திமுகவுக்கு இதே வேலையா போச்சு.. நீட் போராட்டத்தில் உதயநிதி செய்த சதி! விளாசிய சிடிஆர் நிர்மல்குமார்!

  • திருச்சி: மாணவர்களின் உணர்வுப்பூர்வமான போராட்டங்களை அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்தக் கூடாது எனவும், தமிழக வெற்றிக் கழகம் நீட் தேர்வை எதிர்ப்பதில் உறுதியாக இருக்கிறது. மாணவர் போராட்டங்களில் தவெக கட்சியினர் பங்கேற்றாலும் கட்சிக் கொடி, பேனர் அல்லது அரசியல் அடையாளங்களை பயன்படுத்தவில்லை. ஆனால், நீட் போராட்டத்தில் திமுகவால் குழப்பம் ஏற்பட்டதாக அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

    Advertisement

    திருச்சி சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழா திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நடைபெற்றது. இவ்விழாவில்
    தமிழக மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

    Advertisement

    முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த சிடிஆர் நிர்மல் குமார்," நீட் தொடர்பான மாணவர் போராட்டங்களில் திமுக தேவையற்ற அரசியல் செய்கிறது. சிலரை 100, 200 பணம் கொடுத்து திமுக டி-ஷர்ட் அணிவித்து போராட்டத்தில் அமர வைத்துள்ளது. உதயநிதி ஸ்டாலின் இளைஞர்களை தவறாக வழிநடத்துகிறார்.

    சிடிஆர் நிர்மல் குமார்

    "ஜென்சி" என்ற வார்த்தையை கூட சரியாக புரிந்து கொள்ளாமல் உதயநிதி பேச்சு உள்ளது. உதயநிதி திமுகவை வழிநடத்தும் தகுதி தனக்கு உள்ளதா என்பதை கட்சி நிர்வாகிகளிடம் வாக்கெடுப்பு நடத்தி தன்னை சுய பரிசோதனை கொள்ள வேண்டும். அண்ணா உருவாக்கிய திமுகவை வழி நடத்த கனிமொழி அல்லது உதயநிதி
    ஆகிய இருவரில் யாருக்கு தகுதி உள்ளது என்பதையும் நிர்வாகிகளிடம் கேட்க வேண்டும். மாணவர்களின் உணர்வுபூர்வமான போராட்டங்களை அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்தக் கூடாது.

    Advertisement

    நீட் போராட்டம், தவெக

    தமிழக வெற்றிக் கழகம் நீட் தேர்வை எதிர்ப்பதில் உறுதியாக இருக்கிறது. மாணவர் போராட்டங்களில் தவெக கட்சியினர் பங்கேற்றாலும் கட்சிக் கொடி, பேனர் அல்லது அரசியல் அடையாளங்களை பயன்படுத்தவில்லை.
    மேகதாது அணை விவகாரத்தில் முதல்வர் பொதுமக்கள், விவசாயிகளிடம் கருத்துக்களை கேட்டு வருகிறார். அதே போன்று சட்ட வல்லுநர்களிடமும் ஆலோசித்து வருகிறார்.

    மேகதாது விவகாரம்

    எனவே நல்ல முடிவை எடுப்பார். இதை பேச்சுவார்த்தை மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கைகள் மூலம் எதிர்கொள்ளலாம்.. அதே நேரத்தில், மேகதாது விவகாரம் குறித்து முன்னாள் முதல்வர் ஸ்டாலினுக்கும், துணை முதல்வர் உதயநிதிக்கும் முழுமையான புரிதல் இல்லை. கருணாநிதி ஆட்சிக் கால காவிரி ஒப்பந்த விவரங்கள் பற்றியும் அவர்களுக்கு தெரியாது.

    Advertisement

    தமிழக வெற்றிக் கழகம்

    பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மக்களுக்காக நீண்ட காலம் போராடிய மூத்த தலைவர். தனிப்பட்ட விஷயங்களில் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. முதல்வர் கர்நாடகா செல்வது தொடர்பான முடிவை முதல்வர் அலுவலகமே அறிவிக்கும். தமிழக வெற்றிக் கழகம் கட்சி நிறத்தில் பேருந்துகளை இயக்கும் எண்ணம் இல்லை, மக்களுக்கு நன்மை தரும் திட்டங்களிலேயே கவனம் செலுத்துகிறோம்.

    ஜனநாயகன்

    "விசில்" சின்னம் உலகம் முழுவதும் மக்களிடம் சென்றடைந்து விட்டதால், கட்சி சின்னத்தை விளம்பரப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. 'ஜனநாயகன்' திரைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. மூன்று ஆண்டுகள் பல்வேறு தடைகள் இருந்ததால், அதன் வெளியீடு உணர்வுபூர்வமான தருணமாக மாறியது. அதனால் சில அமைச்சர்கள் கண்கலங்கியது இயல்பானது. நீண்ட காலமாக சிறையில் உள்ள இஸ்லாமிய கைதிகள் விடுதலை தொடர்பாக ஒன்றிய அரசின் ஒத்துழைப்புடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்றார்.

    English Summary

    CTR Nirmal Kumar alleges DMK politicised NEET protests and reiterates TVK's opposition to NEET without political branding.