திருப்பூர் ஏட்டு.. ரவுடி மனைவியிடம் முத்தம் கேட்டு தினமும் 30 கால்! சிக்கியது எப்படி தெரியுமா?

  • திருப்பூர்: திருப்பூரில் ரவுடி ஒருவரின் மனைவி திடீரென மாயமானதால் அதிர்ச்சியடைந்த கணவர், போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அந்த புகார் தொடர்பாக பெண்ணின் செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்த போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.. இது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது.. ஆனாலும், இந்த விவகாரம் எப்படி வெளியே வந்தது?

    Advertisement

    திருப்பூர் மாவட்டம் மங்கலம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அவரை சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் பட்டியலில் சேர்த்து போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்துள்ளனர்.

    Advertisement

    திருப்பூர் ஏட்டு

    அந்த நபருக்கு கல்யாணமாகி ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரது மனைவி திடீரென மாயமாகியுள்ளார். சொந்தக்காரர்கள் வீடுகள் உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதனால் செய்வதறியாது தவித்த கணவர், மங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் தனது மனைவியைக் கண்டுபிடித்து தருமாறு புகார் அளித்துள்ளார். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கினர்.

    செல்போன் ஆய்வு

    மாயமான பெண்ணை கண்டுபிடிப்பதற்காக அவரது செல்போன் நம்பரை போலீசார் ஆய்வு செய்தனர். செல்போன் டவர் லொகேஷன் மூலமாகவும் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த பெண்ணின் செல்போனுக்கு தொடர்ந்து பலமுறை அழைப்புகள் வந்திருப்பது தெரியவந்தது.

    Advertisement

    குறிப்பாக போலீஸ்காரர் ஒருவர் அந்த பெண்ணிடம் தினமும் பலமுறை செல்போனில் தொடர்புகொண்டு பேசியிருப்பதைப் பார்த்து போலீசார் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து அந்த போலீஸ் குறித்தும், பெண்ணுடன் அவர் பேசியது குறித்தும் விசாரணை நடத்தினர். அப்போதுதான் அந்த அதிர்ச்சி தகவல் வெளியானது.

    முத்தம் கேட்டு தொல்லை

    அதாவது, ரவுடி கணவனை கண்காணிக்க வேண்டும் என்று சொல்லி, அவரது மனைவியிடம் அறிமுகமாகி செல்போன் நம்பரை வாங்கியிருக்கிறார் நல்லூர் காவல் நிலைய ஏட்டு அலெக்ஸ் பாண்டியன். ஆரம்பத்தில் கணவரை கண்காணிப்பதற்காக அந்த பெண்ணிடம் அறிமுகமான அவர், நாளடைவில் அவருக்கு தொல்லை கொடுக்க தொடங்கியுள்ளார்.

    Advertisement

    தினமும் அந்த பெண்ணுக்கு 30 முறைக்கு மேல் செல்போனில் அழைத்து பேசியுள்ளார். குறிப்பாக வாட்ஸ் அப் மூலம் வீடியோ கால் செய்து, தனக்கு ஒரு முத்தம் வேண்டும் என்று கேட்டு அடம்பிடித்தாராம்.

    அதுமட்டுமல்லாமல், அந்த பெண்ணிடம் ஆபாசமாகப் பேசி தனது ஆசைக்கு இணங்குமாறு மனரீதியாக தொடர்ந்து அழுத்தம் கொடுத்தும் வந்துள்ளார்.. ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 30 முறைக்கும் மேலாக வீடியோ காலில் அழைத்தும் தொந்தரவு செய்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    தலைமறைவு ஏன்?

    இந்த தொல்லையை தாங்க முடியாமல்தான் அந்த பெண் வீட்டை விட்டு வெளியேறி தலைமறைவானாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏட்டு தொந்தரவு காரணமாக அவர் பயத்திலும் மன உளைச்சலிலும் வீட்டை விட்டு சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை இப்போது நடைபெற்று வருகிறது.

    Advertisement

    அதே நேரத்தில், பெண் மாயமானதற்கு இதுதான் காரணமா அல்லது இதன் பின்னணியில் வேறு ஏதேனும் அசம்பாவிதம் நடந்துள்ளதா என்பதையும் காவல்துறையினர் விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.. மேலும், அவருக்கு எந்த மாதிரியான பாலியல் தொல்லைகள் கொடுக்கப்பட்டன என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    ஆயுதப்படைக்கு மாற்றம்

    இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட ஏட்டுவின் செயல்பாடுகள் குறித்த அனைத்து ஆதாரங்களுடன் விரிவான விசாரணை அறிக்கை திருப்பூர் மாநகர காவல் ஆணையர் ராஜேஸ்வரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    அந்த அறிக்கையைப் பரிசீலித்த காவல் ஆணையர், குற்றச்சாட்டுக்கு உள்ளான ஏட்டை உடனடியாக பணியில் இருந்து விடுவித்து ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார். மேலும், அவர் மீது துறைரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    Advertisement

    குற்றவாளிகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய காவலரே, கண்காணிப்பில் இருந்த நபரின் மனைவியிடம் முத்தம் கேட்டு வீடியோ காலில் தொந்தரவு செய்ததாக எழுந்துள்ள புகார் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே மாயமான பெண்ணை கண்டுபிடிக்கும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது..!!

    English Summary

    Tiruppur Head Constable Asked Rowdy's Wife for a Kiss and Called 30 Times Daily: How Was He Caught?