திருப்பூர் குவார்ட்டர்ஸில் கதறிய போலீஸ் ரஞ்சனி.. உடைந்த பொம்மைகள்.. லாக் ஆன செல்போன்.. என்ன நடந்தது?

  • திருப்பூர்: திருப்பூர் ஆயுதப்படை பெண் போலீஸ் ஏன் இந்த முடிவை எடுத்தார் என்று தெரியவில்லை.. பணியில் சேர்ந்து ஒரு வருடம்தான் ஆகிறதாம்.. வீட்டில் திருமண பேச்சும் நடந்துள்ளது.. வாழ்க்கையை துவங்குவதற்குள் ஏன் இப்படி செய்தார்? என்ற கேள்வி நல்லூர் பகுதி மக்களை துளைத்தெடுத்து வருகிறது.. இது தொடர்பான விசாரணையையும் போலீசார் முன்னெடுத்து வருகிறார்கள். என்ன நடந்தது?

    Advertisement

    திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகாவை சேர்ந்தவர் ராஜா. இவரது 2வது மகள் ரஞ்சனி.. 23 வயதாகிறது.. இவர், தமிழ்நாடு காவல்துறையில் 2022ம் ஆண்டு பணியில் சேர்ந்தார். இப்போது ரஞ்சனி திருப்பூர் மாவட்ட ஆயுதப்படையில் பணியாற்றி வந்தார்.

    Advertisement

    திருப்பூர் பெண் போலீஸ் ரஞ்சனி

    இவர் நல்லூர் அடுத்துள்ள நல்லிகவுண்டன் பாளையத்தில் உள்ள மாவட்ட ஆயுதப்படை போலீஸ் குவார்ட்டஸில் கடந்த 3 வருடங்களாக வசித்து வருகிறார்.. ரஞ்சனி மாநகர ஆயுதப்படையில் பணியாற்றும் காவலர் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், நேற்று காலை ரஞ்சனி வழக்கம்போல் ஆயுதப்படையில் நடக்கும் வருகை அணி வகுப்பில் கலந்து கொண்டார். அதற்குபிறகு ரஞ்சனியின் செல்போனிற்கு ஒரு அழைப்பு வந்தது. அந்த அழைப்பில் பேசிய நபர், ரஞ்சனியை தகாத வார்த்தைகளால் பேசினாராம்.. இதனால், மனமுடைந்த ரஞ்சனி அங்கிருந்து தனது வீட்டிற்கு சென்றுவிட்டார்..

    Advertisement

    திருப்பூர் ரஞ்சனி - டியூட்டி நேரத்தில் வந்த போன்

    டியூட்டி நேரத்தில் திடீரென ரஞ்சனி வீட்டிற்கு வந்துவிடவும், அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், ஏன் என்னச்சு, டியூட்டிக்கு போகலியா? ஏன் வேலைக்கு செல்லாமல் வந்தீங்க என்று கேட்டுள்ளனர்.. அதற்கு ரஞ்சனி பதில் ஏதும் சொல்லாமல் வீட்டிற்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டாராம்.. பிறகு நீண்ட நேரமாகியும் கதவு திறக்காமல் இருந்துள்ளார்.. இதனால் அருகில் வசிப்பவர்கள் கதவை தட்டி திறக்கும்படி சொல்லி உள்ளன்ர்.

    ஆனால், வீட்டிற்குள்ளிரந்து எந்த சத்தமும் வராததால் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், நல்லூர் போலீசார் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ரஞ்சனி வீட்டில் உள்ள ஃபேனில் துப்பட்டாவால் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். இதனால், அதிர்ச்சியடைந்த போலீசார், உடலை மீட்டு போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    Advertisement

    இதுகுறித்து, வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணையும் மேற்கொண்டனர்.. இதில், ரஞ்சனி வழக்கமாக நடக்கும் வருகை அணி வகுப்பில் இருந்தபோது அவரது செல்போனிற்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர் ரஞ்சனியை தகாத வார்த்தைகளால் பேசியதும், அதனால்தான் மனமுடைந்த ரஞ்சனி வீட்டிற்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதும் முதல்கட்டமாக தெரிய வந்தது.

    அறையில் உடைந்த பொம்மைகள்

    அப்படியானால், கடைசியாக ரஞ்சனியுடன் போனில் பேசிய நபர் யார்? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆயுதப்படை பெண் போலீஸ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காவல் துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    போலீசார் சென்றபோது, ரஞ்சனியின் அறை அலங்கோலமாகக் கிடந்ததாம்.. அங்கிருந்த பொம்மைகள் மற்றும் பொருட்கள் உடைக்கப்பட்டிருந்தன. இதனால் அவர் கடும் மன உளைச்சலில் இருந்தது தெரியவந்துள்ளது.

    ரஞ்சனி தன்னுடைய குவார்ட்டஸுக்கு திரும்பி வந்தபோது, யாருடனோ செல்போனில் ஆவேசமாக பேசியபடி வந்தாராம்.. அதற்கு பிறகே தன்னுடைய ரூம் கதவை பூட்டி கொண்டதாக கூறுகிறார்கள்..

    உடனே தன்னுடன் பழகிய பெண் போலீஸ் ஒருவருக்கு தொடர்பு கொண்டு, தற்கொலை செய்யப்போவதாக சொல்லிவிட்டு போனை ஸ்விட்ச் போன் செய்துவிட்டாராம்.. இதனால் பதறிய அந்த பெண் போலீஸ், அக்கம்பக்கத்திலிருந்தவர்களுக்கு தகவல் தந்துள்ளார்.. அதற்கு பிறகே குடியிருப்புவாசிகள் போலீசுக்கு போயிருக்கிறார்கள்.

    Advertisement

    லாக் ஆன செல்போன்

    ரஞ்சனி போலீஸ் வேலையில் சேர்ந்த குறுகிய காலத்தில், சக காவலரை காதலித்துள்ளார்.. இந்த காதல் விவகாரம் இருவரின் வீட்டுக்குமே தெரியவந்துள்ளது.. இதற்கு இவர்களின் பெற்றோர் சம்மதமும் தெரிவித்து விட்டனர்.. தெரிவித்ததால் 2 பேருக்கும் திருமணம் செய்ய இரு வீட்டாரும் பேசி முடித்ததாக கூறப்படுகிறது. அப்படியானால் காதலர்களுக்குள் ஏதாவது கருத்து வேறுபாடு ஏற்பட்டதா? கடைசியாக போனில் பேசியது அந்த காவலரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    எனவே ரஞ்சனியின் செல்போனை ஆய்வு செய்ய போலீசார் முயன்றுள்ளனர்.. ஆனால், ரஞ்சனியின் செல்போன் லாக் ஆகி உள்ளது.. எனவே செல்போன் பூட்டப்பட்டுள்ளதால், நிபுணர்களின் உதவி நாடப்பட்டுள்ளதாம்...!!!

    English Summary

    Tiruppur Woman Constable's Death.. Broken Toys, Mysterious Call & Locked Phone Key to Investigation