திருச்சி கிழக்கு.. திருமாவளவன் செக்... முறியடிக்க போராடும் விஜய்.. ஸ்டாலினைக் களம் இறக்கும் நேரு?

  • திருச்சி: இடைத்தேர்தல் நடக்கவிருக்கும் ஆறு தொகுதிகளில் திருச்சி கிழக்குத் தொகுதியில் தவெக, திமுக, அதிமுக ஆகிய கட்சிகளின் சார்பில் யார் போட்டியிடப் போகிறார்கள் என்பதுதான் தமிழக அரசியலில் தற்போது பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது.

    Advertisement

    தவெக கூட்டணி அமைச்சரவையில் இடம்பிடித்துள்ள விசிக தலைவர் திருமாவளவன், திருச்சி கிழக்கில் நான் போட்டியிட விரும்புகிறேன் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவிடம் பிடிவாதமாக காய்களை நகர்த்தி வருகிறார். இந்த கோரிக்கை மட்டுமல்லாமல் சமீபகாலமாக ஆதவ் மூலம் விசிகவுக்கு பவர் ஃபுல் இலாகா வேண்டும், அதனால் கேபினெட்டை மாற்றி அமையுங்கள், உள்ளாட்சித் தேர்தலில் 3 மேயர்கள் சீட் வேண்டும், அரசு வாரியப் பதவிகளில் 4 இடங்கள் வேண்டும், அரசு வழக்கறிஞர் பதவிகளில் 5 சதவீதம் விசிகவுக்கு வேண்டும் என்றெல்லாம் பல்வேறு கோரிக்கைகளை முதல்வர் விஜய்யிடம் வைத்தபடி இருக்கிறார். ஆனால், விஜய்யும் சரி அவரைச் சுற்றியுள்ள அதிகார மையங்களும் சரி, திருமாவின் இந்த கோரிக்கைகளை ஏற்க மறுக்கின்றனர்.

    Advertisement

    இதனை ஆதவ் மூலம் அறிந்துள்ள திருமா, விஜய்க்கு செக் வைக்கும் விதத்தில், தவெக அமைச்சரவையில் இருக்கிறோமே தவிர, தவெக கூட்டணி கட்சியாக இன்னும் நாங்கள் முடிவு செய்யவில்லை என்கிற ரீதியில் பேசி வருகிறார். அதாவது , எனது கோரிக்கைகளை ஏற்காவிட்டால், தவெக அரசுக்கு தந்து வருகிற ஆதரவை வாபஸ் பெறுவோம் என்கிற மிரட்டல் தொணி இது !

    திருமாவை பொறுத்தவரை, மற்ற கோரிக்கைகளை விட்டுக்கொடுத் தாலும் திருச்சி கிழக்கில், தான் போட்டியிட வேண்டும் என்கிற விருப்பத்தை அவர் விட்டுக்கொடுப்பதாக இல்லை என்கிறார்கள் விசிகவினர்.

    Advertisement

    விசிகவின் இந்த மறைமுக மிரட்டல் தொணியை சமாளிப்பத்தற்காகத் தான், பாமக அன்புமணியின் ஆதரவை பெறுவது குறித்து விஜய் தரப்பில் ஆலோசிக்கப்பட்டது. அன்புமணியின் நெருங்கிய நண்பரான விஜய்யின் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமி, இதற்கான முன்னெடுப்புகளை செய்து வருகிறார். ஆனால், ஆதவ் அர்ஜுனா, பாமகவின் ஆதரவை பெறுவதில் ஆரம் பித்திலிருந்தே தடுத்து வருபவர். தற்போது அவர்தான் முட்டுக்கட்டைப் போட்டு வருகிறார். இதனால் விசிகவை வெளியேற்றிவிட்டு பாமகவை கூட்டணியில் சேர்க்க நடக்கும் திட்டம் தள்ளிவைக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. விரைவில் இதற்கு ஒரு அழுத்தமான முடிவை எடுக்க விஜய்யிடம் வலியுறுத்தி வருகின்றன அதிகார மையங்கள்.

