திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை!

  • திருச்சி: திருச்சியில் தனது தோழி வீட்டுக்கு சென்ற 14 வயது சிறுமியை கார் டிரைவர் ஒருவர் தனியே அழைத்துச் சென்று மது ஊற்றிக் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

    திருச்சியில் 14 வயது சிறுமி ஒருவர் தனது தோழியின் வீட்டுக்குச் சென்றுள்ளார். தோழியின் தாயார் வெளியூர் செல்வதற்காக வாடகை கார் ஒன்றை வரவழைத்துள்ளார். அந்த காரை மாரிசெல்வன் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். அவர் சிறுமியை தனியாக பேசி அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், அந்தச் சிறுமி மது போதையில் சுயநினைவின்றி கீரைக்கடை பகுதியில் கிடந்துள்ளார். சிறுமிக்கு நேர்ந்ததை கேட்டு ஆத்திரமடைந்த பொதுமக்கள் குற்றம் சாட்டப்பட்ட கார் ஓட்டுநர் மாரிசெல்வனை (43) சரமாரியாக தாக்கி போலீஸில் ஒப்படைத்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பாதிக்கப்பட்ட சிறுமி மகாத்மா காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் குவிந்த சிறுமியின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    English Summary

    Shocking reports have emerged from Trichy stating that a car driver lured a 14-year-old girl—who had gone to visit a friend's house, served her alcohol, and sexually harassed her.