Perundurai Nurse: 4 சவரன் நகைக்காக நர்ஸ் உத்திராவை கொன்று உடைகளை களைத்தது ஏன்? கொலையாளி வாக்குமூலம்

  • திருப்பூர்: திருப்பூர் நர்ஸ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மருத்துவமனை ஊழியர் சரவணனிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக் தகவல்களை தெரிவித்துள்ளார்.

    Advertisement

    இந்த சம்பவம் குறித்து சரவணன் கூறியிருப்பதாவது: கடந்த 14 ஆம் தேதி வீட்டிற்கு உத்திரா கிளம்பிய போது நானும் பின்னால் சென்றேன். அப்போது அவரிடம் எங்கு செல்கிறாய் என கேட்டேன். அதற்கு அவர் பெருந்துறை செல்வதாக தெரிவித்தார்.

    Advertisement

    உடனே நானும் அந்த வழியில்தான் செல்கிறேன், பைக்கில் விட்டுவிடுகிறேன் என்றேன். அவரும் என்னை நம்பி உட்கார்ந்தார். பின்னர் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் அவரின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, அவர் அணிந்திருந்த 4 சவரன் நகையை கொள்ளையடித்தேன்.

    நகைக்காக கொலை என்ற சந்தேகம் எழக் கூடாது என்பதற்காகவும் போலீஸாரை குழப்பிவிடவும், உத்திராவின் ஆடைகளை களைத்துவிட்டேன். இவ்வாறு சரவணன் வாக்குமூலம் அளித்தார்.

    நடந்தது என்ன?

    ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே உள்ள பூங்குளம் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் குமார் (27). கட்டடத் தொழிலாளி. அவருடைய உறவினர் மகள் உத்திரா (26). இவர்களுக்கு கடந்த ஓராண்டுக்கு முன்னர்தான் திருமணம் நடந்தது.

    Advertisement
    ஊத்துக்குளி அருகே நர்ஸ் கொலை வழக்கில் திடீர் திருப்பம்! கூட வேலை பார்த்த இளைஞரே கொன்ற கொடூரம்!

    திருமணத்திற்கு பிறகு தம்பதியர், திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள பல்லகவுண்டம்பாளையம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். அங்கிருந்தபடியே ரஞ்சித்குமார் கட்டட வேலைக்கு சென்று வந்தார். இவர் கூலி வேலை செய்து வந்த நிலையில் உத்திரா தனியார் மருத்துவமனையில் நர்ஸாக பணியாற்றி வந்தார்.

    தினமும் உத்திராவை மருத்துவமனையில் இறக்கிவிட்டுவிட்டு இரவில் ரஞ்சித் குமார்தான் வீட்டிற்கு அழைத்துச் செல்வாராம். இந்த நிலையில் கடந்த 14 ஆம் தேதி காலை ரஞ்சித்குமார், வழக்கம் போல் கட்டட வேலைக்கு கிளம்பினார். அப்போது உத்திராவையும் மருத்துவமனையில் இறக்கிவிட்டுவிட்டு கிளம்பினார்.

    Advertisement

    இதையடுத்து இரவு மருத்துவமனையில் உத்திராவை அழைத்துச் செல்ல ரஞ்சித் குமார் வந்து நீண்ட நேரம் காத்திருந்தும் உத்திரா வரவில்லை. இதையடுத்து உள்ளே சென்று கேட்ட போது உத்திரா ஏற்கெனவே வீட்டுக்கு கிளம்பிவிட்தாக மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்தனராம்.

    சிஎம் விஜய் ஒரு வார்த்தை பேசலயே.. பெருந்துறை பெண் நர்ஸ் கடத்தி கொடூர கொலை.. கேட்கவே கொதிக்குதே

    இதையடுத்து வீட்டில் போய் பார்த்த போது உத்திரா அங்கு இல்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ரஞ்சித் குமார், ஊத்துக்குளி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் மருத்துவமனையை சுற்றியுள்ள இடங்களில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். இதனிடையே உத்திராவின் சடலம் காட்டுப் பகுதியில் நிர்வாண கோலத்தில் கிடைத்தது. அந்த சடலத்தில் இருந்த நகைகளையும் காணவில்லை.

    Advertisement

    இந்த நிலையில் போலீஸார் மருத்துவமனை வளாகத்திலும் போய் விசாரித்தனர். அப்போது அங்கிருந்த ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். அந்த வகையில் சரவணனிடம் விசாரணை நடத்திய போது அவர் மீது போலீஸாருக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்தி போதுதான் பல்வேறு உண்மைகள் வெளியே வந்தன.

    English Summary

    Youth arrested in Uthukuli nurse murder case reveals the truth why he has done such a cruelty?