    Advertisement

    இதற்கிடையே, தவெகவில் இணைந்துள்ள திருச்சி மாவட்ட அதிமுக வி.ஐ.பி.க்கள் பலரும், திருச்சி கிழக்கில் தங்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று ஆதவ் அர்ஜுனாவிடமும் செங்கோட்டையனிடமும் வலியுறுத்தி வருகின்றனர். அவர்களும் இதுகுறித்து ஆலோசித்து 3 நபர்களின் பெயர்களை குறித்து வைத்துள்ளனராம். இது குறித்து, விஜய்யிடம் விவாதிக் கவும் திட்டமிட்டிருக்கிறார்கள்.

    ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையனின் கணக்குகள் இப்படி இருக்க, விஜய்யின் அதிகார மையத்தில் இருக்கும் ஆலோசகர்களும் தவெக பொதுச்செயலாளரும் அமைச்சருமான புஸ்சி ஆனந்தும், ''இந்த கணக்கு களை முறியடிக்கும் வகையில் ஒரு அஸ்திரத்தைக் கையிலெடுத்துள்ளனர். அதாவது, திருச்சி கிழக்கு தொகுதி என்பது தலைவரின் (விஜய்) தொகுதி. அந்த தொகுதிக்கான இடைத்தேர்தலில் தவெக அரசுக்கு ஆதரவளித்து வரும் கட்சி களுக்கோ, தவெகவின் இணைந்துள்ள மாற்றுக் கட்சியினருக்கோ வாய்ப்பளிக்கக் கூடாது. அவர்களுக்கெல்லாம் உள்ளாட்சித் தேர்தல் வரும் போது பார்த்துக் கொள்ளலாம்.

    Advertisement

    அவர்களின் அபிலாஷைகளை அப்போது கணக்கில் எடுத்துக்கொள்ளலாம். இப்போது தலைவர் போட்டியிட்டு ஜெயித்த தொகுதி யில், விஜய் மக்கள் மன்றத்தின் காலத்திலிருந்து தலைவருக்கு விசுவாசியாக வும், நம்பிக்கைக்குரியவராகவும் இருந்து வரும் சீனியர்களில் ஒருவருக்கு வாய்ப்புத்தர வேண்டும். அப்படியொரு நிலைப்பாட்டை எடுத்தால் தான், தலைவர் மீது தவெக நிர்வாகிகளுக்கு நம்பிக்கை வரும். உண்மையாகவும் விசுவாசமாகவும் இருப்பார்கள்.

    இதை தவிர்த்து, கூட்டணிக்கட்சிகளில் நெருக் கடிக்காக அவர்களுக்கு சாதகமாக முடிவு செய்தால், தவெகவின் நிர்வாகி களையும் தொண்டர்களையும் திமுக-அதிமுக கட்சிகள் விரிக்கும் வலையில் ஈசியாக சிக்கிக்கொள்வர். இது இமேஜ் வகையில் தவெகவுக்கு சரிவை ஏற்படுத்தும் என்று விஜய்யிடம் சொல்லி, ஆதவ் மற்றும் செங்கோட்டையனின் சிபாரிசுகளை உடைக்க தயாராகி வருகின்றனர்'' என்று மேலிட தொடர்பு களில் இருந்து தகவல்கள் கிடைக்கின்றன.

    Advertisement

    திருச்சி கிழக்கை மையப்படுத்தி தவெக தரப்பில் இப்படிப்பட்ட சீக்ரெட் மூவ்கள் நடந்துகொண்டிருக்கும் நிலையில், திமுகவிலும் திருச்சி கிழக்கை மையப்படுத்தி அரசியல்கள் நடந்து வருகின்றன.

