விஜய் கிடையாது.. 2029ல் காங்கிரஸ் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி தான் - அமைச்சர் விஸ்வநாதன் உறுதி

  • சென்னை: தமிழகத்தில் இருந்து பிரதமர் உருவாக வேண்டும் என்று முதல்வர் விஜய்யை மையப்படுத்தி கூறி வருகின்றனர். இந்நிலையில் தான் ''காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை 2029ம் ஆண்டின் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி தான்'' என்று உயர் கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் கூறியுள்ளார்.

    Advertisement

    தமிழக சட்டசபையில் தொகுதி மறுவரையறைக்கு எதிராக, கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில், பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசினார்.

    Advertisement

    அப்போது அவர், ''வரும் காலத்தில் தமிழகத்தில் இருந்து பிரதமர் உருவாக வேண்டும்'' என்று கூறினார். முதல்வர் விஜய்யை மனதில் வைத்து ஆதவ் அர்ஜூனா இந்த கருத்தை சட்டசபையில் பதிவு செய்தார்.

    தமிழகத்தில் தவெக - காங்கிரஸ் கட்சியின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக விஜய் உள்ளார். அவரது அமைச்சரவையில் உயர்கல்வித்துறை அமைச்சராக விஸ்வநாதன் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், தான் திருச்சியில் அமைச்சர் விஸ்வநாதன் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

    அப்போது அவரிடம், ''நாடாளுமன்ற தேர்தலில் உங்களின் கூட்டணியில் எத்தனை பிரதமர் வேட்பாளர் உள்ளனர்'' என்று கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர் விஸ்வநாதன் கூறுகையில், ''காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை எங்களுடைய 2029ம் ஆண்டுக்கான பிரதமர் வேட்பாளர் நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தான்.

    Advertisement

    இவர் தான் 2029 பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவார். அதோடு மட்டுமில்லை. பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவது மட்டுமின்றி 3 முறை 15 ஆண்டுகளாக மக்கள் வெறுப்பில் உள்ளனர். ஏமாற்றத்தில் உள்ளனர். நரேந்திர மோடி அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். 2029 ம் ஆண்டில் எங்கள் தலைவர் தான் ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர். அவர் பிரதமர் ஆக வேண்டும் என்பதை ஒத்த குரலில் ஒலிப்போம்'' என்றார்.

    காங்கிரஸ் கட்சியின் இப்படி ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர் என்று சொல்வது ஒன்றும் புதிது இல்லை. இதற்கு முன்பும் பலபேர் கூறியுள்ளனர் எம்பியும், தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மாணிக்கம் தாகூரிடம் சமீபத்தில், ''தவெகவில் அமைச்சர்கள் விஜய் தான் பிரதமர் வேட்பாளர் என்று சொல்கிறார்களே என்று கூறினார்.

    Advertisement

    அதற்கு மாணிக்கம் தாகூர், ''நான் வரும்போது கூட என்னை பார்த்து ஒருவர் பிரதமர் ஆகணும். மத்திய அமைச்சர் ஆகணும்னு சொன்னாரு. அதனால் இதையெல்லாம் சீரியஸாக எடுத்து கொள்ளாதீர்கள். காங்கிரஸை பொறுத்தமட்டில் ராகுல் காந்தி தான் கட்சியின் முகம், எதிர்க்கட்சிகளின் முகம். தமிழகத்தை பொறுத்தவரை இந்த கூட்டணியின் முகம் விஜய்.

    அவர்களது தலைமையில் நல்லாட்சி அமைய முதல் ஆளாக காங்கிரஸ் கட்சி ஆதரவு தந்தது. அதனால் தொண்டர்களின் கோஷங்களுக்கு எல்லாம் பதில் சொல்ல ஆரம்பித்தோம் என்றால் இன்று முழுவதும் பதில் சொல்ல வேண்டியது தான். அதைவிட முக்கியமான விஷயம் உள்ளது'' என்றார்.

    Advertisement

    இதையடுத்து அந்த பத்திரிகையாளர், ''சார் தொண்டர்கள் சொல்லவில்லை. அமைச்சர்கள் தான் சொன்னார்கள்'' என்றார். அதற்கு மாணிக்கம் தாகூர், ''நான் அவர்களை தொண்டர்களாக தான் பார்க்கிறேன்'' என்றார்.

    English Summary

    There is talk-with CM Vijay as the focal point-that a Prime Minister should emerge from Tamil Nadu. Amid of this Tamil Nadu Higher Education Minister Viswanathan has stated, "As far as the Congress party is concerned, Rahul Gandhi is the Prime Ministerial candidate for 2029".