பயிர்க்கடன் எப்போ தள்ளுபடி? திருச்சியில் 5 நாட்களாக நடந்த விவசாயிகள் போராட்டம் தற்காலிக ஒத்திவைப்பு

  • திருச்சி: திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் 5 நாட்களாக நடைபெற்று வந்த விவசாயிகள் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் ரமேஷ், காந்திராஜன், வினோத் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் 20 நாட்களுக்கு ஒத்தி வைப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். பயிர்க்கடனை தவெக அரசு தேர்தல் வாக்குறுதியில் கூறியது போல் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக்கோரி விவசாயிகள் இந்த போராட்டம் நடத்தி வந்தனர்.

    Advertisement

    விஜய்யின் தவெக அரசு ஆட்சி அமைக்கும் முன்பாக பல்வேறு வாக்குறுதிகளை அளித்து இருந்தது. மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500, ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் இலவசம், பயிக்கடன் முழுவதும் தள்ளுபடி என பல வாக்குறுதிகளை அளித்தது. ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு தவெக அரசு கஜானா காலியாக உள்ளதாக கூறிவிட்டு 75 ஆயிரம் ரூபாய் வரையிலான பயிர்க்கடன்கள் மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்துள்ளார்.

    Advertisement

    தேர்தல் வாக்குறுதி படி முழு பயிர்க்கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என விவசாயிகள் தவெக அரசுக்கு எதிராக போராடி வருகிறார்கள். அந்த வகையில், திருச்சி மாவட்டம் சமயபுரத்தில், கூட்டுறவு கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையினை வலியுறுத்தி தமிழகம் முழுக்க இருக்கக் கூடிய விவசாயிகள் சங்கத்தின் சார்பில் தொடர் போராட்டம் அறிவிக்கப்பட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

    தொடர்ந்து 5 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடந்து வந்த நிலையில் இன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், வேளாண் அமைச்சர் காந்திராஜன், வினோத் உள்ளிட்டோர் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதிப்படி கூட்டுறவு பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என விவசாயிகள் கூறினர். அப்போது, அமைச்சர்கள் இடைத்தேர்தல் அறிவிப்பு வந்ததால் இப்போது எந்த வித அறிவிப்பும் கொடுக்க முடியாது.

    Advertisement

    கொஞ்ச நாட்கள் டைம் கொடுங்கள். கண்டிப்பாக கோரிக்கைகள் நிறைவேற்றி தரப்படும். இதற்கிடையே விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொண்ட ஒருவர் மாரடைப்பால் மரணம் அடைந்தார். இந்த சோக நிகழ்வினை கருத்தில் கொண்டும், அமைச்சர்களின் பேச்சுவார்த்தையை அடுத்தும் தற்காலிகமாக இந்த போராட்டத்தை ஒத்தி வைப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். அடுத்த 20 நாட்களுக்கு போராட்டத்தை ஒத்தி வைப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

    English Summary

    Farmers protest, which had been ongoing for five days in Samayapuram, Trichy district, has been temporarily suspended. Following talks with ministers—including Ramesh, Gandhirajan, and Vinoth—the farmers announced a 20-day postponement of the protest. They had been agitating to demand a complete waiver of crop loans, as promised in the election manifesto of the TVK government.