வெகுண்டெழுந்த விவசாயிகள்.. திருச்சியில் 3வது நாளாக போராட்டம்! அரிசி, பருப்பை தடுத்த ’விஜய்’ போலீஸ்!

  • திருச்சி: பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி திருச்சியில் 50 விவசாய சங்கத்தை சேர்ந்தவர்கள் 3வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தனியார் நிலத்தில் போராட்டம் நடைபெற்ற வரும் நிலையில், போராட்டத்தில் சமைப்பதற்காக அரிசி கொண்டு வந்ததை காவல்துறை அனுமதிக்காததால் வாக்குவாதம் ஏற்பட்டது. கஞ்சித் தொட்டி திறப்பதாக தகவல் கிடைத்ததாலேயே போலீசார் தடுத்ததாக சொல்லப்படுகிறது.

    Advertisement

    தேர்தலின் போது தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தங்களுடைய தேர்தல் வாக்குறுதியாக சிறு குரு விவசாயிகளுக்கு முழுமையாக பயிர் கடன் தள்ளுபடி செய்யப்படும் எனவும் பெரிய விவசாயிகளுக்கு பாதி அளவு பயிர் தள்ளுபடி செய்யப்படும் எனவும் அறிவித்தார்.

    Advertisement

    ஆனால் தவெக ஆட்சிக்கு வந்த பின்பு அதனை செயல்படுத்தாமல், பெற்ற கடன் தொகையின் அடிப்படையில் விவசாயிகள் பயிர் கடனை தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளார் விஜய். அதற்கு விவசாயிகள் ஆரம்ப கட்டம் முதலே எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதாவது தமிழக அரசு ஆரம்பத்தில் 50,000 வரை கடன் வாங்கி உள்ள விவசாயிகளுக்கு முழுமையாக தள்ளுபடி எனவும், பின்னர் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட பின்பு 75 ஆயிரம் ஆக உயர்த்தி அறிவித்தது. ஆனால் அதையும் விவசாயிகள் ஏற்றுக்கொள்ளவில்லை பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். மேலும், பல இடங்களில் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

    Advertisement

    இந்த நிலையில் தான் நேற்று முன்தினம் (15ஆம் தேதி) 50க்கும் மேற்பட்ட விவசாய சங்கத்தைச் சேர்ந்த சுமார் 500 விவசாயிகள் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை சமயபுரம் அருகே காத்திருப்பு போராட்டத்தை தொடங்கி நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் விவசாயிகள் பொது இடத்தில் போராட அனுமதி மறுக்கப்பட்டதோடு விவசாயிகள் திருச்சிக்கு வர முடியாமல் தடுக்கப்பட்டனர்.

    மேலும் பல்வேறு விவசாய சங்கங்களை சேர்ந்த தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். நேற்று முன்தினம் அதனையும் மீறி போராட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் தனியார் நிலத்தில் போராடி வருகின்றனர். நேற்று 2வது நாளாக போராட்டம் நடைபெற்ற நிலையில், 3வது நாளாக இன்றும் போராட்டம் தொடர்ந்தது.

    Advertisement

    இதற்கிடையே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் இன்று கஞ்சித் தொட்டி திறக்கும் போராட்டத்தில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் தங்களுக்கு தேவையான உணவை சமைப்பதற்காக அரிசி பருப்பு உள்ளிட்டவற்றை எடுத்து வந்தனர். இவற்றை காவல்துறையினர் தடுத்ததால் இரு தரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    விவசாயிகள் கஞ்சி தொட்டு திறக்கும் போராட்டத்தை அறிவித்து அதனை ஒத்திவைத்த நிலையில் அந்தப் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்ற தகவலின் அடிப்படையில் போலீசார் உணவு பொருட்களை தடுத்தனர். அதே நேரத்தில் விவசாயிகள் அமைதியாக போராடி வரும் நிலையில் அதனை தடுக்கும் விதத்தில் காவல்துறையினர் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    English Summary

    Over 500 farmers continue their Trichy protest demanding complete crop loan waiver as police stop rice and dal supplies.