    குறிப்பாக, சட்டமன்றத்திற்குள் போக முடியவில்லையே என்கிற ஆதங்கம் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு இருந்து வருகிறது. அவரிடம் உரிமையாகவும் நெருக்கமாகவும் பழகும் திமுக தலை வர்களிடம் ஸ்டாலின் பேசும் போது, அவரது பேச்சில் இந்த ஆதங்கம் வெளிப் படுவதை கவனிக்கின்றனர். ஸ்டாலின் குடும்பத்திலும் இந்த ஆதங்கம் இருக்கிறது.

    அந்த வகையில், திருச்சி கிழக்கில் நீங்கள் போட்டியிட வேண்டும் தலைவரே என்று ஸ்டாலினிடம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார் மாஜி அமைச்சர் கே.என்.நேரு. நீங்கள் இல்லாத சட்டமன்றத்தை எங்களால் பார்க்க முடியவில்லை. திருச்சி கிழக்கிற்கு சம்மதம் மட்டும் சொல்லுங்கள்; மற்றதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்றும் உரிமையுடன் பேசி வருகிறார் கே.என்.நேரு. ஸ்டாலினிடம் மட்டுமல்லாமல், அம்மையார் துர்கா ஸ்டாலினிடமும் வலியுறுத்துகிறார் இவர்.

    ''கே.என்.நேருவை பொறுத்தவரை, திருச்சி கிழக்கில் தனது எதிரியான அன்பில் மகேஷுக்கு போட்டியிட வாய்ப்புக் கிடைத்து விடக்கூடாது. அன்பில் மகேஷுக்கான வாய்ப்பை தடுக்க வேண்டு மானால், திருச்சி கிழக்கில் ஸ்டாலின் போட்டியிட விரும்பினால் மட்டுமே நடக்கும். அவர் விரும்பாத பட்சத்தில், திருச்சி கிழக்கில் போட்டியிட யார் காய்களை நகர்த்தினாலும் அதனை உடைத்து விட்டு தனக்கு வாய்ப்பை அன்பில் மாகேஷ் வாங்கி விடுவார் என்று கே.என். ஆலோசித்துத்தான், திருச்சி கிழக்கில் நீங்கள் போட்டியிட வேண்டும் என்று கே.என்.நேரு வலியுறுத்து கிறார். சட்டமன்றத் துக்குள் போக வேண்டும் என்கிற யோசனை ஸ்டாலினுக்கு இருக்கிறது. ஆனால், இன்னும் முடிவாகவில்லை'' என்கிறார்கள் அறிவாலயத்தரப்பில்.

    தவெக, திமுக தரப்பில் இப்படியிருக்க, அதிமுக தரப்பில்போ, திருச்சி கிழக்கில் யாருக்கு வாய்ப்புத்தருவது என்கிற ஆலோசனை எதையும் இன்னும் நடத்தவில்லை. இதற்கு மாறாக, ''தேர்தல் தேதி அறிவிக்கட்டும், தவெக மற்றும் திமுக தரப்பில் என்ன நடக்கிறது, அப்போது அதைக்கணித்து, அதிமுக தரப்பில் போட்டியிட வேட்பாளரை அறிவிக்கலாமா? அல்லது தேர்தலை புறக்கணிக்கலாமா? புறக்கணிப்பதால் அது யாருக்கு லாபமாக அமையும் என்பது பற்றியெல்லாம் விவாதித்து முடிவெடுக்கலாம் என யோசிக்கிறாராம் எடப்பாடி பழனிச்சாமி '' என்கிறார்கள் அதிமுக தரப்பில்.

    திருச்சி கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தல் தான் ஏகத்துக்கும் பரபரப்பை ஏற்படுத்தும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

    - சிறப்பு நிருபர் எழில்

    English Summary

    Trichy East By-Election: Inside TVK's Secret Strategy to Outsmart VCK and DMK's Shocking Move for MK Stalin!