எல்லா பிரச்சனைக்கும் திமுக காரணம்.. 13 தோல்வியால் எடப்பாடி விரக்தி.. அமைச்சர் ரமேஷ் விமர்சனம்

  • திருச்சி: சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு தமிழக அரசியல் நிலவரத்தில் அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. அரசியல் கட்சி கூட்டணிகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. திமுக, அதிமுக இருவரும் தவெகவை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். திமுக அதிமுக மறைமுக கூட்டணியில் இருப்பதாக தவெக விமர்சித்து வருகிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு திமுக காரணம் என்றும், 13 தேர்தல் தோல்வியால் எடப்பாடி பழனிசாமி நிம்மதியை இழந்திருப்பதாக அமைச்சர் ரமேஷ் கூறியுள்ளார்.

    Advertisement

    திருச்சியில் இந்துசமய அறநிலைத்துறை அமைச்சர் ரமேஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக தொடர்ந்து வெற்றியடையவில்லை. அவர் தொடர்ந்து தோல்வியை சந்தித்து கொண்டிருக்கிறார். 10 தோல்வி, 11 தோல்வி, 12, 13 தோல்விகளை கடந்து சென்று கொண்டிருக்கிறது. அதனால் அவர் நிம்மதியை இல்லாமல் இருப்பது எதார்த்தம் தான்.

    Advertisement

    திமுக தீயசக்தி

    மக்கள் இன்றைக்கு மகிழ்ச்சியாக உள்ளனர். மக்கள் அந்த ஆட்சியையும், முதலமைச்சரையும் பாராட்டி கொண்டிருக்கிறார்கள். நாம் அதைத்தான் மெயினாக பார்க்க வேண்டும். இதற்கு முன்னால் யார் மக்கள் பணத்தை தொட்டிருந்தாலும் சரி, மக்கள் பணத்தை சுரண்டியிருந்தாலும் சரி. மக்கள் பணத்தை சுரண்டியவர்களுக்கு என்ன தண்டனை பெற்று கொடுக்க முடியுமோ அதைச் செய்வோம். அதற்கான முயற்சியில் தவெக அரசு ஈடுபட்டு கொண்டிருக்கிறது. இதில் எந்த அரசியல் காழ்புணர்ச்சியும் இல்லை.

    வேறு எந்த காரணங்களும் இல்லை. திமுக ஒரு தீயசக்தி, திமுக ஊழல் கட்சி, திமுக ஒரு ஊழல் சக்தி என்று தொடர்ந்து சொல்லி கொண்டிருக்கிறோம். அந்தளவுக்கு மக்கள் வரிப்பணத்தை சுரண்டியுள்ளனர். ஒரே ஒரு குடும்பம் வாழ்வதற்காக, மக்கள் பணத்தை சுரண்டுவதற்காக மொத்த கட்சியும் வேலை பார்த்துள்ளனர். இந்த அரசியல் எல்லாம் திமுகவில் மட்டும் தான் நடக்கும். அந்த ஊழலுக்கு எதிரான நடவடிக்கையை எடுத்து வருகிறோம். இதில் வேறு எந்த விதமான அரசியல் காழ்புணர்ச்சியும் கிடையாது.

    Advertisement
    தமிழகத்தில் விலைவாசி உயர்வை அம்பலப்படுத்தியதற்காக கலையரசன் கைதா? பாசிச தவெக! ஸ்டாலின் கண்டனம்

    விலைவாசி உயர்வு

    தவறு செய்தவர்கள் நிச்சயம் அதற்கான பலனை அனுபவிப்பார்கள். கடந்த 50 வருடங்களாக தமிழகத்தின் ஆலமரமாக இருந்தோம் என்று சொல்லும் திமுக தான் சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கே காரணம். திமுகவின் கடந்த 5 வருட ஆட்சி எப்படி இருந்தது. அவர்கள் சட்டம் ஒழுங்கை எப்படி காப்பாற்றினார்கள். இந்த பிரச்சனையொல்லாம் 3, 4 மாதங்களில் புதிதாக முளைத்து வரவில்லை. திமுக ஆட்சியில் போட்ட விதையை நாங்கள் சரி செய்து களை எடுத்து வருகிறோம். விலைவாசியை கட்டுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறோம்" என்றார்.

    English Summary

    Minister Ramesh said, DMK is the reason for Tamilnadu's law and order issue. Edappadi Palanisamy in lossed is happiness for continues defeat in election.