திருப்பூர் லாட்ஜில் ஜாலி டைம்! பணம் தந்த மறு நிமிடமே மாறிய டோன்.. பறிபோன அப்பாவி தொழிலாளி வாழ்க்கை

  • திருப்பூர்: திருப்பூர் மேட்டுப்பாளையம் பகுதியில் பெண்களைக் காட்டி ஆன்லைன் மூலம் பண மோசடி செய்த 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.. இவர்களிடம் இருந்து பல செல்போன்கள் மற்றும் சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.. திருப்பூரைச் சேர்ந்த ஒரு பின்னலாடை நிறுவன தொழிலாளியை ஏமாற்றிப் பணம் பறித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.. என்ன நடந்தது?

    Advertisement

    பாதிக்கப்பட்ட 28 வயதான அந்த இளைஞர் மேட்டுப்பாளையம் பகுதியில் வசித்து வருகிறார்.. இவர் அங்குள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

    Advertisement

    திருப்பூர் ஆன்லைன் மோசடி

    இவருடைய மொபைல் எண்ணிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு மெசேஜ் வந்துள்ளது.. அதில், திருப்பூரில் உள்ள சில லாட்ஜ்களில் பெண்கள் தங்கியிருப்பதாகவும், ஆன்லைனில் பணம் செலுத்தினால் அவர்களைச் சந்திக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது.. இதனை நம்பிய அவர், அந்த மெசேஜில் இருந்த லிங்க் மூலமாக அந்த எண்ணை தொடர்பு கொண்டுள்ளார்..

    அப்போது மறுமுனையில் பேசிய நபர், இளைஞரின் வாட்ஸ்அப் நம்பருக்கு சில பெண்களின் போட்டோக்களை அனுப்பி வைத்துள்ளார்.. மேலும், திருப்பூர் நகரில் உள்ள சில விடுதிகளின் பெயர்களையும் குறிப்பிட்டுள்ளார்..

    Advertisement

    தொடர்ந்து பணப் பரிவர்த்தனைக்காக ஒரு கியூஆர் கோடை அனுப்பி, அதில் முதற்கட்டமாக 4000 ரூபாயைச் செலுத்துமாறு கேட்டுள்ளார்.. அவரும் அந்த கியூஆர் கோடை ஸ்கேன் செய்து 4000 ரூபாயை ஆன்லைன் மூலம் அனுப்பியுள்ளார்..


    2000 ரூபாய் பேரம்

    பணம் அனுப்பிய பிறகு, அந்த நபர் மீண்டும் இவரைத் தொடர்பு கொண்டு, மேலும் 2000 ரூபாய் அனுப்ப வேண்டும் என்று கேட்டுள்ளார்.. இதனால் சந்தேகமடைந்த வாலிபர், தான் ஏமாற்றப்படுவதை உணர்ந்து மேற்கொண்டு பணம் அனுப்ப மறுத்துவிட்டார்.. உடனடியாக இந்த ஆன்லைன் மோசடி குறித்து திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார்..

    Advertisement

    இதன் பேரில் வழக்குப்பதிவு செய்த விசாரணை அதிகாரிகள் தீவிர சோதனையில் இறங்கினர்.. மோசடி கும்பல் பயன்படுத்திய மொபைல் எண்கள் மற்றும் வங்கி கணக்குகளைக் கண்காணித்தனர்.. செல்போன் டவர் லொகேஷன் அடிப்படையில் போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு இடங்களில் பதுங்கியிருந்த 4 பேரை மடக்கிப் பிடித்தனர்..

    உல்லாச வாழ்க்கை - சிக்கிய 4 பேர்

    கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த 41 வயதான வெற்றிவேல், 24 வயதான சக்தி விக்னேஸ்வரன், பொள்ளாச்சியைச் சேர்ந்த 35 வயதான கோகுல்குமார் மற்றும் 26 வயதான அருண் பிரசாத் என்பது தெரியவந்தது.. இவர்களில் வெற்றிவேல் ஹோட்டல் ஊழியராகவும், கோகுல்குமார் இன்ஜினியரிங் பட்டதாரியாகவும், அருண் பிரசாத் பெயிண்டராகவும் வேலை பார்த்து வந்துள்ளனர்..

    Advertisement

    இவர்கள் 4 பேரும் சேர்ந்து போலி சோசியல் மீடியா கணக்குகள் மற்றும் ஆன்லைன் தளங்கள் மூலமாகத் திட்டமிட்டு இந்த மோசடியை நடத்தியதை ஒப்புக்கொண்டனர்.. இவர்களிடம் இருந்து மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட மொபைல் போன்கள் மற்றும் சிம் கார்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்..

    பெருகும் ஆன்லைன் மோசடிகள்

    இந்த 4 பேரும் சேர்ந்து திட்டமிட்டு ஆன்லைன் மூலம் நிறைய பேரிடம் இதே முறையில் பண மோசடி செய்துள்ளனர் என்பதை போலீஸ் விசாரணையில் கண்டறிந்தனர்.. ஒரு பொறியியல் பட்டதாரியே இந்த மோசடி கும்பலில் இணைந்திருந்தது என்பது ரொம்ப வருத்தமான விஷயம்..

    QR கோடு மூலம் பணம் பறிக்கும் இந்த வகை ஆன்லைன் மோசடிகள் தமிழகம் முழுவதும் அதிகரித்து வருகின்றன.. செல்போனில் வரும் அனைத்து குறுஞ்செய்திகளையும் நம்ப வேண்டாம் என்று போலீசார் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.. இதுபோன்ற ஆசை காட்டி ஏமாற்றும் செய்திகளுக்கு பதிலளிக்காமல் புகார் அளிப்பதே சரியான வழி என்று கூறுகிறார்கள்..!!

    English Summary

    Tiruppur Lodge Luxury Trap! The Tone Changed Minutes After Payment.. Innocent Worker Falls Into Online Scam Network