நான் என்ன கலர்கலராவா சட்டை போடுறேனு கேட்டாரே விஜய்! கரூருக்கு எந்த நிறம் தெரியுமா?

  • திருச்சி: கரூர் வெண்ணைமலை நிகழ்ச்சியில் பங்கேற்க சென்னையில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்த முதல்வர் விஜய் கருநீலநிற சட்டை, பேன்ட் அணிந்திருந்து வந்தார்.

    Advertisement

    கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பிறகு முதல்முறையாக அதுவும் தமிழகத்தின் முதல்வராக விஜய் இன்று செல்கிறார்.

    Advertisement

    இதற்காக அவர் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி செல்லும் அவர், திருச்சியில் இருந்து கரூருக்கு சாலை வழியாக காரில் சென்றார்.

    இன்று காலை 11 மணிக்கு வெண்ணைமலையில் உள்ள அட்லஸ் கலையரங்கில் நடக்கும் 5000 பேர் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

    இந்த சந்திப்புக்காக கியூஆர் கோடுடன் கூடிய அட்டை வைத்திருப்போருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். விஜய் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியையொட்டி அட்லஸ் மைதானத்தைச் சுற்றி சுமார் 10 அடி உயரத்திற்கு தகர கொட்டகைகள், தற்காலிக தடுப்புச் சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    Advertisement

    இதையடுத்து நிகழச்சியையொட்டி அந்த மைதானத்தை சுற்றி சுமார் 10 அடி உயரத்திற்கு தகர கொட்டகைகள், தற்காலிக தடுப்புச் சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளன. பின்னர் நிகழ்ச்சி முடிந்து அங்கிருந்து பிற்பகல் 1 மணியளவில் கரூர்- சேலம் புறவழிச்சாலையில் இருந்து கோவை சாலை, பழைய பேருந்து நிலைய ரவுண்டானா, உழவர் சந்தை, திருமாநிலையூர் வழியாக சுங்ககேட், தான்தோன்றிமலை ஆகிய பகுதிகள் வழியாக முதல்வர் ரோடு ஷோ நடைபெறுகிறது.

    இந்த நிகழ்வுகளில் கலந்து கொள்ள கரூர் வரும் விஜய் கருநீலநிற சட்டை, கருப்பு பேன்ட் அணிந்துள்ளார். கரூர் கூட்ட நெரிசல் வழக்கிற்காக டெல்லி சென்றிருந்த போது அவர் கருப்பு உடை அணிந்திருந்தார். அதன் பிறகு அடுத்த முறை சென்ற போது வெள்ளை நிற உடை அணிந்திருந்தார்.

    Advertisement

    முதல்வராவதற்கு முன்னர் விஜய் வெள்ளை சட்டை, காக்கி நிற பேன்ட் அணிந்து கொண்டு கட்சி நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்தார்.

    அது போல் அவர் முதல்வராக பதவியேற்றது முதல், கருப்பு கோட், பேன்ட், வெள்ளை சட்டை அணிந்து கொண்டு வருகிறார். தலைமைச் செயலகத்திற்குள்ளேயே ஆய்வுகளை மேற்கொள்ள கோட்டை கழற்றி வைத்துவிட்டு வருகிறார்.

    அது போல் எழும்பூர் அரசு மருத்துவமனைக்கு ஆய்வுக்கு சென்ற போதும் கூட கருப்பு கோட்டை கழற்றி வைத்துவிட்டு வெள்ளை சட்டை, கருப்பு பேன்டில் சென்று ஆய்வு செய்திருந்தார்.

    விஜய் கோட் சூட் அணிந்து கொண்டு அரசியல் செய்வதை பலர் விமர்சித்தனர். ஏழைகளின் உடை கோட் சூட் அல்ல என்றும் விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில் திருச்சி கிழக்கு தேர்தலில் வாக்காளர்களுக்கு சொல்ல வந்திருந்த விஜய், தான் ஏன் கோட் சூட் அணிகிறேன் என்பதை சொன்னார்.

    Advertisement

    விஜய் கூறுகையில், அதிகாரம் படைத்தவர்கள் மட்டும்தான் கோட் சூட் அணிய வேண்டுமா? நான் என்ன கலர் கலராவா உடை கோட் சூட் போட்டுகிட்டு வரேன்? கருப்பு வெள்ளை என்பது மக்களின் தூய்மையான மனதையும் பெரியாரின் கருப்புச் சட்டை கொள்கையையும் பிரதிபலிக்கிறது என தெரிவித்தார்.

    English Summary

    Tamil nadu CM Vijay wears black and black dress for karur function. He is coming to karur first time after Karur Stampede incident.