திருச்சி: திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் வீடு உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி ரெய்டு மேற்கொண்டனர். இந்த ரெய்டில் தற்போது நிறைவடைந்திருக்கும் நிலையில், அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்திருக்கிறார்.
அதில் கூறியதாவது, "ஜெயலலிதா காலத்தில் ரெய்டு, வழக்குகளை எப்படி எதிர்கொண்டோமோ.. அதேபோல இந்த முறையும் எதிர்கொள்வோம். ஜெயலலிதா காலத்தில், நீதிமன்றம் சென்று குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டோம். அதேபோல இப்போதும் எதிர்கொள்வோம்.
என்னை கைது செய்தால் எல்லாம் முடிந்துவிட்டதா? நான் இல்லாவிட்டாலும் திருச்சி இடைத்தேர்தலில் தொண்டர்கள் பணியாற்றுவார்கள். ரெய்டில் எந்த ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை. 2 லேப்டாப்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை திசை திருப்பவே இந்த ரெய்டு நடத்தப்பட்டிருக்கிறது. தாராபுரத்தில் திமுக கூடுதல் வாக்குகளை பெற்றிருக்கிறது. எங்களை எதிர்பாவர்கள்தான் மாறுவார்கள். திமுக என்றும் நிலைத்து நிற்கும். காங்கிரஸ் காலத்தில் காங்கிரஸ் vs திமுக, பின்னர் எம்ஜிஆர் vs திமுக, ஜெயலலிதா vs திமுக, இப்போது விஜய் vs திமுக என மாறியிருக்கிறது. மொத்தமாக எங்களை எதிர்ப்பவர்கள்தான் மாறியிருக்கிறார்கள். நாங்கள் மாறவில்லை. இந்த குற்றச்சாட்டுகளை நாங்கள் எதிர்கொள்வோம்" என்று கூறியிருக்கிறார்.ஒட்டுமொத்த திமுகவுக்கு குறி? நேருவின் வீட்டில் மட்டுமல்ல.. மாஜி எம்எல்ஏக்கள் வீட்டிலும் DVAC ரெய்டு!