கரப்பான் பூச்சி கும்பலில் தீவிரவாதிகள்! மோடி ஆட்சியைக் கவிழ்க்க பாகிஸ்தான் சதியாம்! சொல்கிறது பாஜக!

  • திருச்சி: பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என சர்வதேச சதி நடப்பதாகவும், தீவிரவாதிகள், பிரிவினைவாதிகள் டெல்லி போராட்டத்தில் ஊடுருவினர் என பகீர் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார் பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம். மேலும், நீட் தேர்வுக்காக போராடும் இளைஞர்கள் போராட்டத்தில் இருந்து விலகிக் கொள்ளுங்கள்.. மற்றவர்களை மத்திய அரசு பார்த்துக் கொள்ளும் எனவும் கூறியுள்ளார்.

    Advertisement

    திருச்சி பாஜக தலைமை அலுவலகத்தில் பாரதிய ஜனதா கட்சி மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்," மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் ஆகஸ்ட் 1ம் தேதி நடைபெற உள்ளது. இதில் மத்திய அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.

    Advertisement

    மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ததற்கான நோக்கத்தை தெளிவாக கூறி உள்ளார். நீட் தேர்வு வினாத்தாள் கசிவு குறித்து CBI விசாரணை மூலம் 13 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். கடந்த ஆட்சி காலத்தில் இது போன்ற நிகழ்வு நடந்துள்ளது. அந்த நிகழ்வுக்கு நீதிமன்றம் மூலம் தான் தீர்வு கிடைத்துள்ளது.

    நீட் போராட்டம்

    பிரதமர் மோடிக்கு இளைஞர்கள் மீது அக்கரை உள்ளது. பாகிஸ்தான், அமெரிக்க உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த குற்றவாளிகள் போராட்டத்திற்கு உள்ளே புகுந்தனர். அமைதியை சீர்குலைக்க ஊடுருவினர். உலக நாடுகளின் சதி இதில் உள்ளது. BJP, RSS எதிர்த்து பல்வேறு முன்னெடுப்பு இந்தப் போராட்டத்தில் இருந்தது. மாணவர்கள் பெயரை பயன்படுத்தி பயங்கரவாதம், பிரிவினைவதம் செய்பவர்கள் கலந்துள்ளனர். வங்க தேசத்திலும் இப்படித்தான் துவங்கியது. வன்முறை கலவரம் நடந்தது.

    Advertisement

    சர்வதேச சதி

    CJP அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்கிறார்கள். டெல்லியில் வங்கதேசம் போல ஏதும் நடக்கவில்லை, லேசான தடியடி நடந்தது. மாணவர்கள் உரிமைக்காக போராட்டம் நடத்தலாம். ஆனால் ஊடுருவி இருப்பவர் யார் என கண்டறிய வேண்டும். பல்வேறு நாடுகளின் சதியாக இது உள்ளது. அடுத்ததாக பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறுகிறார். தீவிரவாதிகள், பிரிவினைவதிகள் பிரதமர் ராஜினாமா செய்ய வேண்டும் என்பது அவர்களின் நிலைப்பாடாக உள்ளது.

    மத்திய அரசு

    கர்நாடகாவில் கட்ட உள்ள மேகதாது தடுப்பணை விவகாரத்தில் மத்திய அரசு மேகதாது அணை கட்ட அனுமதி இல்லை என்று சொன்னாலும், நாம் மீண்டும் மீண்டும் வலியுறுத்த வேண்டும். மத்திய அரசு அணையை கையில் எடுத்து தமிழகத்திற்கு காவிரி நீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என்பது சர்வதேச நாடுகளின் சதி செயல். சில இடங்களில் தவறு நடக்கும். அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த ஆட்சி போல இந்த ஆட்சியிலும் கொலை,கொள்ளை, லாக்கப் மரணம் நடக்கிறது. அதற்காக புதியதாக வந்த முதல்வர் விஜய் பதவி விலக வேண்டும் என கூற முடியாது.

    Advertisement

    நீட் தேர்வு

    டெல்லியில் போராட்டம் நடத்தும் மாணவர்கள் விலகிக்கொள்ளுங்கள். உங்கள் கோரிக்கைகளை மத்திய அரசு செயல்படுத்தும். மற்றபடி மாணவர்கள் அல்லாத போராட்டகரர்கள், எதிர்க்கட்சிகளை மத்திய அரசு பார்த்துக்கொள்ளும். நீட் தேர்வு வேண்டாம் என தமிழ்நாட்டை தவிர எங்கும் போராட்டம் நடத்தவில்லை. நீட் தேர்வில் உள்ள குளறுபடிகள் குறித்துதான் போராட்டம் டெல்லியில் நடக்கிறது. நீட் தேர்வு வேண்டும் என்பது தான் மத்திய அரசு நிலைப்பாடு" என்றார்.

    English Summary

    BJP leader Karuppu Muruganandam alleges extremists infiltrated the NEET protest and claims an international conspiracy against Prime Minister Modi.