திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ!

  • திருச்சி: தமிழக அரசியல் களம் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகும் தொடர்ந்து அதிரடி திருப்பங்களை சந்தித்து வருகிறது. சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து, அதன் தலைவர் சி. ஜோசப் விஜய் தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார்.

    Advertisement

    சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் பெரும் வெற்றி பெற்ற அவர், சட்ட விதிகளின்படி ஒரு தொகுதியைத் தக்கவைக்கும் வகையில் திருச்சி கிழக்கு எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.
    இந்நிலையில், தனக்கு அமோக ஆதரவு அளித்த திருச்சி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் முதலமைச்சர் விஜய் இன்று திருச்சிக்கு அரசு முறைப் பயணமாக வந்தார்.

    Advertisement

    சென்னை சிட்டி கார்டனில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்தடைந்த அவர், சத்திரம் பேருந்து நிலையம் எதிரே உள்ள தூய வளனார் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட நன்றி அறிவிப்புப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.

    திருச்சி விமான நிலையத்தில் முதலமைச்சர் விஜய்க்கு ஏராளமான தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பல்லாயிரக்கணக்கில் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த நிகழ்வின்போது அரசியல் வட்டாரத்தை அதிர வைக்கும் ஒரு முக்கிய சம்பவம் அரங்கேறியது.

    திமுக கூட்டணியில் முக்கிய அங்கமாக இருக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) பொதுச்செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ நேரில் வந்து முதலமைச்சர் விஜய்க்கு சால்வை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து சிரித்தபடி உற்சாகமாக வரவேற்றார்.

    Advertisement

    இந்த வரவேற்பு தமிழக அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. தேர்தலில் தோல்வியைத் தொடர்ந்து திமுக தனது கூட்டணியைத் தக்கவைக்க போராடி வரும் நிலையில், இந்த நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே விடுதலைச் சிறுத்தைகள் கழகம் (விசிக), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தவெக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு அளித்து, விசிக, காங்கிரஸ், iuml போன்றவை தவெக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளன.

    இந்தச் சூழலில், இன்னும் திமுக கூட்டணியில் இருக்கும் மதிமுகவின் தலைவரான துரை வைகோவின் இந்த நடவடிக்கை திமுகவுக்கு 'பெரிய முதுகுகுத்து' என்று அரசியல் விமர்சகர்கள் கடுமையாக விமர்சிக்கின்றனர்.

    Advertisement

    கடந்த சில நாட்களாகவே வைகோ குடும்பத்தினர் தவெக ஆட்சியை நோக்கி சாதகமான கருத்துக்களைத் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது. மதிமுகவுக்குள் திமுக தலைமையின் மீது அதிருப்தி நிலவும் நிலையில், துரை வைகோவின் இந்த நகர்வு மதிமுக விரைவில் தவெக அணிக்கு தாவும் என்பதற்கான வலுவான அறிகுறியாக பார்க்கப்படுகிறது.

    ஏற்கனவே இடதுசாரி கட்சிகள் மற்றும் விசிக ஆகியவை திமுகவை விட்டு விலகிய நிலையில், மதிமுகவும் தவெக பக்கம் சாய்ந்தால் திமுக தமிழக அரசியலில் முற்றிலும் தனிமைப்படுத்தப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 'மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி' என்பது இப்போது வெறும் பெயரளவில் மட்டுமே எஞ்சியிருக்கும் நிலை உருவாகியுள்ளது.

    Advertisement

    இந்த சம்பவம் தமிழக கூட்டணி அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். துரை வைகோவின் நகர்வு அடுத்தக்கட்ட அரசியல் மாற்றங்களுக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    English Summary

    Durai Vaiko Stuns DMK with Grand Welcome to CM Vijay in Trichy | Major Alliance Shift in Tamil Nadu Politics