திருப்பூர்: 10 நாளில் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் ஓட்டு கேட்டு வரும் அவருக்கு எவ்வளவு கொழுப்பு இருக்கும்? அவருக்கு அவ்வளவு இருந்தால், உங்களுக்கு எவ்வளவு இருக்கும் என்பதை நீங்கள் காட்டுவீர்களா? என தாராபுரம் வாக்காளர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார் எதிர்க் கட்சித் தலைவரான உதயநிதி ஸ்டாலின், மேலும்,
தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் அக்டோபர் 6-ந் தேதி நடைபெற உள்ள நிலையில், தி.மு.க., அ.தி.மு.க., தவெக, நாம் தமிழர் கட்சி மற்றும் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதனால் தொகுதியில் தேர்தல் பிரசாரம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.
இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தனி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வழக்கறிஞர் சுகன்யாவை ஆதரித்து, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கொளத்துப்பாளையம் பேரூராட்சி பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் மற்றும் தவெக வேட்பாளர் சத்தியபாமா ஆகியோரை விமர்சித்து உதயநிதி ஸ்டாலின் பேசினார். அவர் பேசுகையில், "10 நாளில் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் ஓட்டு கேட்டு வரும் அவருக்கு எவ்வளவு கொழுப்பு இருக்கும்? அவருக்கு அவ்வளவு இருந்தால், உங்களுக்கு எவ்வளவு இருக்கும் என்பதை நீங்கள் காட்டுவீர்களா? முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்னும் முதலமைச்சர் ஆனதையே நம்பவில்லை. 'நான் முதலமைச்சர் ஆகக்கூடாதா?' என்று கேட்கிறார். அவர் ஏற்கனவே முதலமைச்சர்தானே? நேற்று வரை அவர் முதலமைச்சராக ஆனதை அவரே நம்பவில்லை. ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் மக்களின் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். சட்டமன்றத்தில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு உரிய பதில் அளிப்பதுடன், பொதுமக்களின் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்ற வேண்டும். ஆனால், டெலிவரி பாய் மாதிரி எல்லாருக்கும் இவரே SOFA கொண்டு போய் டெலிவரி பண்ணாரு.. எல்லாரும் LIVEல பார்த்தீங்கல்ல. அடுத்த கட்சி எம்.எல்.ஏ.க்களை Whole Sale-ல் கொள்முதல் செய்யும் Sofa Model முதலமைச்சருக்கு தாராபுரம் தொகுதி மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும். ராஜினாமா செய்தவருக்கு மீண்டும் வாக்களித்தால் உங்களுக்கு குரல் கொடுப்பார்களா? கொடுக்கமாட்டார்கள். பிக்பாஸ் பார்த்தீர்களா? சட்டமன்றத்தில் ஒரு பிக்பாஸ் நடைபெற்றது. நாங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டோம் தெரியுமா.. மக்கள் குறைகளை தான் பேரவையில் பேசுவார்கள். ஆனால் ஆளும் கட்சி முதலமைச்சர் பேசுவதே இல்லை. இப்போ ஜெயிச்சிட்டு மறுபடியும் வேறு கட்சியில் போய் சேர மாட்டாங்கன்னு என்ன நிச்சயம்? இதைவிட நல்ல ஆஃபர் கொடுத்தா போயிடுவாங்க.. இதுக்காகவே நீங்க தோக்கடிக்கணும். ஒரு எம்எல்ஏ வேலை இல்லை என்கிறாா், ஒரு எம்எல்ஏ காா் இல்லை என்கிறாா், ஒரு எம்எல்ஏவோ காதல் தோல்வி என்கிறாா். எம்எல்ஏ காதல் தோல்வி என பேசிய உடன் நான் நினைத்தேன், இதற்கெல்லாமா முதல்வா் திட்டம் வைத்திருக்கிறாா் என்று? 1989 சட்டமன்றத் தேர்தலில் திமுக வென்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக பதவியேற்ற மேடையிலேயே, ஒரே கையெழுத்தில் விவசாயிகளின் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்தார். கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் சொன்ன வாக்குறுதியை சரியாக நிறைவேற்றியுள்ளனர். ஆனால், விவசாயிகளின் பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வோம் எனக்கூறி ஏமாற்றியுள்ளது தவெக அரசு. சட்டசபையில் பிடித்து வைத்த பிள்ளையார் போல முதலமைச்சர் அமர்ந்திருப்பார். மதுராந்தகத்தில் 30 நிமிடம் பேசிய முதலமைச்சர் 32 முறை தி.மு.க. பெயரை உச்சரித்துள்ளார். தமிழகத்தில் தொடரும் மின்வெட்டை போக்க தவெக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. முதலமைச்சர் விஜய்யின் பெரம்பூர் தொகுதியிலேயே மின்வெட்டு ஏற்படுகிறது. தாராபுரம் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் எஸ்.சுகன்யா நன்கு படித்தவர். சட்டமன்றத்தில் இந்தப்பகுதி மக்களுக்காக குரல் கொடுக்கக் கூடியவர். அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்" என்றார்.உதயநிதி ஸ்டாலின்
ஜோசப் விஜய்
தாராபுரம் சத்யபாமா
ஆளும் கட்சி
திமுக
மு.க.ஸ்டாலின்
தாராபுரம் இடைத்தேர்தல்