திருப்பூரில் 7 மூட்டை தபால்களை டெலிவரி செய்யாமல் பதுக்கிய போஸ்ட்மேன்.. இறுதியில் ட்விஸ்ட்

  • திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில், பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய முக்கிய தபால்களை விநியோகிக்காமல், தன் வீட்டிலேயே தபால்காரர் ஒருவர் பதுக்கி வைத்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து புகாரின் பேரில் வீட்டில் சோதனையிட்டபோது, தபால்கள் நிரம்பிய ஏழு மூட்டைகள் இருப்பதை கண்டு தபால்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். தபால்காரரின் அலட்சியத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் கோபம் அடைந்துள்ளனர், சம்பந்தப்பட்ட தபால்காரர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    Advertisement

    திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தைச் சேர்ந்த போஸ்ட்மேன் செந்தில்குமார் என்பவர், பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டிய கடிதங்கள் மற்றும் தபால்களை டெலிவரி செய்யாமல் நீண்ட நாட்களாகத் தனது வீட்டில் பதுக்கி வைத்திருந்ததாக தகவல்கள் வெளியாகி அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Advertisement

    இதையடுத்து இந்த விவகாரம் திருப்பூர் மாவட்ட தபால் துறையின் உயர் அதிகாரிகள் வரை போனது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தபால் துறை திருப்பூர் மாவட்ட தபால் துறையின் உயர் அதிகாரிகள் , போஸ்ட்மேன் செந்தில்குமார் வீட்டில் மூட்டை மூட்டையாகக் குவிந்து கிடந்த 7 மூட்டை தபால்களை அதிரடியாக மீட்டனர். மீட்கப்பட்ட தபால்கள் அனைத்தும் ஆட்டோ மூலம் தபால் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டன. பொதுமக்களின் முக்கிய ஆவணங்கள் அடங்கிய தபால்களை விநியோகிக்காமல் பதுக்கிய போஸ்ட்மேனின் இந்த செயலால் அப்பகுதியில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே சம்பந்தப்பட்ட தபால்காரர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

    Advertisement

    போஸ்ட்மேன் செந்தில்குமார் மீது தபால் துறை ரீதியாகவும், சட்ட ரீதியாகவும், மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க முடியும். தபால் துறையில் பணிபுரியும் ஊழியர்கள் பொதுமக்களின் நம்பிக்கைக்குரியவர்கள் ஆவர். அதை மீறி 7 மூட்டை தபால்களைப் பதுக்கியது நிச்சயம் மிகப்பெரிய குற்றமாகும். சம்பந்தப்பட்ட போஸ்ட்மேன் செந்தில்குமாருக்கு அபராதத்துடன் கூடிய சிறை தண்டனை விதிக்க வாய்ப்பு உள்ளது.

    ஏடிஎம் கார்டுகள், பாஸ்போர்ட், அரசு வேலைவாய்ப்பு ஆணைகள் போன்ற முக்கிய ஆவணங்கள் இந்தத் தபால்களும் விநியோகிக்கப்படாமல் உள்ளதால், அரசு ஊழியராக இருந்து, தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பொதுமக்களின் சொத்தை (தபால்களை) துரோகம் செய்து பதுக்கியதற்காக நம்பிக்கை மோசடி வழக்கு பதிவு செய்ய முடியும், அதேபோல் பொதுமக்களின் கடிதங்களைச் சட்டவிரோதமாகத் தனது தனிப்பட்ட இடத்தில் மறைத்து வைத்ததற்காக அரசு ஆவணங்களைச் சேதப்படுத்துதல்/திருடுதல் பிரிவில் போலீசார் வழக்கு பதிவு செய்ய முடியும்.

    Advertisement

    அதேபோல் முதற்கட்டமாக அந்த தபால் அதிகாரி பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படுவார். துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு, குற்றம் நிரூபிக்கப்பட்டால் , அவர் நிரந்தரமாக வேலையிலிருந்து நீக்கப்படுவார். வேலையில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது. அப்படி நடந்தால், அவரது பிஎஃப் , கிராஜுவிட்டி போன்ற எதிர்காலப் பணப்பலன்கள் மற்றும் ஓய்வூதியம் ஆகிய எதுவும் கிடைக்காது.

    English Summary

    A postman near Kangeyam in Tiruppur district hoarded seven sacks of letter at his home instead of delivering them.