நான் டபுள் மீனிங்கில் பேசல.. நேரடியாக தானே பேசினேன்! விசாரணைக்கு பிறகு உதயநிதி சொன்ன வார்த்தை

  • சென்னை: தான் சொல்லாத விஷயத்தை சொன்னதாக தவறான தகவல்களை பரப்புவதாக கூறியுள்ள உதயநிதி, தான் டபுள் மீனிங்கில் எல்லாம் பேசவில்லை என்றும் காவிரி விவகாரம் குறித்து சிங்கிள் மீனிங்கில் நேரடியாகவே பேசியதாக கூறியிருக்கிறார்.

    Advertisement

    பிரபல நடிகை குறித்து அவதூறாக பேசியதாக சொல்லி, உதயநிதி ஸ்டாலினிடம் விசாரணை நடத்த அவரை திருச்சி வரை போலீசார் அழைத்து சென்றனர். சுமார் 1.30 மணி நேரம் விசாரணை நடந்த நிலையில், அதன் பிறகு அவர் விடுவிக்கப்பட்டார். இதற்கிடையே விமானம் ஏறும் முன்பு திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், தவெக அரசை கடுமையாக விமர்சித்து பேசினார்.

    Advertisement

    உதயநிதி ஸ்டாலின்

    உதயநிதி ஸ்டாலின் திருச்சியில் பேசுகையில், "விவசாயிகள் பிரச்சினைக்காக திமுக சார்பில் நேற்றைய தினம் மிக பெரிய ஆர்ப்பாட்டம் நடத்தினோம். நேற்றைய தினம் கூட்டத்தில் நான் மொத்தம் 25 நிமிடங்கள் பேசினேன். தவெக கொடுத்த பொய்யான வாக்குறுதிகள், விவசாயிகள் பிரச்சினை குறித்து பேசினேன். கர்நாடகா காவிரி நீரையும் திறந்துவிடவில்லை; மேகதாதுவில் அணை கட்டுவதிலும் தீவிரமாக இருக்கிறார்கள்

    திமுக ஆட்சியில் எல்லா ஆண்டும் சரியான நேரத்தில் தண்ணீரை திறந்து விட்டுள்ளோம். கர்நாடகாவிடம் நீரை பெற்று தர இந்த தவெக அரசுக்கு தேம்பு இல்லை, திராணி இல்லை. நான் இவ்வளவு குற்றச்சாட்டுகளை முன்வைத்தேன்; ஆனால் அது எதற்கும் தவெகவிடம் பதில் இல்லை. ஆனால், நான் சொல்லாத விஷயத்தை கட், காபி பேஸ்ட் செய்து அவதூறு பரப்புகிறார்கள்.

    Advertisement

    தவறாக பேசவில்லை

    நான் யாரை பற்றியும் தவறாக பேசவில்லை; முழுக்க முழுக்க விவசாயிகளை பற்றி மட்டுமே பேசினேன். நாளை சட்டசபை தொடங்கவுள்ளதால் திட்டமிட்டு எனது பேச்சை திசை திருப்பவே இந்த கைது நடவடிக்கை. ரீல்ஸ் போட்டு திசை திருப்பும் யுக்தியை தான் தவெக அரசு பின்பற்றுகிறது. ஆனால், இதற்கெல்லாம் அஞ்சும் ஆள் இல்லை.

    நீதிமன்றத்திலேயே என்னை கைது செய்யும் எண்ணம் இல்லை என்றனர். ஆனால் அரசு பணத்தில் பல நூறு கிமீ அழைத்து வந்தனர். தீவிரவாதிகளை போல எங்களை நடத்தினர். தஞ்சை கூட்டி போவதாக சொல்லிவிட்டு, வழியிலேயே செங்கிப்பட்டியில் விசாரணை என்ற பெயரில் ஏதேதோ கேட்டார்கள்.

    Advertisement

    குடும்பம் இருக்கு

    நான் யாரையும் புண்படுத்தும் வகையிலோ, தரம் தாழ்த்தும் வகையிலோ பேசவில்லை. அது எனது எண்ணம் இல்லை. எனது தாய்- தந்தை அப்படி என்னை வளர்க்கவில்லை. எனக்கு திருமணமாகி மனைவி இருக்கிறார். அவருடன் தான் நான் வாழ்ந்து வருகிறேன். எனக்கு ஒரு தங்கை இருக்கிறார். மகள் இருக்கிறார். எனவே, நான் பெண்களை பற்றி அவதூறாக எதுவும் பேசவில்லை.

    எனது கைதுக்கு பல்வேறு தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். ஆனால், சிலர் நான் பேசியதை முழுசா கேட்காமலோ.. தீர ஆராயாமலோ.. நான் தவறாக பேசிவிட்டேன் என கண்டனம் தெரிவித்துள்ளனர்.. நான் எந்த நேரத்திலும் தவறான எண்ணத்தில் பேசவே இல்லை. விவசாயிகளுக்கு ஆதரவாகப் பேசியதற்காகவே இந்த அரசு கைது செய்துள்ளது. நான் மீண்டும் சொல்கிறேன். இந்த கைதுக்கு நான் பயப்பட மாட்டேன். இன்னும் 100 முறை பேசுவேன்.. மீண்டும் பேசுவேன்.

    Advertisement

    டபுள் மீனிங் இல்லை

    இன்னும் சிலர் நான் டபுள் மீனிங்ல பேசிட்டேன்னு சிலர் சொல்றாங்க. நான் டபுள் மீனிங்ல எல்லாம் பேசவே இல்ல. நான் ஒரே மீனிங்ல தான் பேசுனேன். சிங்கிள் மீனிங்ல தான் பேசுனேன். கடந்த காலத்தில் திமுக அரசு எடுத்த முயற்சியால் சரியான நேரத்தில் காவிரி நீர் விவசாயிகளுக்குச் சென்றது. இந்த முறை தண்ணீர் வரல. காவேரி நீர் வர வேண்டும் என்பதையே பேசினேன். அதை மீண்டும் மீண்டும் நான் பேசுவேன். இந்த மாதிரி பொய் வழக்குகளுக்கு எல்லாம் பயப்படப் போவதில்லை. சட்ட ரீதியாக சந்திப்போம்" என்றார்.

    English Summary

    After being released following police inquiry, Udhayanidhi Stalin denied making any derogatory remarks(விசாரணைக்கு பிறகு உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பு): Udhayanidhi Stalin latest press meet.