எல்லாமே திரைப்படத்தில் வருவது போன்று ஒரே நாளில் செய்ய முடியாது.. அமைச்சர் ரமேஷ் பேட்டி

  • திருச்சி: கோயில் நில ஆக்கிரமிப்பில் யாராக இருந்தாலும் பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும் - ஏன் ஆட்சி மாற்றம் மக்கள் கொடுத்து இருக்கிறார்கள் என்றால். அவர்களது அடிப்படை இன்னும் பூர்த்தியாகாமல் உள்ளது - திரைப்படத்தில் வருவது போன்று ஒரே நாளில் செய்ய முடியும் என நினைத்தீர்கள் என்றால் அது நடக்காத காரியம் என்று இந்து அறநிலைத்துறை அமைச்சர் ரமேஷ் பேட்டி அளித்துள்ளார்.

    Advertisement

    தமிழக இந்து அறநிலைத்துறை அமைச்சர் ரமேஷ் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தலைமை செயலக விஐபி எனக்கூறி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தரிசனம் செய்த நபர் யார் என்பது குறித்து இன்று விசாரணை தொடங்கினார். இதனைத் தொடர்ந்து தனியார் மண்டபத்தில் மக்கள் கோரிக்கைகள் குறித்து குறைகேட்பு முகாம் நடந்தது. இதில் பொது மக்களின் மனுக்களை அமைச்சர் ரமேஷ் வாங்கினார்.

    Advertisement

    இதனை தொடர்ந்து இந்து அறநிலைத்துறை அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, "ஏற்கனவே திருவனைக்காவல், அந்தநல்லூர் என இரண்டு பகுதியில் குறை கேட்பு முகாம் வைத்திருந்தோம்.. பல்லாயிரக்கணக்கான மக்கள் கோரிக்கைகளை வைத்தனர். இன்று மணிகண்டன் ஒன்றியத்தில் குறைந்திருக்கும் முகாம் நடத்திக் கொண்டிருக்கிறோம். தொடர்ந்து குறை தீர்ப்பு முகாம் நடத்துவோம்.

    பொதுவாக குடிநீர், சாலை வசதி மின் வசதி பள்ளி கட்டிடங்கள் போன்ற அடிப்படையான தேவைகளை தான் மக்கள் கேட்கிறார்கள். மேலும் வேலைவாய்ப்பு அதிகமாக கேட்கிறார்கள். அரசிடமோ அல்லது தனியார் இடமோ கேட்டு வேலைவாய்ப்புகள் முயற்சி எடுக்கப்படும். நிலம் இல்லாதவர்கள் வீடு இல்லாதவர்கள் பட்டா இல்லாதவர்கள் போன்ற கோரிக்கைகள் வருகின்றன. இவை அனைத்தும் அந்தந்த திட்டத்தில் வரும் பொழுது யார் யாருக்கு நிச்சயமாக பலன் அளிக்கும், அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும்.

    Advertisement

    ஸ்ரீரங்கம் தொகுதியைப் பொறுத்தவரை கடந்த கால ஆட்சியில் மக்களை சந்தித்து குறைகளை கேட்டதே இல்லை. மக்களை சந்தித்து குறைகளை கேட்டா தான் மக்களுக்கு நம்பிக்கை இருக்கும். உடனடியாக செய்ய முடிந்தவற்றை உடனடியாக செய்யப்படும். சில கோரிக்கைகளுக்கு காலதாமதம் ஆகலாம் ஒரு சில கோரிக்கைகள் நடவடிக்கை எடுக்க முடியாமல் போனால் அது குறித்து மக்களிடம் தெளிவாக விளக்கப்படும்.

    எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஸ்ரீரங்கம் தொகுதியில் உள்ள மக்களிடம் குறைகளை கேட்டு அறிவேன். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் விஐபி எனக்கூறி தரிசனம் செய்த நபர் மீது நடவடிக்கை எடுத்தீர்களா என்ற கேள்விக்கு, இது குறித்து விசாரணை நடத்தி அதில் தவறுகள் இருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். விசாரணை நடத்திய பின்பு தான் தெரியவரும். விசாரணைக்கான ரிப்போர்ட் அனைத்தும் கேட்டுள்ளேன் என்றார்.

    Advertisement

    விஸ்வரூப தரிசனத்திற்கு உள்ளே விடாத அதிகாரியை ஏஐ வீடியோ மூலம் மது குடிப்பது போன்று வெளியிட்ட கேள்விக்கு பதில அளித்த அமைச்சர் ரமேஷ், இது காவல்துறையில் முடிக்க வேண்டிய விஷயம். தனிப்பட்ட நபர் இதை பண்ணி இருப்பார்.. அது குறித்து புகார் கொடுத்திருப்பார்கள். இத்தனை ஆண்டு காலம் மக்கள் எதற்காக காத்திருந்தார்கள் ஏன் அரசியல் ஆட்சி மாற்றம் கொடுத்து இருக்கிறார்கள் என்றால்... அவர்களது அடிப்படையை இன்னும் பூர்த்தியாகாமல் இருக்கிறது. முதல்வர் நாளை வருகிறார்.. அனைத்தும் முதல்வர் அறிவிப்பார்.

    கோயில் இடங்கள் பல இடங்களில் ஆக்கிரமிப்பில் உள்ளது என்ற கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் ரமேஷ், நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறோம் .. முதலில் நிலம் எங்கெங்கு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து தகவல்களை சேகரித்து வருகிறோம். யார் ஆக்கிரமிப்பு செய்து இருக்கிறார்கள் என ஆய்வு செய்வோம். இது எல்லாமே திரைப்படத்தில் வருவது போன்று ஒரே நாளில் செய்ய முடியும் என நினைத்தீர்கள் என்றால் அது நடக்காத காரியம்.

    Advertisement

    கோயில் பெயர்களில் உள்ள நிலங்கள் கோயிலுக்கான நிலங்கள் யார் ஆக்கிரமித்து வைத்திருந்தாலும் யாராக இருந்தாலும் அதற்கு யார் துணையாக இருந்தாலும் இப்போதும் யார் துணை இருந்தாலும் பாரபட்சமில்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அரியலூர் மாவட்டத்தில் இந்து அறநிலை துறைக்கு சொந்தமான நிலத்தில் கனிம வள கொள்ளை நடைபெறுகிறது என்ற கேள்விக்கு.... அனைத்து புகார்களையும் எடுத்துக் கொண்டிருக்கிறோம் அறநிலைத்துறை சம்பந்தப்பட்ட இடங்களில் கனிம வள கொள்ளைகள், ஸ்ரீரங்கத்தில் கூட பல்வேறு இடங்களில் சட்டத்திற்கு புறம்பாக கனிமவள கொள்ளை, மணல் கொள்ளை நடைபெற்றது தொடர்ந்து நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறோம் கைது நடவடிக்கை தொடர்கிறது. எங்கேயாவது கனிமவுல கொள்ளை நடந்தால் ஆதாரத்துடன் மீடியா நண்பர்கள் கூட கொடுத்தால் உங்களது பெயர் வராத அளவிற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இடைத் தேர்தலை கருத்தில் கொண்டு கரூர் மாவட்டத்தில் 32 பேருக்கு அரசு பணி கொடுக்கப்படுகிறது என்ற கேள்விக்கு...
    அதெல்லாம் முதல்வர் பார்த்துக் கொள்வார் என தெரிவித்தார்.

    English Summary

    "Action will be taken without bias against anyone involved in the encroachment of temple lands. The people voted for a change of government because their basic needs remain unfulfilled; however, if you think this can be accomplished in a single day—as often depicted in movies—that is simply not feasible," stated Ramesh, the Minister for Hindu Religious and Charitable Endowments.