ஊத்துக்குளி அருகே நர்ஸ் கொலை வழக்கில் திடீர் திருப்பம்! கூட வேலை பார்த்த இளைஞரே கொன்ற கொடூரம்!

  • திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி அருகே செவிலியர் மரண சம்பவத்தில் அவர் கொலை செய்யப்பட்டு காட்டு பகுதியில் வீசப்பட்டார் என தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்த விசாரணையில் உத்திராவுடன் வேலை பார்த்த இளைஞர் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

    Advertisement

    ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே உள்ள பூங்குளம் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் குமார் (27). கட்டடத் தொழிலாளி. அவருடைய உறவினர் மகள் உத்திரா (26). இவர்களுக்கு கடந்த ஓராண்டுக்கு முன்னர்தான் திருமணம் நடந்தது.

    Advertisement

    திருமணத்திற்கு பிறகு தம்பதியர், திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள பல்லகவுண்டம்பாளையம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். அங்கிருந்தபடியே ரஞ்சித்குமார் கட்டட வேலைக்கு சென்று வந்தார். அது போல் உத்திரா தனியார் மருத்துவமனையில் நர்ஸாக பணியாற்றி வந்தார். தினமும் உத்திராவை மருத்துவமனையில் இறக்கிவிட்டுவிட்டு இரவில் ரஞ்சித் குமார்தான் வீட்டிற்கு அழைத்துச் செல்வாராம்.

    Tiruppur Nurse: ஊத்துக்குளி காட்டில் உத்திராவுக்கு கொடூரம்! அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சடலம்!

    இந்த நிலையில் கடந்த 14 ஆம் தேதி காலை ரஞ்சித்குமார், வழக்கம் போல் கட்டட வேலைக்கு கிளம்பினார். அப்போது உத்திராவையும் மருத்துவமனையில் இறக்கிவிட்டுவிட்டு கிளம்பினார்.

    Advertisement

    உத்திராவை காணவில்லை

    இதையடுத்து இரவு மருத்துவமனையில் உத்திராவை அழைத்துச் செல்ல ரஞ்சித் குமார் வந்து நீண்ட நேரம் காத்திருந்தும் உத்திரா வரவில்லை. இதையடுத்து உள்ளே சென்று கேட்ட போது "உத்திரா ஏற்கெனவே வீட்டுக்கு கிளம்பிவிட்டார்" என மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்தனராம்.

    வீட்டுக்கு சென்ற உத்திரா

    வழக்கமாக நாம் தானே அழைத்துச் செல்வோம், தற்போது உத்திரா ஏன் தனியாக வீட்டுக்கு செல்ல வேண்டும் என்ற சந்தேகத்துடனே ரஞ்சித்குமார் வீட்டிற்கு சென்றார். உத்திரா வீட்டில் இல்லை.

    ரஞ்சித் அதிர்ச்சி

    இதனால் அதிர்ச்சி அடைந்து, ரஞ்சித்குமார், உத்திராவை பல இடங்களில் தேடியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து இனியும் தாமதிக்கக் கூடாது என கருதிய ரஞ்சித்குமார், ஊத்துக்குளி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மருத்துவமனையில் இருந்த வெளியே வந்த இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீஸார் கைப்பற்றி ஆய்வு செய்தனர். அது போல் உத்திரா யாருடன் கடைசியாக செல்போனில் பேசினார் என்பதும் ஆய்வு செய்யப்படுகிறது.

    Advertisement

    25 வயது பெண் சடலம்

    இந்த நிலையில்தான் 17 ஆம் தேதி ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே காட்டுக்குள் 25 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணின் உடல் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

    “என்கவுண்டர் செய்தால்தான் உடலை வாங்குவோம்! பெருந்துறை செவிலியர் வழக்கில் உறவினர்கள் அதிரடி

    அழுகிய நிலையில்

    அதன் பேரில் சம்பவ இடத்திற்கு போலீஸார் சென்ற போது அங்கு முட்புதரில் நிர்வாணமாக உடல் அழுகிய நிலையில் பெண் சடலம் இருந்தது. இதையடுத்து அந்த உடலை கைப்பற்றிய போலீஸார் பிரேதப் பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.

    Advertisement

    நகையை காணவில்லை

    அந்த இடத்தில் கிடந்த ஆடைகள், அங்க அடையாளங்களை வைத்து பார்த்த போது அந்த பெண் சடலம் உத்திரா என்பது தெரியவந்தது. இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது வீடு திரும்பிய உத்திராவை மர்ம நபர்கள் கடத்திச் சென்று கொடூரமாக கொலை செய்து உடலை காட்டுப் பகுதியில் வீசியது தெரியவந்தது.

    தனிப்படை

    அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. உத்திரா தனது கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலி காணாமல் போயிருந்தது. இது போலீஸாருக்கு கிடைத்த முக்கிய துப்பாக பார்க்கப்படுகிறது. இதனால் அவர் நகைக்காக கொலை செய்யப்பட்டாரா இல்லை வேறு ஏதேனும் காரணத்திற்காக கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

    Advertisement

    கணவர் தற்கொலை முயற்சி

    இதனிடையே, பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு சென்ற ரஞ்சித்குமார், மனைவியின் உடலை பார்த்ததும் கதறி அழுதார். அப்போது துக்கம் தாங்காமல் அங்கிருந்த ஒரு மரக்கிளையில் ரஞ்சித் குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை மீட்டு அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இளைஞர் கைது

    போலீஸ் விசாரணையில், நர்ஸ் கொலை வழக்கில் உத்திராவுடன் பணியாற்றி வரும் சரவணன் என்ற இளைஞர் மீது ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையில் நர்ஸ் உத்திராவை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவரை ஊத்துக்குளி போலீஸார் கைது செய்துள்ளனர்.

    English Summary

    Uthukuli police find an important clue in Nurse murdered near forest area. Soon they will nab the murderers.