திருப்பூர் ரஞ்சனி கடைசியாக யாரிடம் பேசினார் தெரியுமா? போன் ஹிஸ்டரியை பார்த்து கிறுகிறுத்த போலீஸ்

  • திருப்பூர்: திருப்பூர் பெண் போலீஸ் ரஞ்சனி ஏன் தற்கொலை செய்து கொண்டார்? வழக்கம் போல டியூட்டிக்கு போனவர் ஏன் சிறிது நேரத்திர் வீட்டுக்கு திரும்பினார் கடைசியாக அவர் யாருடன் பேசினார்? இது பற்றியெல்லாம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.. அப்போதுதான் அந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது.

    Advertisement

    திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகாவை சேர்ந்தவர் ரஞ்சனி.. 23 வயதான இவர், தமிழ்நாடு காவல்துறையில் 2022ம் ஆண்டு பணியில் சேர்ந்தவர், தற்போது ரஞ்சனி திருப்பூர் மாவட்ட ஆயுதப்படையில் பணியாற்றி வந்தார். இதனால் நல்லூர் அடுத்துள்ள நல்லிகவுண்டன் பாளையத்தில் உள்ள மாவட்ட ஆயுதப்படை போலீஸ் குவார்ட்டஸில் கடந்த 3 வருடங்களாக வசித்து வருகிறார்..

    Advertisement

    திருப்பூர் ரஞ்சனி எடுத்த முடிவு

    இந்நிலையில், நேற்று முன்தினம் காலை ரஞ்சனி வழக்கம்போல் ஆயுதப்படையில் நடக்கும் வருகை அணி வகுப்பில் கலந்து கொண்டார். சிறிது நேரத்தில் போன் வந்துள்ளது.. அந்த அழைப்பில் பேசி கொண்டிருந்த ரஞ்சனி திடீரென டென்ஷனாகிவிட்டார்..

    இதனால் டியூட்டி நேரத்திலேயே வீட்டிற்கு கிளம்பிவிட்டார்.. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், ஏன் டியூட்டிக்கு போகல? என்று கேட்டுள்ளார்கள்.. ஆனால், ரஞ்சனி பதில் எதுவுமே சொல்லவில்லையாம்.. அப்போது யாருடனோ செல்போனில் ஆவேசமாக பேசியபடி வந்து, வீட்டு கதவை பூட்டி கொண்டுள்ளார்..

    யார் அந்த 3 பேர்

    Advertisement

    பிறகு சக பெண் போலீசுக்கு போனை போட்டு, தற்கொலை செய்து கொள்ள போவதாக சொல்லிவிட்டு போனையும் ஸ்விட்ச் போன் செய்துள்ளார்.. இதனால் பயந்து போன அந்த பெண் போலீஸ், குவார்ட்டஸிலிருந்தவர்களுக்கு தகவல் தந்துள்ளார்.. அதற்கு பிறகே குடியிருப்புவாசிகள் போலீசுக்கு சென்று விஷயத்தை சொல்லி உள்ளனர்..

    விரைந்து வந்த போலீசார் சடலத்தை மீட்டனர்.. ரஞ்சனியின் செல்போனையும் ஆய்வு செய்ய முயன்றனர்.. ஆனால், செல்போன் லாக் ஆகி இருந்ததால், அதை நிபுணர்கள் உதவியுடன் திறந்துள்ளனர்..

    கடைசியாக ரஞ்சனி யாருடன் பேசினார்? என்று செல்போனை ஆய்வு செய்தபோது, போலீசாரே அதிர்ந்து விட்டார்களாம். காரணம், அவரது போனுக்கு 3 வெவ்வேறு எண்களில் இருந்து அழைப்புகள் வந்துள்ளன. அந்த 3 போன்கால்களிலும் அவர் 3 வெவ்வேறு நபர்களிடம் எமோஷனலாக பேசியிருக்கிறார்.. அந்த 3 பேருமே காவல் துறையை சேர்ந்தவர்களாம்.

    Advertisement

    வார்னிங் தந்த காதலன்

    இதனால் போலீசார் துரித விசாரணையில் இறங்கினார்கள்.. முதற்கட்ட விசாரணையில், ரஞ்சனிக்கும் திருவண்ணாமலையை சேர்ந்த சக போலீஸ்காரர் ஒருவருக்கும் இடையே தீவிரமான காதல் இருந்துள்ளது. இரு வீட்டாரும் சம்மதிக்க, கல்யாண வேலைகளும் விறுவிறுப்பாக நடந்துவந்துள்ளன.

    இந்த சமயத்தில்தான், திருப்பூரில் பணியாற்றி வரும் திருமணமான இன்னொரு போலீஸ்காரருடன் ரஞ்சனிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் செல்போனில் அடிக்கடி பேசி வந்த விபரம் காதலனுக்குத் தெரியவர, ஆத்திரமடைந்த காதலன் அந்தத் திருமணமான போலீஸ்காரரை நேரில் சந்தித்து, "எங்களுக்குத் திருமணம் நிச்சயமாகிவிட்டது, இனி ரஞ்சனியுடன் பேசுவதை நிறுத்திக்கொள்!" என்று வார்னிங் தந்தாராம்..

    Advertisement

    விடிய விடிய விசாரணை

    இதனால் ரஞ்சனிக்கும் அவரது காதலனுக்கும் இடையே சண்டை வெடித்துள்ளது. சம்பவத்தன்றும் காதலனுடன் போனில் சண்டை போட்டபடியே வீட்டிற்குள் சென்ற ரஞ்சனி, கடுமையான மன உளைச்சலில் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.. ஆனால் அந்த 3வது நபர் யாரென்று தெரியவில்லை.. தற்போது சம்பந்தப்பட்ட போலீஸ்காரர்களையும் நல்லூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு வரவழைத்த அதிகாரிகள், அவர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள்...!!

    English Summary

    The tragic suicide of 23-year-old Tamil Nadu armed reserve constable Ranjani in Tiruppur has sparked intense police scrutiny. Investigators discovered she was under immense mental stress due to personal conflicts involving three fellow police officers. Authorities are now interrogating the trio as the investigation into the circumstances of her untimely death continues.