தூய சக்தி ஆட்சினு சொன்னாங்க! திருச்சி-கரூர் சாலையில் வசூல் வேட்டை! கையும் களவுமாக பிடித்த வழக்கறிஞர்

  • திருச்சி: வாகன ஓட்டிகளிடம் காவல்துறையினர் சோதனை நடத்தி அபராதம் விதிப்பது வழக்கமானதுதான். ஆனால், திருச்சி-கரூர் சாலையில் அதிகாரிகள் என்று சொல்லிக்கொண்டு 2 பேர் வசூல் வேட்டை நடத்தியிருக்கும் சம்பவம் வாகன ஓட்டிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக வெளியாகியுள்ள வீடியோ சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேராகி வருகிறது.

    Advertisement

    "ரெண்டு பேரு சார்.. ஏதோ அதிகரிகள்னு சொல்லிட்டு வண்டிய மறிக்குறாங்க. பேப்பர் குடு, அது குடுனு கேட்கறாங்க.. எல்லாத்தையும் காட்டினாலும் பணம் கொடுத்தாதான் வண்டி நகரும்னு சொல்றாங்க" என திருச்சி-கரூர் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் புலம்புகின்றனர்.

    Advertisement

    இது குறித்து சம்பவ இடத்திற்கு சென்று ராம் பிரகாஷ் எனும் வழக்கறிஞர் முழு விவரத்தையும் வீடியோவாக பதிவு செய்து அதை சோஷியல் மீடியாக்களில் பதிவிட்டிருக்கிறார். இந்த வீடியோவை பார்த்த பலரும், தூய சக்தி ஆட்சினு சொன்னாங்க.. இப்படியெல்லாம் கொள்ளை நடக்குதே! என கேள்வி எழுப்பியிக்கின்றனர். வழக்கறிஞர் ராம் பிரகாஷ் ஷேர் செய்திருக்கும் வீடியோவில், ஒரு வாகன ஓட்டியை இரண்டு பேர் தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள். தடுத்து நிறுத்தியவர்களிடம் ராம் பிரகாஷ் சில கேள்விகளை கேட்கிறார்.

    வாகனத்தை தடுத்து நிறுத்தியது நீங்கள்தானே! உங்களுடடைய ஐடி-யை காட்டுங்கள் என்று அசோக் கேட்கிறார். ஆனால், அந்த நபர் ஐடியை காட்ட மறுக்கிறார். "எனக்கு ஐடி கார்டு கிடையாது. நான் Ex சர்வீஸ் மேன். பெயர் எம்.செந்தில்குமார். நான் TEXCO அமைப்பில் டிரைவராக இருக்கிறேன். என்னுடைய துறையிலிருந்து எனக்கு வாகனங்களை நிறுத்த சொல்லி அதிகாரம் கொடுத்திருக்கிறார்கள். அதனால்தான் வாகனங்களை நிறுத்தினேன்" என்று கூறியிருக்கிறார்.

    Advertisement

    ஆனால், அப்படியான அதிகாரம் யார் கொடுத்தது? ஐடி கார்டு எங்கே? யுனிபார்ம் எங்கே? நீங்கள் அரசு பணியாளரா? அப்படியெனில் ஐடி கார்டை காட்டுங்கள் என்று வழக்கறிஞர் கேள்வி எழுப்பினார். பதிலுக்கு வாகனத்தை மறித்த செந்தில் குமார் என்பவர், என்னுடைய அதிகாரி இதோ பக்கத்தில் இருப்பவர்தான் என்று கை காட்டுகிறார். அவர் பக்கம் திரும்பிய வழக்கறிஞர், வாகனத்தை மறித்த செந்தில் குமார் அரசு ஊழியரா? அரசால் பணி ஆணை பெற்றவரா? என்று கேள்வி எழுப்ப.. எங்களுடைய கார் அங்குதான் நிற்கிறது.. அங்கு வாங்க ஐடி கார்டை காட்டுகிறேன் என்று கூறியிருக்கிறார்.

    Advertisement

    அதற்கு பிறகு வாக்குவாதம் முற்றுகிறது. முன்னாள் படை வீரராக இருந்தால்.. அவர் வாகனத்தை மறிக்க அதிகாரம் கொண்டவரா? ஐடி கார்டு இல்லை, யார் என்கிற தகவல் இல்லை.. அப்படியெனில் நீங்கள் வழிப்பறி செய்கிறீர்களா? என்று வழக்கறிஞர் கேட்க.. கடைசியில் மறிக்கப்பட்ட வாகனத்திலிருந்த ஓட்டுநரிடம் செந்தில் குமார் சமாதானம் செய்ய தொடங்கிவிட்டார். வாகனத்தை மறித்து நாங்கள் ஏதாவது தொந்தரவு செய்தோமா? என்று சைஸாக பேசி.. ஓட்டுநரை அனுப்பி வைக்க முயன்றார்.

    இது தொடர்பான முழு விடியோவும் சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேராகி வருகிறது. பலரும் வழக்கறிஞர் செயலுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

    Advertisement

    இப்படி தொடர்ந்து வழிப்பறி சம்பவங்கள் நடப்பதாகவும், எல்லா இடங்களிலும் இதேபோல வழக்கறிஞர்கள் தவறுகளை தட்டி கேட்க வேண்டும் என்றும், அரசு இதுபோன்ற வழிப்பறி சம்பவங்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

    English Summary

    Trichy Karur Highway: An incident in which two individuals, posing as officials, engaged in an extortion spree on the Trichy-Karur highway has shocked motorists. A video of the incident is being widely shared on social media.