Durai Vaiko: எனக்கு போட்ட பிச்சையை கூட ஸ்டாலினுக்கு கொளத்தூர் மக்கள் போடவில்லையே! துரை வைகோ தடாலடி

  • திருச்சி: எனக்கு போட்ட பிச்சையை கூட ஸ்டாலினுக்கு கொளத்தூர் மக்கள் போடவில்லையே என திருச்சி எம்பி துரை வைகோ பதிலடி கொடுத்துள்ளார். தவெகவுடன் கூட்டணியில் இருக்கும் துரை வைகோ, திமுகவை கடுமையாக விமர்சித்து வருகிறார்.

    Advertisement

    திருச்சியில் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியதாவது: "எனது எம்பி பதவி, திமுக போட்ட பிச்சை என்கிறார்கள். திமுகவையும் அதில் இருப்பவர்கள் பலரையும் நான் மதிக்கிறேன். கட்சிக்காக உழைத்து வாழ்நாள் முழுவதும் அர்ப்பணித்த தொண்டர்களும் இருக்கிறார்கள்.

    Advertisement

    தேர்தல் வரும் போது கூட்டணிக் கட்சிகளின் ஒத்துழைப்பு உழைப்பை வைத்து மக்களின் ஆதரவைப் பெற்று வெற்றி பெறுகிறோம். இது யாரும் போடுகிற பிச்சை இல்லை. அவர்கள் என்ன மன்னர்களா, சக்கரவர்த்திகளா, இது என்ன அவர்கள் போடும் பிச்சையா?

    20- 30 இயக்கங்கள் சேர்ந்து ஒன்றாக உழைத்து அதில் திமுக உழைப்பும் பிரதானமானதுதான். அதை மறுக்கவில்லை. ஆனால் மக்கள் வாக்களித்ததால்தான் எம்பியாக வெற்றி பெற்றோம். இவர்கள் போட்ட பிச்சையால் இல்லை.

    அடுத்து வரும் தேர்தலிலும் கூட பார்ப்போம். தேர்தலில் அவர்களும் நிற்கட்டும். யார் போடுகிற பிச்சை என பார்ப்போம். மக்கள்தான் எஜமானவர்கள். எனக்கு திமுக போட்ட பிச்சை என கூறுவதுதெல்லாம் தவறான கருத்து, இதுதான் ஜனநாயகத்திற்கும் சமத்துவத்திற்கும் எதிரானது.

    Advertisement

    இதுதான் பண்ணையார் அரசியல், பண்ணையார் அரசியல் கூடாது என்றுதான் 1967 ஆம் ஆண்டு அண்ணா மாற்றத்தைக் கொண்டு வந்தார். சாதாரண எளியவர்கள்கூட எம்எல்ஏ, எம்பிக்கள் ஆனார்கள். ஆனால் அதே பண்ணையார் அரசியல் இன்று திராவிட இயக்கங்களில் வந்துவிட்டது.

    இப்போதெல்லம் சமானியர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை. அவர் எந்த சாதி, எவ்வளவு முதலீடு போடுவார் என்றுதான் கேட்கிறார்கள். இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்தவர்தான் முதல்வர் விஜய். அவர்தான் மிகப் பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளார்.

    லஞ்ச, லாவண்யம் இல்லாத ஒரு அரசாங்கத்தையும் அவர் கொடுத்துள்ளார். எனவே பிச்சை என்ற வார்த்தையெல்லாம் விட்டுவிட்டு, அவர்கள் சொல்கிற மாதிரியே பிச்சை போட்டார்கள் என்றே வைத்துக் கொள்வோம். ஆனால் கொளத்தூரில் திமுக தலைவருக்குக் கூட மக்கள் பிச்சை போடவில்லையே, அதற்கு என்ன சொல்வார்கள் என துரை வைகோ கடுமையாக விமர்சித்துள்ளார்.

    Advertisement

    அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பேசுகையில் விசிக, காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட எல்லா கட்சிகளுக்கும் திமுக தலையீடு இருந்தது. காங்கிரஸ் போட்டியிட்ட தொகுதிகளில் அக்கட்சியின் சில வேட்பாளர்களை பொருத்தமட்டில் திமுக தீர்மானித்ததுதான். இவருக்கு கொடுங்க, அவருக்கு கொடுங்கன்னு காங்கிரஸை கட்டாயப்படுத்தினாங்க. இது போன்ற ஒரு விவகாரங்களால்தான் காங்கிரஸ் தலைமைக்கு திமுக மீது ஒரு வெறுப்பு வந்தது என துரை வைகோ தெரிவித்திருந்தார்.

    அது போல் அவர் மேலும் பேசுகையில், பரந்தூரில் விமான நிலையம் அமைப்பது அவசியம்தான் என்றாலும், ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதோடு, விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும், அப்பகுதியில் உள்ள 13 முக்கிய நீர்நிலைகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் என மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் .

    Advertisement

    மக்களின் எதிர்ப்பை கருத்தில் கொண்டு, அங்கு விமான நிலையம் அமைக்க மாட்டேன் என முதலமைச்சர் ஜோசப் விஜய் அளித்த வாக்குறுதியை காப்பாற்றியுள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    English Summary

    MDMK MP Durai Vaiko says that Why Kolathur assembly seat people not giving Pichai to Stalin to win in election?