யார் மாவட்டச் செயலாளராக வந்தாலும் சரி.. நாங்கள் வந்து உங்களுக்காக நிற்போம்.. அன்பில் மகேஷ் உறுதி!

  • திருச்சி: எனக்கு ஒன்றுனா அண்ணன் கே.என்.நேருவும், அண்ணன் கே.என்.நேருவுக்கு ஒன்றுனா நானும், உங்களுக்கு ஒன்றுனா நாங்கள் இருவரும் சேர்ந்து வந்து முன் நிற்போம் என்று முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். திமுக 75 ஆண்டுகளுக்கு பின் ஆட்டத்தை கலைத்து ஆடப் போகிறது என்று கூறிய அன்பில மகேஷ், யார் மாவட்டச் செயலாளராக வந்தாலும் அவரை சார்ந்து பணியாற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    Advertisement

    திமுகவில் மறுசீரமைப்பு தொடர்பாக மாவட்ட வாரியாக செயற்குழு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருச்சி மாவட்டம் மொத்தமாக 4ஆக பிரிக்கப்பட்டுள்ளது. திருச்சியில் திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அன்பில் மகேஷ் ஆகியோர் ஆதிக்கம் செலுத்தி வந்த சூழலில், மேலும் 2 பவர் செண்டர்கள் உருவாக இருப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    இந்த நிலையில் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பேசுகையில், நேரு அண்ணனுக்கு ஒன்றுன்னா நானும்... எனக்கு ஒன்றுனா நேரு அண்ணனும்... உங்களுக்கு ஒன்றுனுனா நாங்கள் இருவரும் பேரும் சேர்ந்து வந்து நிற்போம். அதனை பறைசாற்றுவதற்காக கூட்டமாக தான் இதனை பார்க்க வேண்டும்.

    இது என் கட்சி என்ற தொண்டனும், இவன் என் தொண்டன் என்று நினைக்க கூடிய தலைமையும் இருக்கும் வரையில், திமுகவை யாராலும் அசைக்க முடியாது. நேரு அண்ணனுக்கு தளபதியாக நான் இருப்பேன். வரக் கூடிய தேர்தல் எந்த தேர்தலாக இருந்தாலும் சரி, இம்முறை 100% வெற்றி பெற வேண்டும் என்று உறுதி எடுக்கும் கூட்டமாகவே இந்த கூட்டத்தை பார்க்க வேண்டும்.

    Advertisement

    திமுக தலைவருடன் புகைப்படம் எடுக்க தங்கம் தென்னரசும், கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் ஆகியோர் சென்றால், மருது சகோதரர்களா என்று கேட்பார். நானும் அண்ணன் நேருவும் சென்றால், பொன்னர் சங்கரா என்று கேட்பார். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று எதுவாக இருந்தாலும் இயக்கம் தான் என்றும் பாதுகாப்பு. இயக்கத்தை சார்ந்து இருக்கும் போது, உங்களை நோக்கி துன்பம் வராது.

    திருச்சி கிழக்கு தொகுதி குடும்பம் குடும்பமாக இருந்துள்ளோம். தலைமை என்ன சொல்கிறதோ, மாவட்டச் செயலாளராக யார் வந்தாலும் அவர் சார்ந்து பணியாற்ற வேண்டும். ஆயிரம் அன்பில் மகேஷ் வந்தாலும், சென்றாலும், இயக்கம் எப்போதும் இருக்க வேண்டும். திமுகவில் ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருக்க வேண்டும்.

    Advertisement

    திமுகவில் 75 ஆண்டுகளுக்கு பின் ஆட்டத்தை கலைத்து ஆடப் போகிறோம். ஏனென்றால் எதிரில் இருப்பது பக்குவமற்ற எதிரி.. பொய் பொய்யாக சொல்லி கொண்டு Liar பாய்ஸாக இருக்கிறார்கள். எதனைப் பார்த்தாலும் ரீல்ஸ், ரீல்ஸ் என்று இருக்கிறார்கள். அதற்கேற்ப இளைஞர்களை கொண்டு வர வேண்டும். அதற்கேற்ப அரசியல் ஆட்டத்தை ஆட வேண்டும். உங்கள் உழைப்பிற்கு நிச்சயமாக ஊதியம் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.

    English Summary

    Anbil Mahesh: Former Minister Anbil Mahesh Emphasizes Unity With KN Nehru, Signals Major Restructuring in DMK