திருச்சியில் சூப்பர் சோதனை... கொரோனா சிகிச்சை பிரிவில் மருந்து, மாத்திரைகளை வழங்க போகும் ரோபோக்கள்


  • திருச்சி: திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை கொரோனா சிகிச்சைப் பிரிவில் மருந்து மற்றும் மாத்திரைகளை வழங்கும் பணிக்காக, ரோபோக்களை பயன்படுத்துவதற்கான சோதனையை நேற்று மாவட்டஆட்சியா் சு. சிவராசு பார்வையிட்டார் .

    Advertisement

    திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை கொரோனா சிகிச்சைப் பிரிவில், ரோபோக்களை பயன்படுத்தி மருந்து, மாத்திரைகளை வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதற்கான சோதனை முயற்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    Advertisement

    திருச்சியைச் சோ்ந்த புரபெல்லா் டெக்னாலஜிஸ் என்ற தனியார் மென்பொருள் நிறுவனம், மனிதா்களைப் போல இயங்கும் ரோபோக்களை விற்பனைக்கு வைத்துள்ளது. இந்த வகை ரோபோக்கள் உணவகங்களில் வாடிக்கையாளா்களுக்கு உணவு வழங்கும் சேவையை செய்வதற்காக வடிவமைக்கப்பட்டது.

    கொரோனா நிவாரண நிதி 2000.. நாளை முதல் வழங்கப்படும்.. முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு

    தற்போதைய நிலையில் இந்த ரோபோக்களை, திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையிலுள்ள கொரோனா வார்டில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரைகளை வழங்குவதற்குப் பயன்படுத்தலாம் என பல்வேறு தரப்பிலிருந்து ஆலோசனை வழங்கப்பட்டது. இதையடுத்து கொரோனா வார்டில் ரோபோக்களை சோதனைக்குப் பின்னா் பயன்படுத்தலாம் என முடிவு செய்யப்பட்டு, அதற்கான சோதனை ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

    Advertisement

    ஜாஃப் மற்றும் ஜாஃபிமெடிக் என்ற வகைகளைச் சார்ந்த இரு ரோபோக்களும், மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு, மருத்துவா்கள் மற்றும் வருவாய்த் துறை அலுவலா்கள் முன்னிலையில் சோதனைக்குள்படுத்தப்பட்டன. இதுகுறித்து தனியார் மென்பொருள் பொறியாளா் குருமூா்த்தி கூறியது: கொரோனா வார்டில் மருந்து, திட, திரவ உணவு வழங்கும் பணியை ரோபோக்கள் மேற்கொள்ளும். சோதனை முயற்சி திருப்திகரமாக இருந்தது. மாவட்ட நிர்வாகம் உரிய அனுமதி வழங்கினால், ஓரிரு நாள்களில் திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் ரோபோக்கள் பயன்பாட்டுக்கு வரும் இவ்வாறு அவர் கூறினார்.

    Recommended Video

    Cuban doctors and nurses help Italy to fight against coronavirus

    ரோபோக்களின் சோதனையைத் தொடா்ந்து, இதை அங்கீகரித்துள்ள ஆட்சியா் சு. சிவராசு, தேவைப்படும் பட்சத்தில் தயார் நிலையில் வைத்துக் கொள்ளுமாறு தனியார்மென்பொருள் நிறுவனத்தை அறிவுறுத்தியுள்ளார். இதுபோன்ற ரோபோக்களை பயன்படுத்தும் பட்சத்தில், சிகிச்சை அளிக்கும் மருத்துவா்கள் மற்றும் மருத்துவப் பணியாளா்களுக்கு நோய்த் தொற்று ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க முடியும். தேவையற்ற அச்சத்திலிருந்து விடுபட முடியும் என்கின்றனா் மருத்துவத் துறையினா்.

    English Summary

    Robots going to deliver medicine, tablets in Coronavirus treatment unit Trichy government hospital
    Advertisement