ஸ்டாலின், உதயநிதி குறித்து நேரு பகீர் விமர்சனம்.. பரபரப்பை பற்ற வைத்த துரை வைகோ

  • திருச்சி: சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலுக்கு முன்பு பலமாக இருந்த திமுக கூட்டணி உடைந்தது. காங்கிரஸ், மதிமுக, விசிக, ஐயுஎம்எல் உள்ளிட்ட கட்சிகள் தவெக கூட்டணியில் இணைந்தன. இதனால் அந்த கட்சிகளுக்கும் திமுகவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. மதிமுக துரை வைகோ மீது கே.என். நேரு பல்வேறு விமர்சனங்களை வைத்தார். இந்நிலையில் கலைஞருடன் திமுக முடிந்துவிட்டது என ஸ்டாலினையும், உதயநிதியையும் நேரு விமர்சனம் செய்ததாக துரை வைகோ கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    திமுக முன்னாள் அமைச்சர் நேரு, "துரை வைகோ அவர் பிறப்பதற்கு முன்பு நடைபெற்ற மிசா காலத்தை பற்றி எல்லாம் பேசுகிறார். எங்கள் தலைவர் ஸ்டாலினை பற்றி பேசுவதற்கு துரை வைகோவுக்கு தகுதியில்லை. என் அப்பா கோபக்காரர். கட்சிக்கு வளர்ச்சி இல்லை. நான் திமுகவுக்கு வந்துவிடுகிறன் என துரை கூறினார். அவர் சிறுபிள்ளையாக நடந்து கொள்வதற்கு எல்லாம் நான் பதில் முடியாது" என கூறியிருந்தார்.

    Advertisement

    அரசியலுக்கு வந்தது விபத்து

    திருச்சியில் மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "திமுகவுடன் கூட்டணியில் இருந்து திட்டமிட்டு எங்களை ஒதுக்கினர். ஒரு கூட்டத்தில் ஆளை செட் செய்து சுயமரியாதையை சோதித்தனர். அதனால் அந்த கூட்டத்தில் டேபிளை அடித்தேன். செத்தாலும் தனி சின்னத்தில் தான் போட்டியிடுவேன் என கூறினேன். உதயசூரியன் சின்னத்தில் எனக்கு மதிப்பு உள்ளது. அந்த சின்னத்தை நான் குறை சொல்லவில்லை.

    திமுக முன்னாள் அமைச்சர் நேரு கட்டுக்கதையை கட்டவிழ்த்துவிடுகிறார். எங்கள் தலைவர் வைகோ, கட்சிக்காரர்களுக்காக அரசியலுக்கு வந்தேன். எனக்கென்று அரசியல் வேட்கை விருப்பமில்லை. நான் அரசியலுக்கு வந்ததே விபத்து என்பதை பல இடங்களில் சொல்லியுள்ளேன். இன்றைக்கு பொறுப்புக்கு வந்துவிட்டேன். திருச்சி நாடாளுமன்ற உறுப்பினராக, கட்சிக்காரர்களுக்காக செயல்பட வேண்டியுள்ளது. இதுதான் என் பார்வை.

    Advertisement

    நேரு பகீர்

    உண்மை எது என்று மக்களுக்கு தெரியும். கலைஞர் காலத்துடன் திமுக முடிந்துவிட்டது, என இப்போதைய திமுக தலைவரை சிறுமைப்படுத்தி பேசியவர் நேரு. இந்த பையனை எல்லாம் வைத்து கொண்டு அரசியல் செய்ய முடியாது என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியை பற்றி பேசியுள்ளார். நான் அதை எல்லாம் கண்டுகொள்ளவில்லை. இதுதான் நேரு பேசியது. அதே நேரு இன்றைக்கு என்னை பேசுகிறார். அரசியல் எல்லாம் கட்சிக்காரர்களின் விருப்பம்.

    எனக்கு இந்த ஊரைவிட்டு செல்லும்போது நல்ல பெயருடன் திரும்ப வேண்டும். நல்லது செய்துவிட்டு ஊருக்கு செல்ல வேண்டும். என் குடும்பத்தினரை பற்றி எல்லாம் மோசமாக பேசுகிறார்கள். அவர்களை இயக்குவது யார். கூட்டணியில் இருக்கும்போதே தனிமனித தாக்குதல், அவதூறுகளை பரப்பினர். இப்போது மீண்டும் அதே வேலையை செய்கிறார்கள். இதற்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன். என்னிடம் அந்த அரசியல் எடுபடாது. எனக்கும் அந்த அரசியல் தெரியும்.

    Advertisement

    பலரை காலி செய்தவர்

    நேருவின் ஸ்டைலே மறைமுகமாக தாக்குவதுதான். அவர்கள் கட்சியை சேர்ந்த எத்தனை எம்எல்ஏக்கள் தலைவர்களை அவர் காலி செய்துள்ளார். திமுகவில் பலர் தோற்பதற்கு காரணமே நேரு தான். என்னையும் குறி வைப்பார். நான் இருக்கின்ற வரை என்னை யாரும் மிரட்ட முடியாது. எனக்கு நிறைய தெரியும். என்னை தொந்தரவு செய்தால் நான் எல்லாவற்றையும் பேசுவேன். இன்னும் வேகமாக எதிர்மறை அரசியல் செய்வேன்" என்றார்.

    English Summary

    MDMK Durai Vaiko said, DMK Former Minister Nehru criticized MK Stalin and Udhayanidhi stain. His comment sparks controversy.