சின்னப் புள்ளைங்களுக்கு மிட்டாய் கொடுக்குற மாதிரி.. அதிமுக மாஜிகளை தூக்கிய தவெக! குமுறிய எடப்பாடி!

  • திருச்சி: த.வெ.க அரசு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை சாலையில் விளையாடும் குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுத்து அழைத்து செல்வது போல் அழைத்து சென்றுள்ளார்கள். தேர்தல் நேரத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் பெரும்பாலும் நிறைவேற்றப்படவில்லை. குதிரை பேரம் மூலம் விலை பேசி அதிமுக எம்.எல்.ஏக்களை ராஜினாமா செய்ய வைத்துள்ளார்கள் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

    Advertisement

    திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்," பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை சட்டபூர்வமாக கொண்டு வந்தது அதிமுக கட்சி. 32 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் ஏராளமான நலத்திட்டங்களை செய்துள்ளோம்.

    Advertisement

    டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் தண்ணீர் திறந்து விட்டு விவசாயத்தை எந்த சிரமுமின்றி அவர்கள் மேற்கொள்ள நடவடிக்கை எடுத்தோம். டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக அறிவிக்கப்பட்டது.

    எடப்பாடி பழனிசாமி

    குடிமராமத்து திட்டம், நடந்தாய் வாழி காவேரி திட்டம் என ஏராளமான திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம். இன்று மக்கள் அதிமுக ஆட்சியை போல் எந்த ஆட்சியிலும் நன்மை கிடைக்கவில்லை என்பார்கள். விலைவாசி உயர்ந்து விட்டது. தொழில் முதலீடுகளை ஈர்க்க முதல்வர் வெளிநாடு சென்றதாக கூறினார்கள் ஆனால் இன்று பத்திரிக்கைகளில் வேறு ஒருவருடன் அவர் இருக்கும் போட்டோ வந்துள்ளது.

    Advertisement

    நெல் கொள்முதல்

    அவர் எப்படி முதலீடை ஈர்க்கிறார் பாருங்கள் தமிழ்நாட்டில் மின்சாரம் அடிக்கடி துண்டிக்கப்படுகிறது. அத்தியாவசியமான மின்சாரத்தை வழங்கவில்லை. மக்கள் அதற்காக போராடி வருகிறார்கள் தேர்தல் நேரத்தில் கொடுக்க ப்பட்ட வாக்குறுதிகளை நீர் வேற்றவில்லை என விவசாயிகள் போராடுகிறார்கள். நெல் கொள்முதல் முறையாக செய்யாததால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

    அதிமுக

    விவசாயிகளுக்காக பேசும் ஒரே கட்சி அதிமுக தான் ஆனால் இந்த அரசு நம்முடைய கோரிக்கைகளை செவி சாய்க்கவில்லை. த.வெ.க அரசு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை சாலையில் விளையாடும் குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுத்து அழைத்து செல்வது போல் அழைத்து சென்றுள்ளார்கள். தேர்தல் நேரத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் பெரும்பாலும் நிறைவேற்றப்படவில்லை.

    Advertisement

    அதிமுக எம்.எல்.ஏ.க்கள்

    குதிரை பேரம் மூலம் விலை பேசி அதிமுக எம்.எல்.ஏக்களை ராஜினாமா செய்ய வைத்துள்ளார்கள். சொந்தக் காலில் நிற்கவில்லை இரவல் காலில் தான் த.வெ.க ஆட்சி நிற்கிறது. ரீல் விட்டே இந்த ஆட்சியை நடத்தி கொண்டிருக்கிறார்கள். ரீல்ஸ் மூலமாகவே ஆட்சி அமைத்தார்கள். மக்களுக்காக எதுவும் செய்யாமல் உழைக்காமல் ஆட்சிக்கு வந்த ஒரே கட்சி த.வெ.க தான், அதிமுக 31 காலம் தமிழகத்தில் ஆட்சி புரிந்த கட்சி" என கூறியுள்ளார்.

    English Summary

    Edappadi Palaniswami alleges TVK lured AIADMK MLAs through horse trading and criticises Vijay’s government over unfulfilled election promises.