சத்தியபாமா விரட்டியடிக்கப்பட்ட தாராபுரம் சின்னபுதூர் கிராமத்தில் தவெக சாதனை.. மிரண்ட அதிமுக, திமுக

  • திருப்பூர்: தாராபுரம் தொகுதியில் தவெக வேட்பாளர் சத்தியபாமா விரட்டியடிக்கப்பட்ட சின்னபுதூர் கிராமத்தில் தவெக அதிக வாக்குகளை பெற்றிப்பது வாக்குச்சாவடிகளை கவனித்ததில் தெரியவந்துள்ளது. தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ஆறாவது சுற்றில் இருந்தே பல்வேறு மாற்றங்கள் நடந்து வருகிறது. முதல் ஐந்து சுற்றில் அதிமுக முன்னிலை விகித்து வந்த நிலையில், அதன்பின்னர் தவெகவே முன்னிலை வகித்து வருகிறது. அதேபோல் அங்கு திமுக மூன்றாம் இடத்தில் இருந்து வந்த நிலையில், இரண்டாம் இடத்திற்கு முன்னேறி உள்ளது. முதல் இடத்தில் இருந்த அதிமுக மூன்றாம் இடத்திற்கு பின்தங்கி உள்ளது.

    Advertisement

    தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடந்து வருகிறது. முன்னதாக தேர்தல் பிரசாரத்தின்போது தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் சத்யபாமாவுக்கு சில ஊர்களில் பிரச்சாரம் செய்யவே கடும் எதிர்ப்பு எழுந்தது. அதிமுகவை விட்டு விட்டு தவெகவில் இணைந்தது ஏன் என்று கேள்வி எழுப்பி அவரை சிலர் விரட்டினார்கள் . அப்படி விரட்டியடிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட 'சின்னபுதூர்' கிராமத்திலேயே தற்போது தவெக மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை பெற்றது வாக்குச்சாவடி பூத் விவரங்களில் தெரியவந்துள்ளது.

    Advertisement

    சின்னபுதூர் பகுதியில் கடந்த மே 4 நிலவரத்துடன் ஒப்பிடும்போது, தவெக வேட்பாளர் சத்யபாமா 1,677 வாக்குகளில் இருந்து 2,884 வாக்குகளாக உயர்ந்து, 1,207 வாக்குகளைக் கூடுதலாகப் பெற்றிருக்கிறார் அதேவேளையில், அங்கு வலுவாக இருந்த அதிமுக 3,888 வாக்குகளில் இருந்து 2,209 வாக்குகளாகக் குறைந்து 1,679 வாக்குகளை இழந்து பெரும் சரிவைச் சந்தித்திருப்பதும் புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளது. திமுகவும் 2,821 வாக்குகளில் இருந்து 2,286 ஆகச் சரிந்து 535 வாக்குகளை பறிகொடுத்துள்ள. நாம் தமிழர் கட்சி 209 வாக்குகளில் இருந்து 240 ஆக உயர்ந்து 31 வாக்குகளையும், சிபிஐ கட்சி புதிதாக 32 வாக்குகளையும் கூடுதலாக பெற்றுள்ளன.

    Advertisement
    மதுராந்தகத்தில் தவெகவிற்கு சாதகமான பாமகவின் நடுநிலை முடிவு.. மங்கலம் கிராமமே சாட்சி

    திமுக மற்றும் அதிமுகவின் வாக்கு வங்கிகளை அதிரடியாகப் பிரித்து சின்னபுதூர் கிராமத்தில் தவெக பெ 1,207 வாக்குகள் அதிகம் பெற்று இருப்பதை தவெகவினர் கொண்டாடுகிறார்கள். தாராபுரம் தொகுதியில் 17 சுற்று முடிவில், தவெக வேட்பாளர் சத்யபாமா 51,253 வாக்குகளைப் பெற்று முதலிடத்தில் இருக்கிறார் இவரைத் தொடர்ந்து திமுக வேட்பாளர் சுகன்யா 42,390 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ளார். 16வது சுற்றைவிட 17வது சுற்றில் சற்றே திமுகவிற்கு வாக்குகள் அதிகம் கிடைத்துள்ளது. எனினும் தவெக வேட்பாளர் சத்யபாமா, திமுகவை விட 8,863 வாக்குகள் வித்தியாசத்தில் கணிசமான முன்னிலையில் உள்ளார். ஆனால் முன்னிலை விகிதம் சற்றே குறைந்துள்ளது.

    Advertisement
    தாராபுரம் இடைத்தேர்தலில் அதிமுகவை முந்திய தவெக.. ஆட்டத்தையே அடியோடு மாற்றிய கோவிந்தபுரம்!

    ஆனால் முதலில் முன்னிலை வகித்த அதிமுக வேட்பாளர் பானுமதி 32,892 வாக்குகளை மட்டுமே பெற்று தொடர்ந்து மூன்றாம் இடத்தில் உள்ளார். தவெக வேட்பாளரை ஒப்பிடும்போது, அதிமுக வேட்பாளர் 18,361 வாக்குகள் பின்னடைவைச் சந்தித்துள்ளார். மேலும், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்த்திகா 4,206 வாக்குகளையும், இடதுசாரி வேட்பாளர் லட்சுமணன் 949 வாக்குகளையும் பெற்றுள்ளனர். தாராபுரம் தொகுதியில் தவெகவின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. மொத்தம் 23 சுற்றுகள் எண்ண வேண்டியுள்ளது.

    English Summary

    An analysis of the polling stations reveals that TVK secured a significant number of votes in Chinnaputhur village—the very place where TVK candidate Sathyabama had been chased away.