திருச்சி: மணச்சநல்லூர் இன்ஸ்பெக்டர் கிருபாநிதியும், துணை சபாநாயகர் ரவிசங்கரும் என்னை கொன்றுவிடுவதாக மிரட்டியதால் அவர்கள் சொல்லிக் கொடுத்தது போல் சமாதான வீடியோ போட்டேன் என துறையூரை சேர்ந்த கார்த்திக் குமார் புதிய வீடியோ வெளியிட்டுள்ளார்.
தற்போது வெளியான புதிய வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது: என் பெயர் கார்த்திக் குமார். நான் துறையூரை சேர்ந்தவர். எனது தொகுதியில் அடிப்படை வசதிகளுக்காக நகராட்சியில் பல முறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. துணை சபாநாயகர் ரவிசங்கரின் அலுவலகம், துறையூர் எம்எல்ஏ அலுவலகம் உள்ளிட்டவைகளுக்கும் புகார் அனுப்பியிருந்தேன். எந்த நடவடிக்கையும் இல்லை.
நான் ஒரு சமூக ஆர்வலர், ஆன்மீகவாதியும் கூட! நேற்றைய தினம் சமயபுரம் கோயிலுக்கு புறப்பட்டேன். அப்போது வழியில் துணை சபாநாயகர் ரவிசங்கரின் அரசு வாகனம் நின்றிருந்தது. எனவே அவரை பார்த்து அடிப்படை வசதிகள் குறித்த கோரிக்கையை வைக்க அவரை சந்தித்தேன். அப்போது வெளியே வந்த அவர் என்னிடம் எதையுமே கேட்காமல் கை நீட்டி அடித்து, தரக்குறைவாக பேசி என்னிடம் இருந்து கண்ணாடி, வண்டி சாவியை பிடுங்கி ஓட விட்டனர். ஒரு 3 பவுன் செயினையும் காணவில்லை. மணச்சநல்லூர் அரசு மருத்துவமனையில் என்னை தாக்கியது துணை சபாநாயகர் ரவிசங்கர் என சொல்லியும் என்னோட மெடிக்கல் ஹிஸ்டரியில் அவரது பெயரை போடாமல் மர்ம நபர் அடித்ததாக பதிவு செய்திருக்கிறார்கள். உடனே மணச்சநல்லூர் இன்ஸே்பெக்டர் கிருபாநிதி என்னிடம் கோபமாக வந்து இங்க ஏன் படுத்திருக்க? எதுக்காக அங்கெல்லாம் போனே? என கேட்டு என் கையில் இருந்த செல்போனை பறித்துக் கொண்டு என்னை காவல் நிலையத்திற்கு அழைத்துக் கொண்டு சென்றார். ஏதோ நான் யாரையோ அடித்த மாதிரி என்னிடம் அவர் நடந்து கொண்டார். அப்போது என்னை மிரட்டிய இன்ஸ்பெக்டர், "சமாதான வீடியோ போடுமாறு" சொன்னார். அதுவும் "துணை சபாநாயகர் வீட்டிற்கே போய் பேச வேண்டும்" என்றார். உனக்கு கோரிக்கை ஏதேனும் இருந்தால் அலுவலகத்திற்கு செல், எதற்காக அவரது வீட்டிற்கு செல்கிறாய்?" என்றார். இதையடுத்து சபாநாயகர் வீட்டிற்கு என்னை வலுக்கட்டாயமாக உட்காரவைத்து அவர்கள் எழுதி கொடுத்ததை பேச சொன்னார்கள். அதற்கு நான் மறுத்தால் என் குடும்பத்தை கொன்றுவிடுவதாக துணை சபாநாயகர் மிரட்டினார். "எனக்கு கட்சியில் நிறைய பதவி கொடுத்திருக்கிறார்கள். நான் யார் என்பதை புஸ்ஸி ஆனந்திடம் போய் கேளு, நான் சொன்னால் எதையும் செய்வார். நீ பேசாவிட்டால் இந்த இடத்தை விட்டு உயிரோடு போக முடியாது" என மிரட்டினார். இதனால் உயிரை காப்பாற்றிக் கொள்ள அவ்வாறு மிரட்டியதால்தான் நான் அவர்கள் சொன்னது போல் வீடியோவில் பேசினேன். சமாதானம் ஆனது போல் வீடியோவை அவர்கள் எடுத்தார்கள். நானாக மனம் வந்து கொடுக்கவில்லை. என்னை பற்றி சமூகவலைதளங்களில் தப்பு தப்பாக பேசுகிறார்கள். அந்த இடத்தில் என் உயிரை காப்பாற்றிக் கொள்ள அப்படி பேசினேன். நான் வேறு என்ன தவறு செய்தேன்? 6,7 முறை பேச வைத்து வீடியோ எடுத்து அதில் எது நன்றாக இருந்ததோ அந்த வீடியோவை வெளியிட்டார்கள் என கார்த்திக் குமார் தெரிவித்துள்ளார். தனது செல்போனை பறித்துக் கொண்டதால் தற்போதுதான் சமூகவலைதளங்களில் தன்னை பற்றி பேசுவதை தாங்காமல் நடந்த விஷயத்தை இப்போது சொல்லிவிட்டேன் என்றார்.10 நாளா தண்ணீர் வரலைன்னு கேட்டா சரமாரியா அடிப்பீங்களா? துணை சபாநாயகர் ரவிசங்கருக்கு அதிமுக கண்டனம்
3 பவுன் தங்க சங்கிலி
மணச்சநல்லூர்
சமாதான வீடியோ
என்னை துணை சபாநாயகர் ரவிசங்கர் தாக்கினாரா? அது தவறான தகவல்! துறையூர் கார்த்திக்குமார் மறுப்பு வீடியோ
புஸ்ஸி ஆனந்த்
6,7 முறை டேக் எடுத்தார்கள்