6 மாசம் அமைதியா இருப்போம்னு சொன்னவங்க! 6 நாள் கூட இருக்க முடியலை! விஜய் தாக்கு


  • திருச்சி: தவெக ஆட்சி அமைந்ததும் 6 மாசம் சும்மா இருப்போம்னு சொன்ன திமுக, ஆட்சிக்கு வந்து 6 நாட்களில் கதற ஆரம்பிச்சுட்டாங்க என முதல்வர் விஜய் விமர்சித்துள்ளார். அதிலும் கல்யாண வீட்டுக்கெல்லாம் போய் புலம்ப ஆரம்பிச்சுட்டாங்க என விஜய் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    திருச்சி கிழக்கில் வாக்காளர்களுக்கு நன்றி சொல்லும் கூட்டத்தில், முதல்வர் விஜய் பேசுகையில், திருச்சி கிழக்கு மக்களுக்கு ஸ்பெஷல் நன்றி. திருச்சி தமிழகத்தின் இதயம் இந்த திருச்சி கிழக்கு தொகுதி மக்களும் என் இதயத்திற்கு நெருக்கமானவர்கள்.

    Advertisement

    தவெக ஆட்சிக்கு வந்த பிறகு 6 மாதம் அமைதியாக இருப்போம் என்றவர்கள் 6 நாட்கள் கூட சும்மா இருக்கவில்லை. நான் பதவியேற்ற நாளில் இருந்து அரை மணி நேரம் கூட சும்மா இல்லாமல் புலம்புகிறார்கள். அதுவும் கல்யாண வீட்டுக்கெல்லாம் போய் புலம்புறாங்க!

    திருச்சி கிழக்கு, பெரம்பூர் தொகுதியில் மக்கள் என்னை வெற்றி பெற வைத்துவிட்டீர்கள். ஆனால் தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி ஒன்றை ராஜினாமா செய்ய வேண்டும். இந்த தேர்தலில் 1977 இல் எம்ஜிஆர் பெற்ற வாக்கு சதவீதங்களை விட அதிகமாக நாம் பெற்றதாக சிலர் சொல்கிறார்கள். எம்ஜிஆரோடு என்னை நான் ஒப்பிடவில்லை. எம்ஜிஆர் எம்ஜிஆர்தான், ஆனால் நாம் பெரியார், அண்ணா, எம்ஜிஆர் வழியில் உழைக்கிறோம்.

    Advertisement

    உங்களை ஏமாற்றிய திமுக, அதிமுகவை புறம்தள்ளிவிட்டு இந்த விஜய்யை முதல் சேவகனாக்கி இருக்கிறீர்கள். எங்களுக்கு ஆதரவு தெரிவித்த அத்தனை இயக்கங்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இன்னும் கொஞ்சம் அதிகமாக ஆதரிச்சி இருந்தீங்கன்னா நல்லா இருந்திருக்கும்.

    English Summary

    Chief Minister Vijay has criticized the DMK, stating that leaders who once claimed they would remain calm for six months after forming the government began “complaining within six days” of coming to power. Vijay further mocked the ruling party by alleging that its leaders were even voicing grievances at wedding functions, intensifying the ongoing political war of words in Tamil Nadu.