மதுராந்தகம், தாராபுரத்தில் அவர்கள் இல்லாட்டி திமுகவுக்கு டெபாசிட் போயிருக்கும்! துரை வைகோ

  • திருச்சி: மதுராந்தகம், தாராபுரம் ஆகிய சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்களில் திமுக டெபாசிட் வாங்கியதற்கு காரணமே "அவர்கள்"தான் என திருச்சி எம்பி துரை வைகோ விமர்சித்துள்ளார்.

    Advertisement

    திருச்சி மன்னார்புரம் பகுதியில் புதிய பேருந்து நிறுத்தத்தை திருச்சி எம்பி துரை வைகோ திறந்து வைத்தார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது: திருச்சி மெயின் கார்டு கேட் அருகே இருக்கக் கூடிய ரயில்வே மேம்பால பணிகள் தாமதமாக நடைபெற்று வருகின்றன.

    Advertisement

    ரயில்வே துறையிலும் சில பிரச்சினைகள் உள்ளன. மாநகராட்சியிலும் பிரச்சனைகள் உள்ளன. அவற்றை சரி செய்து விரைந்து அந்த பாலப் பணியை முடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளேன். இது தொடர்பாக அனைத்து தரப்பையும் வைத்து ஒரு கூட்டத்தை நடத்த உள்ளோம்.

    இசைமைப்பாளர் தேவா மூலம் கானா பாடல்களுக்கு ஒரு அங்கீகாரம் கிடைத்தது. அவருடைய இறப்பு தமிழ் திரையுலகுக்கு பேரிழப்பு. அவர் மறைவிற்கு மதிமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

    திமுகவின் தலைவர் மு.க. ஸ்டாலின் முதலமைச்சராக இருந்த பொழுது இந்தியா முழுவதும் எஸ்ஐஆர் மூலம் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. ஆனால் தமிழ்நாட்டில் அது நடைபெறவில்லை, அதற்கு காரணம் திமுக. அந்த முறைகேட்டை நடக்கவிடவில்லை.

    Advertisement

    இந்த சூழலில் எஸ் ஐ ஆர் தான் திமுக தோல்விக்கு காரணம் என ஒரு கருத்தை பரப்பி வருகிறார்கள். திமுகவினர் தோல்வியை முதலில் ஒப்புக் கொள்ள வேண்டும். பெருந்தலைவர் காமராஜர், கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு உள்ளிட்டோர் தேர்தலில் தோல்வி அடைந்துள்ளார்கள்.

    அதுபோல திமுகவும் தோல்வி அடைந்துள்ளது. அதை அவர்கள் ஒப்புக் கொள்ள வேண்டும். SIR-ஆல் தான் நாங்கள் தோற்றோம் என கூறுவது ஜனநாயகத்திற்கு எதிரானது, மக்கள் தீர்ப்புக்கு எதிரானது.

    விஜய் வெற்றியை கொச்சைப்படுத்துவது தவறான அணுகுமுறை. மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் திமுகவினர் கூட்டணி இல்லாமல் போட்டியிட்டு 30 சதவீத வாக்குகளை பெற்றதாக கூறுகிறார்கள். ஆனால் பிரேமலதா விஜயகாந்த், ஈஸ்வரன், ஜவாஹிருல்லா, தமீமுன் அன்சாரி உடைய கட்சிகள் திமுக கூட்டணியில் உள்ளன.

    Advertisement
    SIR: எஸ்ஐஆர் இல்லாட்டி தவெக 108-க்கு பதில் 200 தொகுதிகளில் வென்றிருக்கும்! துரை வைகோ

    அவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்தார்கள். அவர்களால் தான் கூடுதலாக 15 ஆயிரம் வாக்குகள் திமுகவிற்கு கிடைத்துள்ளது. இல்லையென்றால் இடைத்தேர்தலில் திமுகவிற்கு டெபாசிட் கிடைத்திருக்காது.

    இந்த தேர்தலில் தோற்றாலும், நாங்கள் வெற்றி பெற்றோம் எனக் கூறி மக்களை ஏமாற்றுகிறார்கள். திமுக கூட்டணியில் நாங்கள் ஏமாந்தது போல் தற்போது கூட்டணியில் உள்ள கட்சிகள் ஏமாற வேண்டாம்.

    திமுக மக்களுக்கு பணம் கொடுக்கவில்லை என்றாலும் நல்லது, கெட்டதற்கு என ரூ. 100 கோடிக்கு மேல் இரண்டு தொகுதிகளிலும் செலவு செய்துள்ளார்கள். ஆனால் ஒரு காசு கூட செலவு செய்யாமல் த.வெ.க இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது.

    Advertisement

    மீதமுள்ள 5 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தல்களில் மதிமுக போட்டியிடுவது குறித்து எங்கள் கட்சி தலைமையும், கூட்டணி கட்சி தலைவர் விஜயின் முடிவு எடுப்பார்கள் என துரை வைகோ தெரிவித்துள்ளார்.

    English Summary

    Trichy MP Durai Vaiko criticises DMK's statement in By election loss that SIR is the reason for their loss.