ஏமாற்றிய சிஎம் விஜய் .. திருச்சியை தெறிக்க விடும் விவசாயிகள்! பேசச் சென்ற அமைச்சர்களுக்கு நோஸ் கட்!

  • திருச்சி: முழுமையான பயிர் கடன் தள்ளுபடி கோரிக்கையை வலியுறுத்தி திருச்சி அருகே சமயபுரத்தில் 50க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் 5வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த வந்த அமைச்சர்கள் ரமேஷ் மற்றும் வினோத்துக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் அவர்கள் பாதியிலேயே புறப்பட்டுச் சென்றனர். தங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை தாங்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாக விவசாயிகள் எச்சரித்துள்ளனர்.

    Advertisement

    முதலமைச்சர் ஜோசப் விஜய் கடந்த மே 25-ஆம் தேதி கூட்டுறவு வங்கிகளில் பயிர்க் கடன் பெற்ற விவசாயிகளுக்கான சிறப்பு தள்ளுபடி திட்டத்தை அறிவித்தார். அந்த அறிவிப்பின்படி, குறு விவசாயிகளுக்கு ரூ.50,000 வரை பெற்ற பயிர்க் கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்பட்டன.

    Advertisement

    சிறு விவசாயிகளுக்கு ரூ.25,000 வரை அல்லது 50 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதேபோல், ரூ.50,000-ஐ தாண்டி கடன் பெற்றவர்களுக்கும் கடன் தொகைக்கு ஏற்ப ரூ.5,000 முதல் ரூ.40,000 வரை தள்ளுபடி வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது.

    மேலும், பெரிய விவசாயிகளுக்கும் தலா ரூ.5,000 வரை பயிர்க் கடன் தள்ளுபடி வழங்கப்படும் என அரசு கூறியுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் 14.22 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் பயனடைவார்கள் என்றும், இதற்காக அரசுக்கு ரூ.2,044.46 கோடி கூடுதல் செலவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இந்த அறிவிப்பு வெளியான பிறகு பல்வேறு விவசாய சங்கங்கள் அதிருப்தி தெரிவித்தன.

    Advertisement

    குறிப்பாக, கடன் சுமையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு பகுதி தள்ளுபடி போதுமானதாக இருக்காது என்றும், முழுமையான பயிர்க் கடன் தள்ளுபடி மட்டுமே விவசாயிகளை நெருக்கடியில் இருந்து மீட்கும் என்றும் வலியுறுத்தினர். இதனையடுத்து சட்டசபை கூட்டத்தில், முதல்வர் விஜய் வெளியிட்ட புதிய அறிவிப்பின்படி, ரூ.75 ஆயிரம் வரை பயிர்க்கடன் பெற்றுள்ள குறு, சிறு மற்றும் இதர பெரு விவசாயிகளுக்கு கடன் தொகை முழுவதும் தள்ளுபடி செய்யப்படும். அதாவது, 100 சதவீத கடன் தள்ளுபடி வழங்கப்படும். அதேநேரத்தில் ரூ.75 ஆயிரத்துக்கு மேல் பயிர்க்கடன் பெற்றுள்ள விவசாயிகளுக்கு ரூ.35 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    இந்த நிலையில் முதல்வர் விஜய் தேர்தல் பிரச்சாரத்தின் போது கொடுத்த வாக்குறுதியான முழுமையான பயிர் கடன் தள்ளுபடி என்ற கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி விவசாய சங்கங்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் குதித்துள்ளனர். குறிப்பாக திருச்சி சமயபுரம் பகுதியில் அவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்தனர். அதற்கு காவல்துறை அனுமதி மறுத்ததால் தனியார் நிலத்தில் போராட்டம் நடைபெறுகிறது.

    முதல் நாள் போராட்டத்தில் ஈடுபட்ட முயன்ற விவசாயிகளை போலீசார் வீட்டுக்காவலில் வைத்தது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தொடர்ந்து இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டமும், மூன்றாவது நாளாக கஞ்சி தொட்டி திறப்பு போராட்டமும் நடைபெற்றது. ஆனால் விவசாயிகள் எடுத்துச் சென்ற உணவு பொருட்களை காவல்துறையினர் அனுமதிக்கவில்லை. இந்த நிலையில் விவசாயிகள் போராட்டம் தற்போது 5வது நாளாக தொடர்கிறது.

    Advertisement

    50க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களை சேர்ந்த சுமார் 500 விவசாயிகள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் விவசாயிகளை தொடர்பு போராட்டத்தை அடுத்து அமைச்சர்கள் ரமேஷ், வினோத் ஆகியோர் இன்று பேச்சுவார்த்தை நடத்த சென்றனர். அப்போது முதல்வரின் ஆலோசனை பயிர்கள் கடன் தள்ளுபடி குறித்து ஆலோசிக்கப்படும் என கூறினர். ஆனால் அமைச்சர்களின் பேச்சை கேட்க மறுத்து தொடர்ந்து விவசாயிகள் முழக்கங்களை எழுப்பினர். இதனால் பாதியிலேயே பேச்சுவார்த்தையை முடித்துக் கொண்டு அமைச்சர்கள் புறப்பட்டு சென்றனர். மேலும் அரசு தங்கள் கோரிக்கையை நிறைவேற்றும் வரை இந்த போராட்டம் தொடரும் எனவும் விவசாயிகள் எச்சரித்துள்ளனர்.

    English Summary

    Around 500 farmers continue their fifth-day Trichy protest, rejecting ministerial talks and demanding complete crop loan waiver.