ஒன்னா நம்பர் ஓடுகாலி முதலமைச்சர்.. கரூர் சம்பவத்தை சொல்லி விஜய்யை கடுமையாக விமர்சித்த உதயநிதி

  • திருச்சி: ஒன்னா நம்பர் ஓடுகாலி முதலமைச்சர் இப்போ தமிழ்நாட்டுக்கு வந்து இருக்கிறார் என முதல்வர் விஜய்யை விமர்சித்து உதயநிதி ஸ்டாலின் பேசினார். போலீஸ் விசாரணை முடிந்து வெளியே வந்த உதயநிதி ஸ்டாலின், திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது இவ்வாறு கூறினார்.

    Advertisement

    கரூரில் 41 பேர் உயிரிழந்த போதும், துண்டை காணோம், துணியை காணோம் என ஓடிவிட்டு.. 35 நாட்கள் வீட்டை விட்டு வெளியே வராமல்.. ஒரு வாரத்திற்கு அப்புறம் ஒரு வீடியோ போட்டார். அப்படிப்பட்ட தைரியசாலி இன்னைக்கு முதல்வராக வந்திருக்கிறார். நாங்களும் அப்படி பயந்து ஓடி போயிடுவோம் என நினைத்து இந்த மாதிரி செய்துகொண்டு இருக்கிறார்கள் என்று உதயநிதி கூறினார்.

    Advertisement

    போலீஸ் விசாரணை முடிந்து வந்த உதயநிதி ஸ்டாலின் திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது விஜய்யை கடுமையாக விமர்சித்து பேசினார். குறிப்பாக கரூரில் 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த போதும் கூட இதே திருச்சி விமான நிலையத்தில் புறமுதுகு காட்டி ஓடினார். செய்தியாளர்களை சந்திக்க கூட வக்கு இல்லாமல் பயந்து ஓடினார் என்றார். உதயநிதி கூறியதாவது:-

    என் தங்கையாக பார்க்கிறேன்

    நான் இந்த நேரத்தில் கூறிக்கொள்வது என்னவென்றால், எந்த ஒரு தவறான எண்ணத்திலும் நான் பேசவில்லை. யாரையும் புண்படுத்தனும், யாரையும் தாழ்த்தி பேச வேண்டும்.. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் பெண்களை தாழ்த்தி பேச வேண்டும் என துளி கூட என் மனசில் கிடையாது. என்னுடைய பெற்றோர் என்னை அப்படி வளர்க்கவில்லை.

    Advertisement

    என் தாய் தந்தையர் என்னை இப்படி வளர்க்கவில்லை. எனக்கு திருமணம் ஆகி ஒரு மனைவி இருக்காங்க.. அவங்க கூட தான் நான் வாழ்ந்துகொண்டு தான் இருக்கிறேன். எனக்கு ஒரு பெண் குழந்தை இருக்காங்க.. எனக்கு ஒரு தங்கை இருக்காங்க.. குடும்பத்துடன் தான் நான் வாழ்ந்து வருகிறேன்.. தமிழ்நாட்டில் இருக்கிற பெண்கள் ஒவ்வொரு தாய்மாரையும் என் குடும்பமாக.. என் தாயாக.. என் தங்கையாக தான் நான் பார்க்கிறேன்.. அப்படித்தான் அவர்களை நினைத்துக்கொண்டு இருக்கிறேன்.

    இன்னும் நூறு முறை பேசுவேன்

    பொய் வழக்கு போட்டு என்னை முடக்க நினைத்தனர். ஆனால் இது ஒரு நாளும் நடக்காது. நான் கருணாநிதி பேரன்.. ஸ்டாலின் மகன்.. இந்த நேரத்தில் நான் எனக்காக போராடியவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என் கைதை கண்டித்து போராடியவர்கள் பலர் சிறையில் உள்ளனர். அவர்கள் உடனே விடுவிக்கப்பட வேண்டும் என கூறுகிறேன். நான் மீண்டும் சொல்கிறேன். இந்த கைதுக்கு பயப்பட மாட்டேன்.. இன்னும் நூறு முறை பேசுவேன்.

    Advertisement

    சில பேர் இரட்டை அர்த்தத்தில் பேசினேன் என சொல்கிறார்கள். நான் டபுள் மீனிங்கில் பேசினேன் என்று.. நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன்.. மீண்டும் பேசுவேன்.. பொய் வழக்கை எல்லாம் பார்த்து பயப்பட போவதில்லை. சட்டரீதியாக சந்திப்பேன். திசை திருப்ப தான் நினைக்கிறார்கள். திமுக சட்டசபை உறுப்பினர்களை பார்த்தால் கைது செய்ய தோன்றும்.. அதிமுக எம்.எல்.ஏக்களை பார்த்தால் குதிரை பேரத்தில் ஈடுபட தோன்றும் இந்த அரசுக்கு..

    ஒன்னா நம்பர் ஓடுகாலி முதலமைச்சர்

    தமிழ்நாட்டு மக்கள் யாரும் மறந்திருக்க மாட்டீர்கள். போன வருஷம், கரூரில் செப்டம்பர் மாதம் 41 பேரை பலி கொடுத்துவிட்டு துண்டை காணோம், துணியை காணோம் என ஓடினார். கரூரில் இருந்து ஓடிப் போயி, இதே திருச்சி விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் கூப்பிட்டதை கூட காது கொடுத்து கேளாமல் ஓடிப்போனார்.. சார் 30 பேர் இறந்துவிட்டார்கள் என சொன்னதை கூட காதில் வாங்காமல் போன.. ஒன்னா நம்பர் ஓடுகாலி முதலமைச்சர் இப்போ தமிழ்நாட்டுக்கு வந்து இருக்கிறார்.

    Advertisement

    இங்க மட்டுமில்லை சென்னை விமான நிலையத்திலும் யாரையும் சந்திக்காமல் ஓடிப்போனார்.. அவர் மட்டுமில்லை, ஒட்டுமொத்த கட்சியுமே அண்டர் கிரவுண்டில் போய்விட்டு.. ஒரு 35 நாட்கள் வீட்டை விட்டு வெளியே வராமல், ஒரு வாரத்திற்கு அப்புறம் ஒரு வீடியோ போட்டார். அப்படிப்பட்ட தைரியசாலி இன்னைக்கு முதல்வராக வந்திருக்கிறார். அவர் நினைத்துக்கொண்டார் இதே மாதிரி வழக்கு போட்டால் பயந்துவிடுவோம் என.. நாங்க ஓடிப்போயிடுவோம் என நினைத்து இந்த மாதிரி செய்துகொண்டு இருக்கிறார்கள். என்றைக்கும் நாங்கள் இதற்கு எலாம் பயப்படுகிறவர்கள் கிடையாது.. இவ்வாறு அவர் கூறினார்.

    English Summary

    Udhayanidhi Stalin criticized Chief Minister Vijay, stating that the "number one runaway Chief Minister" has now arrived in Tamil Nadu. He made these remarks while addressing reporters at the Trichy airport after emerging from a police inquiry.