திருப்பூர்: திருப்பூர் பெண்ணை கோவை ஜோதிடர் ஒருவர் நாசம் செய்துள்ளார்.. பணத்தையும் பறித்துள்ளார்.. திருமணம் செய்து கொள்வதாக கூறி நம்ப வைத்து கழுத்தை அறுத்துள்ளார்.. இதனால் கொந்தளித்து போன பாதிக்கப்பட்ட பெண், போலீஸ் வரை சென்றுள்ளார்.. இந்த விவகாரம் இப்போது முதலமைச்சர் அலுவலகம் வரையும் சென்றிருக்கிறது.. திருப்பூர், கோவை மாவட்டத்தை அதிர வைத்த இந்த சம்பவத்தை சுருக்கமாக இங்கே பார்ப்போம்..!!
திருப்பூரில் வசித்து வரும் அந்த இளம்பெண்ணுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.. எனவே, விரைவில் திருமணம் நடைபெற வேண்டும் என்பதற்காக அவரது பெற்றோர் பல வருடங்களாகவே வரன் தேடி வந்துள்ளனர்.
இதற்காகவே பல கோவில்களுக்கு சென்று சிறப்பு பரிகாரங்களை செய்ததுடன், பல்வேறு ஜோதிடர்களிடமும் சென்று ஜாதகத்தை காட்டி வந்துள்ளனர். ஆனாலும் தொடர்ந்து வரன் எதுவும் அமையாததால் அந்தப் பெண்ணும் அவரது குடும்பத்தினரும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இப்படிப்பட்ட சூழலில்தான், சுமார் 3 ஆண்டுகளுக்கு முன்பு நண்பர் ஒருவரின் மூலம், கோவை மாவட்டம் நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த ஜோதிடர் ஒருவர் அந்த பெண்ணை சந்தித்துள்ளார். அந்த ஜோதிடரிடம் தனது ஜாதகத்தைக் காட்டியபோது, விரைவில் நல்ல விதமாக திருமணம் கைகூடும் என்றும், அதற்கு சில குறிப்பிட்ட பரிகாரங்களை ரகசியமாக செய்ய வேண்டும் என்றும் ஜோதிடர் தெரிவித்துள்ளார். ஜோதிடரின் வார்த்தைகளை அந்த பெண்ணும் முழுமையாக நம்பியிருக்கிறார்.. இதையடுத்து, பரிகாரம் செய்வதற்காக, ஜோதிடர் பலமுறை அப்பெண்ணை தனியாக அழைத்து சந்தித்துள்ளார். நாளடைவில் அந்த பெண்ணிடம் ஆசை வார்த்தைகளை சொல்லி, "நானே உன்னை கல்யாணம் செய்து கொள்கிறேன்" என்று உறுதி அளித்துள்ளார். இதையும் அந்த பெண் முழுமையாக நம்பியிருக்கிறார்.. இந்த நம்பிக்கையை ஜோதிடர் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, அந்தப் பெண்ணை பலமுறை பாலியல் ரீதியாக துன்புறுத்தினாராம். பிறகு பல்வேறு காரணங்களை சொல்லி, அந்த பெண்ணிடமிருந்து ஜோதிடர் பணத்தையும் அடிக்கடி வசூலித்துள்ளார்.. தனக்கு நிறைய கடன் பிரச்சினை உள்ளதாக சொல்லி, ஆரம்பத்தில் பணம் வாங்கியிருக்கிறார்.. அதற்கு பிறகு தனது உறவினர் ஒரு விபத்தில் சிக்கி மருத்துவமனையில் இருப்பதாக சொல்லி, ஒன்றரை லட்சம் அந்த பெண்ணிடமிருந்து வாங்கியுள்ளார். ஆனால் பணத்தை பெற்றுக் கொண்ட பிறகு திடீரென அந்த பெண்ணுடன் பேசுவதையும் ஜோதிடர் முற்றிலுமாக அவாய்டு செய்துள்ளார்.. இதனால் சந்தேகம் அடைந்த அந்தப் பெண் ஜோதிடர் குறித்து, வெளியில் விசாரித்துள்ளார்.. அப்போதுதான், அந்த ஜோதிடருக்கு ஏற்கனவே கல்யாணமாகி மனைவியும் குழந்தைகளும் இருப்பது தெரியவந்தது.. இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண், உடனே இதைபற்றி ஜோதிடரிடம் நியாயம் கேட்டுள்ளார். ஆனால், அந்தப் பெண்ணை ஜோதிடர் மிரட்ட ஆரம்பித்து விட்டாராம்.. "இனிமேல் என்னிடம் வந்து கல்யாண பேச்சை எடுத்தாலோ, கொடுத்த பணத்தை கேட்டாலோ, உன்னை தீர்த்துக் கட்டிவிடுவேன்.. உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் என்னிடம் கஸ்டமராக உள்ளார்.. அவரிடம் சொல்லி உன்னை காலி செய்துடுவேன்" என்று மிரட்டியிருக்கிறார். இதனால் பயந்துபோன அந்தப் பெண், தனது திருமண ஆசையை சூறையாடி, பாலியல் வன்கொடுமை செய்து, பணத்தையும் பறித்த அந்த ஜோதிடர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தனக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கோரி, போலீசில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் நகல்கள் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், திருப்பூர் மற்றும் கோவை மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் முதலமைச்சரின் தனிப்பிரிவு அலுவலகத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. திருமணத் தடை நீங்கப் பரிகாரம் செய்ய சென்ற இடத்தில் ஜோதிடரால் இளம்பெண் ஒருவர் ஏமாற்றப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான இந்த சம்பவம் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. முதல்வர் அலுவலகம் வரை சென்றுள்ள இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா???திருப்பூர் இளம்பெண்
கோவை ஜோதிடர்
ஏகப்பட்ட பணம் வசூல்
முதலமைச்சர் ஆபீஸ் வரை போன புகார்