ஃபீல்டு ஒர்க்கை பார்த்து பயம்.. அன்பில் மகேஷை பயமுறுத்தும் விஜய் அரசு! ஒரே போடாகப் போட்ட கேஎன் நேரு!

  • திருச்சி: கடந்த திமுக ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதில் 100 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடைபெற்றுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அரசு ஆவணங்கள், நிதிப் பதிவுகள், செல்போன்கள், கணினிகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், அவர் மீது வழக்குப் பதிவும் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் இல்லத்தில் நடைபெற்று வரும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனைக்கு கே.என்.நேரு கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், மக்களோடு இணைந்து பணியாற்றும் நபர்களை குறிவைத்து ரெய்டு நடத்தப்படுகிறது எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.

    Advertisement

    கடந்த திமுக ஆட்சி காலத்தில் பள்ளிக் கல்வித் துறையில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் அளிப்பது, புதுப்பித்தல் ஆசிரியர் பணி அமர்த்துவது, போன்றவற்றிற்கு தனியார் பள்ளிகள் சங்க தலைவரும், திமுக பிரமுகருமான பிடி அரசகுமார், 1000 கோடி ரூபாய்க்கு மேல் லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்தது.

    Advertisement

    சென்னை வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்த நிலையில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் பிடி அரசகுமாரை கைது செய்து விசாரணை செய்து வந்தனர். இந்த நிலையில் முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இல்லம் திருச்சி தென்னூரில் உள்ள அவரது இல்லத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் 5க்கும் மேற்பட்டோர் திடீரென சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அன்பில் மகேஷ்

    திருச்சி மட்டுமில்லாமல் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமைச்சருக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை எனவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பள்ளி அங்கீகாரம், தர உயர்வு அனுமதி என 177 தனியார் பள்ளிகளிடம் பல கோடி ரூபாய் வசூலித்த புகாரில் சோதனை நடத்தப்பட்டு வரும் நிலையில், அரசு ஆவணங்கள், நிதிப் பதிவுகள், செல்போன்கள், கணினிகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    Advertisement

    வழக்குப்பதிவு

    இதுமட்டுமில்லாமல் அன்பில் மகேஷ் மீது ஊழல் தடுப்பு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவரது வீடு, உதவியாளர் வீடு என 6 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வரும் நிலைய்இதுவரை 250-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், மக்களோடு இணைந்து பணியாற்றும் நபர்களை குறிவைத்து ரெய்டு நடத்தப்படுகிறது என திமுக முன்னாள் அமைச்சர் கேஎன் நேரு கூறியுள்ளார்.

    கேஎன் நேரு

    அன்பில் மகேஷின் வீட்டுக்கு வந்த அவரை போலீசார் தடுத்து நிறுத்தி வீட்டுக்குள் செல்ல அனுமதிக்கவில்லை. தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர்," விஜய் அரசாங்கம் திமுகவில் சிறப்பாக செயல்படும் நபர்களை குறி வைத்து வேண்டுமென்றே பயமுறுத்தும் அளவில் ரெய்டு செய்கின்றனர். நீதிமன்றத்தின் வாயிலாக நாங்கள் குற்றம் அற்றவர்கள் என்பதை நிரூபித்து நாங்கள் வெளியே வருவோம்.

    Advertisement

    விஜய் அரசாங்கம்

    என்னை உள்ளே செக்கிங் முடிந்த பின்னர் வர சொன்னார்கள். தொலைபேசியில் அன்பில் மகேஷ் என்னிடம் பேசினார்,முடிந்த பின்னர் வெளியே வந்து எல்லோரையும் பார்கிறேன் என்றார். திமுகவில் தீவிரமாக மக்கள் மத்தியில் யாரெல்லாம் பிரபலமாக இருக்கிறார்களோ அவர்களை எல்லாம் குறிவைத்து விஜய் அரசாங்கம் இதுபோன்ற ரைடு நடத்தி வருகிறார்கள். திமுக இந்த ரைடை எதிர்கொண்டு நீதிமன்றத்தின் வாயிலாக சந்தித்து குற்றமற்றவர்கள் என நிரூபிப்போம்." என்றார்.

    English Summary

    KN Nehru condemns Central Crime Branch searches at Anbil Mahesh’s residence, alleging Vijay government targets prominent DMK leaders.