தவெகவை எதிர்க்கும் திருமாவளவன்.. இப்போது என்ன சொல்லியிருக்கிறார் பாருங்க.. விஜய்க்கு தலைவலி


  • திருச்சி: ''மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுக எம்எல்ஏக்களை தவெக தன்பக்கம் இழுக்க முயன்றால் அது ஜனநாயகத்துக்கு எதிரானத. அத்தகையை நடவடிக்கையை விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடர்ந்து எதிர்க்கும்'' எனறு ஆளும் கூட்டணியில் உள்ள விசிக தலைவர் தொல் திருமாவளவன் கூறியுள்ளார்.

    Advertisement

    முதல்வர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைக்க விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு அளித்துள்ளது. அந்த கட்சியின் 2 எம்எல்ஏக்கள் தவெகவிற்கு ஆதரவாக உள்ளனர். இதில் வன்னியரசுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

    Advertisement

    இந்நிலையில் தான் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்பியுமான தொல் திருமாவளவன் அரியலூரில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

    அப்போது அவர் கூறுகையில், '' காவிரி நீர் விவகாரத்தில் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு எதிராக மத்திய அரசு செயல்பட கூடாது. மேகதாதுவில் அணை கட்டுவதற்கு அனுமதிக்க கூடாது. தமிழ்நாட்டின் உரிமைகளை புதிய தவெக அரசு பாதுகாப்பதாக உறுதியளித்துள்ளது'' என்றார். காாவரியில் மேகதாது என்ற இடத்தில் கர்நாடகா அரசு புதிய அணை முயன்று வருகிறது. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் மத்திய அரசு அணை கட்ட அனுமதிக்க கூடாது என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    மேலும் திருமாவளவன் பேசுகையில்,''தவெக அமைச்சரவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்றால் அதனை நாங்கள் வரவேற்போம். அதேவேளையில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அதிமுக எம்எல்ஏக்களை தவெக தன்பக்கம் இழுப்பது என்பது ஆரோக்கியமான ஜனநாயகம் இல்லை. இதனை நாங்கள் தொடர்ந்து எதிர்ப்போம்'' என்றார்.

    சட்டசபை தேர்தலில் தவெகவிற்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. பெரும்பான்மைக்கு 118 எம்எல்ஏக்கள் வேண்டும். ஆனால் தவெக மொத்தம் 108 தொகுதிகளில் தான் வெற்றி பெற்றது. இதில் முதல்வர் விஜய் திருச்சி கிழக்கு எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததால் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 107 ஆக சரிந்தது.

    இதனால் காங்கிரஸ், விசிக, 2 கம்யூனிஸ்ட்கள், இந்தியன் யூனியன் முஸ்லிம் கட்சிகளின் தயவில் தான் தவெகவின் ஆட்சி நடக்கிறது. ஆனால் விஜய் தனது கட்சிக்கே பெரும்பான்மையான எம்எல்ஏக்கள் வேண்டும் என்று நினைக்கிறார். இதனால் அதிமுகவில் வென்றவர்களை ராஜினாமா செய்ய வைத்து தவெகவில் இணைப்பதாக குற்றச்சாட்டு உள்ளது.

    தற்போது வரை மொத்தம் 6 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து தவெகவில் ஐக்கியமாகி உள்ளனர். அதிமுகவை சேர்ந்த மரகதம் குமாரவேல் (மதுராந்தம் தொகுதி), எஸ் ஜெயக்குமார் (பெருந்துறை), சத்யபாமா (தாராபுரம்), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்), சி விஜபாஸ்கர் (விராலிமலை) , எம்ஆர் விஜயபாஸ்கர் (கரூர்) ஆகியோர் தங்களின் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்துள்ளனர்.

    Advertisement

    இன்னும் கூட சில எம்எல்ஏக்களை தவெக இழுக்க ரகசியமாக ஆபரேஷன் செய்வதாக கூறப்பட்டு வரும் நிலையில் தன் திருமாவளவன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    English Summary

    "If TVK attempts to lure AIADMK MLAs elected by the people, it would be undemocratic. The Viduthalai Chiruthaigal Katchi (VCK) will continue to oppose such actions," said Thol. Thirumavalavan, leader of the VCK—a party within the ruling alliance.