Beach Facing சட்டமன்றம் வேண்டும்னு ஜோசியர் சொல்லியிருப்பார்.. தாராபுரத்தில் உதயநிதி ஓபன் டாக்!

  • தாராபுரம்: திமுக கஜானா காலி என்று சொன்ன முதல்வர் விஜய், தற்போது ரூ.1,200 கோடிக்கு Beach Facing புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். Beach Facing தலைமைச் செயலகம் வேண்டும் என்று ஜோசியர் கூறி இருப்பார் என்று கூறிய உதயநிதி ஸ்டாலின், அனைத்து எம்எல்ஏ-க்களுக்கும் புதிய கார் வேறு அறிவித்திருக்கிறார்கள் என்றும் சாடியுள்ளார்.

    Advertisement

    தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. 4 மாத தவெக ஆட்சியில் செய்த தவறுகளை எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக ஆதாரங்களுடன் மக்கள் முன்னிலையில் எடுத்து வைக்கின்றன. குறிப்பாக கஜானா காலி என்று அறிவித்துவிட்டு எம்எல்ஏ-க்களுக்கு கார் வழங்கும் விவகாரம், புதிய தலைமைச் செயலகம் விவகாரம் நன்றாக எடுபடுகின்றன.

    Advertisement

    இன்று தாராபுரம் தொகுதியில் திமுக வேட்பாள்ர் சுகன்யாவை ஆதரித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், முதல்வராக பதவியேற்ற போது விஜய் என்ன சொன்னார்.. திமுக கஜானாவை முழுமையாக துடைத்து வைத்துவிட்டு சென்றுவிட்டார்கள் என்று சொன்னாரா, இல்லையா?

    ஆனால் இன்று ரூ.1,200 கோடி செலவில் புதிய தலைமைச் செயலகம் கட்டும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதுவும் கடற்கரையை பார்த்த மாதிரி தலைமைச் செயலகம் கட்டுகிறார்கள்.. யார் சொல்லி இருக்கிறார்? ஜோசியர் சொல்லி இருப்பார்.. கடலை பார்த்தவாறு இருக்க வேண்டும் என்று.. அதேபோல் அனைத்து எம்எல்ஏ-க்களுக்கும் புதிய கார் வேறு அறிவிக்கிறார்கள்.

    Advertisement

    இந்த அறிவிப்புக்கு பின் விவசாய கடனை தள்ளுபடி செய்யும் வரை திமுக எம்எல்ஏ-க்களுக்கு கார் தேவையில்லை என்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்பின்னர் தான் கம்யூனிஸ்ட், பாமக உறுப்பினர்களும் அறிவித்தார்கள். நான் கேட்கிறேன்.. இதற்கெல்லாம் எங்கிருந்து பணம் வந்தது? இதற்கு பதில் சொல்ல மாட்டார்கள்.

    அதேபோல் சட்டம் ஒழுங்கு எவ்வளவு மோசமான நிலைமையில் உள்ளது. சட்டம் ஒழுங்கு எந்த அளவிற்கு கேடாக இருக்கிறது என்பதும் உங்களுக்கே தெரியும் என்று கூறியுள்ளார். உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய பிரச்சாரத்தில் விஜய்யின் ஜோசிய நம்பிக்கை மற்றும் தவெகவின் வாக்குறுதிகளை குறி வைத்து பேசி இருப்பது திமுகவினர் மத்தியில் கவனத்தை பெற்றுள்ளது.

    English Summary

    Udhayanidhi Stalin: Udhayanidhi Stalin Mocks CM Vijay Over ₹1,200 Cr Beach-Facing Secretariat Plan