ரொம்ப தவறு விஜய்.. ரொம்ப தவறு! உங்க ஆட்டம் ரொம்ப நாள் நீடிக்காது - நாம் தமிழர் கார்த்திகா சாபம்

  • திருப்பூர்: ''முதல்வர் விஜய் வருகிறார் எனவும், அவர் மட்டும் தான் பரப்புரை செய்ய வேண்டும். வேறு யாரும் பரப்புரை செய்யக்கூடாது என்றும், அந்த வழியிலேயே யாரும் செல்லக்கூடாது என்றும் கைது செய்து அழைத்து வருகின்றனர். ரொம்ப தவறு விஜய்.. ரொம்ப தவறு.. நீங்கள் போடும் ஆட்டம் தமிழ்நாட்டில் ரொம்ப நாள் நீடிக்காது'' என்று தாராபுரம் சட்டசபை தொகுதிக்கான நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா கொந்தளித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

    Advertisement

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டசபை தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் கார்த்திகா என்பவர் வேட்பாளராக போட்டியிட்டுள்ளார். இன்று கடைசி நாள் பிரசாரம் நடந்தது. கார்த்திகா தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

    Advertisement

    இது ஒருபுறம் இருக்க தாராபுரம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும் சத்யபாமாவை ஆதரித்து இன்று முதல்வர் விஜய் ரோடு ஷோ மேற்கொண்டார். விஜய் பயணிக்கும் சாலையில் தாராபுரம் - கரூர் சாலை வீராச்சிமங்கலம் பிரிவு பகுதி வழியாக நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகாவும் சென்று வாக்கு சேகரித்தார்.

    இதனால் ஒரே இடத்தில நாம் தமிழர், தவெக தொண்டர்கள் குவிந்தனர். மாறி மாறி கோஷமிட்டனர். பிரசார வாகனத்தின் மீது ஏறி நின்ற நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா, தன் கட்சி கொடியை எடுத்து சுற்றினார்.

    அப்போது, தவெகவினர் தொடர்ச்சியாக டிவிகே டிவிகே என கோஷமிட்டனர். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

    Advertisement

    இதையடுத்து போலீசார் வேட்பாளர் கார்த்திகாவை அங்கிருந்து வெளியேற்ற முயன்றனர். இதற்கு நாம் தமிழர் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து நாம் தமிழர் கட்சியினர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா உள்பட அனைவரையும் போலீசார் குண்டு கட்டாக கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

    காவல் துறையின் வாகனத்தில் செல்லும்போது நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா செல்போனில் பேசி வீடியோ வெளியிட்டார். அதில், ''அனைவருக்கும் வணக்கம்.. தாராபுரம் சட்டசபை தொகுதியில் இறுதி நாள் பரப்புரை மேற்கொண்டோம். முதல்வர் விஜய் வருகிறார் என்று அவர் மட்டும் தான் பரப்புரை செய்ய வேண்டும். வேறு யாரும் பரப்புரை செய்யக்கூடாது என்றும், அந்த வழியிலேயே யாரும் செல்லக்கூடாது என்றும் கைது செய்து அழைத்து வருகின்றனர்.

    Advertisement

    பாருங்கள் எங்களின் உறவுகள் 3 வாகனத்தில் வந்து கொண்டிருக்கிறார்கள். 200 பேர் கைதாகி உள்ளோம். இது அராஜகம் இல்லையா? ஜனநாயகமா?. இங்கு 22 பேர் போட்டியிடுகிறோம். நானும் போட்டியிடுகிறேன். உங்களை எந்த விதத்தில் நாங்கள் தொந்தரவு செய்தோம். விஜய்யை நாங்கள் ஒரு ஆளாகவே பார்க்கவில்லை.

    எங்களால் உங்களுக்கு என்ன பிரச்சனை வந்தது? பாதுகாப்பு குறைபாடு வந்ததா? எங்களை பார்த்து ஏன் பயப்படுகிறீர்கள்? ரொம்ப தவறு விஜய்.. ரொம்ப தவறு.. நீங்கள் போடும் ஆட்டம் தமிழ்நாட்டில் ரொம்ப நாள் நீடிக்காது'' என்று கொந்தளித்துள்ளார்.

    English Summary

    Dharapuram Assembly By Election: Naam Tamilar candidate Karthika says that,"They are arresting and detaining people, claiming that Chief Minister Vijay is arriving and that only he is permitted to campaign-insisting that no one else should campaign or even travel along that route. This is very wrong, Vijay... very wrong. The antics you are engaging in will not last long in Tamil Nadu,".