றுகையிட்ட தம்பிகள்! பின்னணியில் நடந்தது என்ன?

  • திருப்பூர்: தாராபுரம் தொகுதியில் நாதக சார்பாக வைக்கப்பட்ட பேனரை அனுமதியின்றி வைக்கப்பட்டதாக கூறி போலீசார் அகற்றினர். இதனால் ஆவேசம் அடைந்த நாம் தமிழர் கட்சியினர் காவல் நிலையம் முன்பு திரண்டு போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் நாதக மற்றும் போலீசார் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    Advertisement

    தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6ஆம் தேதி நடக்கவுள்ளது. இந்த இடைத்தேர்தலில் தவெக, திமுக, அதிமுக, நாதக மற்றும் கம்யூனிஸ்ட்டுகள் வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். நாதக சார்பாக மதுராந்தகம் தொகுதியில் ஜானகிராமனும், தாராபுரம் தொகுதியில் கார்த்திகாவும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    Advertisement

    கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அக்கட்சியின் வேட்பாளர்களுக்காக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். திமுக, அதிமுகவை விடவும் தவெகவை சீமான் தீவிரமாகவே அட்டாக் செய்து வருகிறார். அது சாமானிய மக்கள் மத்தியில் எடுபடுகிறது. இந்த நிலையில் தாராபுரம் தொகுதியில் நாதக சார்பாக பேனர் ஒன்று வைக்கப்பட்டிருக்கிறது.

    அந்த பேனர் அனுமதியின்றி வைக்கப்பட்டதாக கூறி காவல்துறையினர் அகற்றி இருக்கின்றனர். இதனால் ஆவேசம் அடைந்த நாதகவினர், உடனடியாக அங்கேயே போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து காவல் நிலையத்தை முற்றுகையிட்ட நாதகவினர், காவலர்களுடன் ஆவேசமாக வாக்குவாதம் செய்தனர்.

    Advertisement

    ஒரு கட்டத்தில் நாதக மற்றும் காவலர்கள் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் காவல் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பேனர் அகற்றப்பட்ட போது நாதக நிர்வாகிகள் கேள்வி எழுப்பி இருக்கின்றனர். கேள்வி கேட்ட நாதகவினரை போலீசார் வேனில் ஏற்றி சென்றதால், காவல் நிலையத்தை முற்றுகையிட்டதாக தெரிகிறது.

    English Summary

    Seeman: NTK Cadres Clash With Police in Dharapuram After Removal of Bypoll Campaign Banner