திருப்பூர்: தாராபுரம் அருகே கள்ளச்சாராயம் காட்சியை இருவரை கைது செய்த போலீஸார், அவர்களிடம் இருந்து மின்சார ஸ்கூட்டர் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மருதுறை கிராமம், அரண்மனைக்காடு பகுதியில் கள்ளச்சாராயம் தயாரித்து விற்பனைக்காக வைத்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, தாராபுரம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் ஆய்வாளர் உதயச்சந்திரன் துணை ஆய்வாளர் துறை பாபு அப்பகுதிக்குச் சென்று சோதனை மேற்கொண்டனர்.
இந்தச் சோதனையில் கள்ளச்சாராயம் வைத்திருந்ததாக ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே உள்ள புதுவலசு பகுதியைச் சேர்ந்த சரவணன் (55), திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே உள்ள மருதுறை பகுதியைச் சேர்ந்த பூபதி (41) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 9 லிட்டர் கள்ளச்சாராயம், 65 லிட்டர் சாராய ஊறல், ஒரு சில்வர் தட்டு, பிளாஸ்டிக் குடம், அலுமினிய பாத்திரம், சமையல் எரிவாயு சிலிண்டர், இரும்பு அடுப்பு உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், மின்சார ஸ்கூட்டர் ஒன்றும், மூன்று செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து தாராபுரம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாராபுரம் சுற்று வட்டாரப் பகுதியில் தொடர்ந்து சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காட்சி வருவது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.9 லிட்டர் கள்ளச்சாராயம், ஊறல் பறிமுதல்
இ-ஸ்கூட்டர், செல்போன்கள் பறிமுதல்