துணை சபாநாயகர் விவகாரம் மீண்டும் டிவிஸ்ட்.. புகார் சொன்னவர் மது அருந்தும் வீடியோ லீக்

  • திருச்சி: தவெக ஆட்சியில் ஏராளமான சர்ச்சைகள் வட்டமடிக்க தொடங்கியுள்ளன. ஆட்சிக்கு வந்த 6 மாதங்களில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் மீது புகார்கள் எழுந்து வருகிறது. துணை சபாநாயகர் ரவிசங்கர், தன் தொகுதிக்குட்பட்ட கார்த்திக் குமார் என்பவரை தாக்கியதாக புகார் எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் ரவிசங்கர் மீது புகார் சொன்ன கார்த்திக் மது அருந்தும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கண்ணபிரான் காலனியை சேர்ந்தவர் கார்த்திக் குமார். கண்ணபிரான் பகுதியில் குடிநீர், குப்பை உள்ளிட்ட பல்வேறு அடிப்படை பிரச்சனைகள் நிலவியுதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அரசுக்கு பலமுறை புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அந்த தொகுதியின் எம்எல்ஏவும், துணை சபாநாயகருமான ரவிசங்கரை கார்த்திக் செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். ரவிசங்கர் எடுக்கவில்லை என கார்த்திக் புகார் கூறியுள்ளார்.

    Advertisement

    துணை சபாநாயகர் விவகாரம்

    நேற்று முன் தினம் தீபாவளியன்று ரவிசங்கர் மணச்சநல்லூர் சென்றுள்ளார். அப்போது அங்கே கார்த்திக்கும் இருந்துள்ளார். ரவிசங்கரிடம் தங்கள் பகுதி பிரச்சனைகளை சொல்ல சென்றுள்ளார். அப்போது கார்த்திக்கை, ரவிசங்கர் தகாத வார்த்தையில் திட்டி தாக்கியதாக வீடியோ வெளியானது. ரவிசங்கர் தன்னை அடித்து விரட்டினார் என கார்த்திக் கூறினார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் தீயாக பரவியது. திடீர் திருப்பமாக கார்த்த்திக்குமார், ரவிசங்கர் அருகில் அமர்ந்திருக்கும் வீடியோ வெளியானது.

    "எனக்கும், துணை சபாநாயகருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. சமூகவலைதளங்களில் தவறான வீடியோ பரப்பப்படுகிறது" என்று கார்த்திக் கூறினார். நடப்பது புரியாமல் மக்கள் குழம்பினர். கார்த்திக் மீண்டும் ஒரு வீடியோ வெளியிட்டார். அதில், "என் உயிருக்கு ஆபத்து உள்ளது. காவல்துறையினரும், ரவிசங்கரும் என்னை மிரட்டி வீட்டுக்கு அழைத்து சென்று வீடியோ எடுத்தனர்.
    வேறு வழியில்லாமல் பயந்து பேசினேன். சாமானிய மக்களை மிரட்டும் ரவிசங்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கார்த்திக் கூறினார்.

    Advertisement
    தமிழக துணை சபாநாயகர் நீக்கம்? ரெடியான கருப்பையா? சட்டசபை செயலாளருடன் சந்திப்பு – பின்னணி

    மீண்டும் டிவிஸ்ட்

    இதை ரவிசங்கர் மறுத்தார். இதுகுறித்து தவெக விசாரணைக் குழு அமைத்து விசாரித்து வருகிறது. பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் இந்த விவகாரத்தில் மீண்டும் திருப்பமாக டாஸ்மாக் கடையில் கார்த்திக் மது அருந்துவது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது. கார்த்திக் மது அருந்துவது மற்றும் டாஸ்மாக் கடையில் இருந்து வெளியேறும் வீடியோ வெளியாகியுள்ளது. இதன் மூலம் கார்த்திக் மதுபோதையில் ரவிசங்கரிடம் பேசி பிரச்சனை செய்தார் என அவரின் ஆதரவாளர்கள் கூறியுள்ளனர்.

    English Summary

    Deputy Speaker Ravishankar issue again see twist. complaint person Liquor drinking video leaked create shock.