கோவில் நிலத்தை ‘தொட்டால்’ விடமாட்டோம்! திமுக தூங்கிக் கொண்டிருந்ததா? அமைச்சர் ரமேஷ் அட்டாக்!

  • திருச்சி: தமிழகத்தில் கோவில் நிலங்களை விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இதுவரை 19 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் கூறியுள்ளார். மேலும் கோவிலில் மோசடி தொடர்பாக திமுக ஆட்சியிலேயே புகார் அளிக்கப்பட்ட நிலையில், அப்போது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

    Advertisement

    ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள தாமோதர கிருஷ்ண கோபுரத்தில் 2.15 கோடி மதிப்பீட்டில் பழுது பார்த்தல் பணிகள் முடிவுற்றது. இந்நிலையில் அந்த கோபுரத்தை தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் பார்வையிட்டு திறந்து வைத்தார்.

    Advertisement

    தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர்," திருச்சி ஸ்ரீரங்கம் தாமோதர கிருஷ்ண கோபுர
    பணிகள் நிறைவு பெற்று இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. பணிகள் ஏறத்தாழ மூன்றாண்டுகள் நடைபெற்றது.

    சில பிரச்சினைகள் காரணமாக பணியில் தாமதம் ஏற்பட்டது. கடந்த ஆண்டுகளில் நில மோசடியில் ஈடுபட்ட 19 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு பெருமாள் கோவிலுக்கு சொந்தமான 20 ஏக்கர் நிலம் விற்பனை தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த மோசடியில் ஈடுபட்ட யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். நீதிமன்றத்தின் உத்தரவை பெற்று நிலம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

    Advertisement

    பழமை வாய்ந்த கோபுரங்கள் சீரமைப்பு செய்யப்பட்டு குடமுழுக்கு விழாக்கள் நடத்தப்படும். கடந்த ஆட்சியில் நில மோசடியில் யாரையும் கைது செய்யப்படவில்லை நாங்கள் கைது செய்துள்ளோம். கோவில் நில அபகரிப்பு தொடர்பாக 19 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளோம். கோர்ட் உத்தரவுப்படி அடுத்த கட்ட நடவடிக்கைகளை துரிதப்படுத்துவோம். கோவிலுக்குள் செல்போன் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் நலனுக்காக தமிழக வெற்றிக் கழக அரசு தொடர்ந்து செயல்படும்." என்றார்.

    மன அமைதிக்காக கடவுளை வணங்க கோவிலுக்கு வருவோர் செல்போன்களை உள்ளே எடுத்துச் செல்லக் கூடாது. திரைக் கலைஞர்கள், அரசியல் பிரமுகர்கள் வந்தால் கோவிலுக்கு சென்று செய்தியாளர்கள் படம் பிடிக்க செல்ல கூடாது. கோயில்களுக்குள் ரிலீஸ் எடுக்கவும் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. கோவிலுக்கு வரும் பக்தர்களின் செல்போன்களை வைக்கும் வசதியை செப்டம்பருக்குள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

    Advertisement

    ஏற்கனவே சொன்னது போல நிலம் மோசடி தொடர்பாக தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் திமுக ஆட்சியிலேயே புகார் அளிக்காதது ஏன்? புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? திமுக ஆட்சியில் அதிகாரிகள் என்ன செய்து கொண்டு இருந்தார்கள் என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது" என்றார்.

    English Summary

    Minister Ramesh says 19 people face cases over temple land fraud and questions why complaints were not acted upon under DMK rule.