திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!


  • திருச்சி: தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், இன்று மாலை திருச்சியில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ள நிலையில், இன்று காலை முதலே போக்குவரத்து மாற்றம் செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. திருச்சி வழியாக செல்லும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.

    Advertisement

    தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கடந்த மாதம் 10 ஆம் தேதி தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் விஜய், தான் போட்டியிட்ட சென்னை பெரம்பூர். திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதால் திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.

    Advertisement

    இந்நிலையில் தனக்கு வாக்களித்த திருச்சி கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக முதலமைச்சர் விஜய் இன்று மாலை 4 மணி அளவில் தனி விமானம் மூலம் திருச்சிக்கு செல்கிறார். முதலமைச்சராக பதவியேற்ற பின்னர் முதல் முறையாக விஜய் திருச்சிக்கு செல்வதால் தவெக அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க உள்ளனர்.

    வரவேற்பு முடிந்த பின்னர் முதலமைச்சர் தனது பிரத்யேக வாகனத்தின் மூலம் நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் நடைபெற உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரிக்கு செல்கிறார். செயின்ட் ஜோசப் கல்லூரி மைதானத்தில் முதலமைச்சர் விஜய் பேச உள்ள இடத்தில் பொதுமக்கள் அமர்வதற்காக பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது.

    Advertisement

    முதலமைச்சர் விஜய்யின் திருச்சி வருகையையொட்டி இன்று காலை முதலே போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. சத்திரம் பேருந்து நிலையத்திற்கு பேருந்துகள் செல்லாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, கனரக வாகனங்கள் திருச்சி வராமல் மாற்றுப் பாதையில் இயக்கப்படுகின்றன. இதுதொடர்பான அறிவிப்பை திருச்சி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.

    தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இன்று திருச்சிராப்பள்ளி மாநகரத்திற்கு வருகை புரிவதால் காலை 10 மணி முதல் மத்திய பேருந்து நிலையம் மற்றும் திருவெறும்பூரிலிருந்து சத்திரம் பேருந்து நிலையத்திற்கு செல்லும் மாநகர பேருந்துகள் அனைத்தும் மரக்கடை வழியாக மெயின்கார்டு கேட் காந்தி சிலை அருகில் பயணிகளை இறக்கி விட்டு மேல அரண்சாலை (W.B) வழியாக செல்ல வேண்டும்.

    Advertisement

    திருவாணைக்கோவில் வழியாக வரும் பேருந்துகள் அனைத்தும் மாம்பழசாலையில் இறக்கி விட்டு திரும்பி செல்ல வேண்டும். கரூர் சாலையிலிருந்து வரும் பேருந்துகள் சத்திரம் பேருந்து நிலையத்திற்கு செல்லாமல் கே.டி சந்திப்பு, சாஸ்த்திரி சாலை வழியாக மத்திய பேருந்து நிலையம் செல்ல வேண்டும். கடலூர், பெரம்பலூர், அரியலூரிலிருந்து வரும் பேருந்துகள் திருவாணைக்கோவில் வழியாக சத்திரம் பேருந்து நிலையத்திற்கு செல்லாமல் கொள்ளிடம் புறவழி சாலை வழியாக மத்திய பேருந்து நிலையம் செல்ல வேண்டும். சத்திரம் பேருந்து நிலையத்திற்கு பேருந்துகள் செல்ல
    அனுமதியில்லை.

    கனரக வாகனங்கள் மாற்று வழிப்பாதை

    தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இன்று திருச்சிராப்பள்ளி மாநகரத்திற்கு வருகை புரிவதால் காலை 7 மணி முதல் மதுரையிலிருந்து சென்னை செல்லும் கனரக வாகனங்கள் துவரங்குறிச்சியிலிருந்து குளித்தலை, முசிறி பெரம்பலூர் வழியாகவும், திண்டுக்கலிலிருந்து சென்னை செல்லும் கனரக வாகனங்கள் மணப்பாறையிலிருந்து குளித்தலை, முசிறி, பெரம்பலூர் வழியாகவும், சென்னையிலிருந்து மதுரை, திண்டுக்கல் செல்லும் கனரக வாகனங்கள் பெரம்பலூரிலிருந்து முசிறி, குளித்தலை, மணப்பாறை வழியாக செல்ல வேண்டும்.

    Advertisement

    தஞ்சாவூர், புதுக்கோட்டை செல்லும் கனரக வாகனங்கள் பெரம்பலூரிலிருந்து, அரியலூர் வழியாக செல்ல வேண்டும். புதுக்கோட்டையிலிருந்து சென்னை செல்லும் கனரக வாகனங்கள் தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர் வழியாக செல்ல வேண்டும். தஞ்சாவூரிலிருந்து கரூர் செல்லும் கனரக வாகனங்கள் அரியலூர், பெரம்பலூர், நுறையூர் வழியாக செல்ல வேண்டும். கரூரிலிருந்து தஞ்சாவூர் செல்லும் கனரக வாகனங்கள் குளித்தலை, முசிறி, பெரம்பலூர், அரியலூர் வழியாக செல்ல வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. மேற்கண்ட தகவலை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரத்திக் தயாள் ஐ.ஏ.எஸ் தெரிவித்துள்ளார்.

    English Summary

    As Tamil Nadu Chief Minister Joseph Vijay is scheduled to participate in a public meeting in Trichy this evening, traffic diversions have been implemented and announced effective from this morning.