திருச்சி: திசை திருப்பும் பணியை முதல்வர் செய்கிறார். நாங்கள் நல்லா பேசினால் கேமரா எங்கள் பக்கம் திரும்பாது. எதிர்ப்பு தெரிவித்தால் மட்டும் கேமரா எங்கள் பக்கம் திரும்புகிறது எனவும், மிசாவில் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கான அனைத்து ஆதாரங்களும் அரசாங்கத்திடம் உள்ளது. அதை அமைச்சர் நிர்மல் குமார் பார்த்து தெரிந்து கொள்ளட்டும் என திமுக முன்னாள் அமைச்சர் கேஎன் நேரு கூறியுள்ளார்.
கலைஞர், முரசொலி மாறன், மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரை சட்டமன்றத்தில் கொச்சைப்படுத்தி பேசிய முதலமைச்சர் ஜோசப் விஜையை கண்டித்து திருச்சி மரக்கடை அருகே திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழக முன்னாள் அமைச்சரும் திமுக முதன்மை செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் பங்கேற்கிற்றனர். ஆர்ப்பாட்டத்தில் பேசிய கேஎன் நேரு," ஊழல் என்றால் நடவடிக்கை எடுங்கள் என கூறி அதற்கு ஆதாரம் கேட்டால் சர்க்கார்யா, அமலாக்கத்துறை வழக்கு, மிசா உள்ளிட்டவை குறித்து பேசுகிறார். கேட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் சினிமாவில் வசனம் பேசுவது போல பேசுகிறார். திசை திருப்பும் பணியை முதல்வர் செய்கிறார். நாங்கள் நல்லா பேசினால் கேமரா எங்கழ் பக்கம் திரும்பாது. எதிர்ப்பு தெரிவித்தால் மட்டிம் கேமரா எங்கள் பக்கம் திரும்புகிறது. டி.வியில் பார்ப்பது உண்மையல்ல படம் நாங்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர்கள் பதில் அளித்து அளிப்பதில்லை. நடைபெறும் இடைதேர்தலில் வெற்றியை காண்போம். காங்கிரஸ் கட்சிக்கே நாதியில்லை. ராகுல் காந்தி தான் பிரதமர் என த.வெ.கவினரை காங்கிரஸ் கட்சியினர் கூற சொல்லட்டும். அப்படி பேசினால் மறுநாளே பா.ஜ.க வந்து விடும். திமுகவை விமர்சனம் செய்யும் விவசாயிகளுக்கு விஜய் பாஜக என பெயரை சொல்லட்டும். அவர் கெட்டிகாரர் அப்படி சொல்ல.. 9 தொகுதிகளிலும் திருச்சியில் மீண்டும் வெற்றி பெறும். தானாக வந்த கூட்டம் ஆட்சியை அதிகாரத்தக் எதிர்த்து நிற்கும் கூட்டம். மிசாவில் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கான அனைத்து ஆதாரங்களும் அரசாங்கத்திடம் உள்ளது. அதை அமைச்சர் நிர்மல் குமார் பார்த்து தெரிந்து கொள்ளட்டும். இந்தியாவிலேயே தங்கள் கூட்டணியை அரவணைத்து செல்லக்கூடிய தலைவராக தான் திமுக தலைவர் மு க ஸ்டாலின் இருந்து வருகிறார். திமுகவில் இருந்து வெளியேறியவர்கள் அவர்களாக வெளியேறுவதற்கு திமுக காரணமாகாது. திமுக ஒரு போதும் தங்களது கூட்டணி கட்சிகளை விட்டுக் கொடுத்ததில்லை. இனியும் விட்டுக் கொடுக்க மாட்டோம்." என்றார்.