இ-மெயிலில் கணவனுக்கு வந்த மனைவியின் வீடியோ.. ஆடிப்போன திருச்சி என்ஐடி காலேஜ்? யார் இந்த ஜெரால்டு?

  • திருச்சிராப்பள்ளி: திருச்சி என்ஐடி கல்லூரியில் பேராசிரியை ஒருவரின் அந்தரங்க வீடியோக்கள், போட்டோக்கள் வெளியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உல்லாசத்திற்கு மறுத்த காரணத்திற்காக சக பேராசிரியரே இந்த கொடூர செயலில் ஈடுபட்டது அதைவிட அதிர்ச்சியை தந்து கொண்டிருக்கிறது.. இந்த வழக்கில் காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை என்ன தெரியுமா? இங்கே சுருக்கமாக பார்ப்போம்.

    Advertisement

    திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை சார்பில் தேசிய தொழில்நுட்பக் கழகம் (NIT) இயங்கி வருகிறது. இது தமிழகத்திலேயே புகழ்பெற்ற என்ஐடி ஆகும்.. இதனால் உலகம் முழுவதுமிருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் இந்த கல்லூரியில் படிக்கிறார்கள்..

    Advertisement

    திருச்சி பேராசிரியை

    இந்த கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் துறை பேராசிரியராக பணியாற்றி வருபவர் ஜெரால்டு.. 56 வயதாகிறது.. இவர் திருவெறும்பூர் கைலாஷ் நகர் பகுதியில் உள்ள என்.ஐ.டி குடியிருப்பில் வசித்து வருகிறார்.

    இதே கல்லூரியில் பணியாற்றி வரும் 40 வயதான பெண் பேராசிரியை ஒருவருடன், கடந்த 2021ம் ஆண்டு ஜெரால்டுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் ஒரே காலேஜில் பணிபுரிந்ததால் நாளடைவில் நெருங்கிப் பழகத் தொடங்கினர். இந்த நெருக்கத்தின்போது, அந்தப் பேராசிரியையின் அந்தரங்க வீடியோக்கள், போட்டோக்கள் மற்றும் உரையாடல்களை ஜெரால்டு தனது செல்போனில் சீக்ரெட்டாக ரிக்கார்டு செய்து வைத்துள்ளார்.

    Advertisement

    மனக்கசப்பும், மிரட்டலும்

    கடந்த 2025ம் ஆண்டு 2 பேருக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக, அந்த பேராசிரியை ஜெரால்டுடன் பேசுவதையும் பழகுவதையும் தவிர்த்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஜெரால்டு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு மறுபடியும் அந்தப் பேராசிரியையை உல்லாசத்திற்கு அழைத்துள்ளார்.

    ஆனால் அதற்கு அந்தப் பேராசிரியை மறுத்துவிட்டார். உடனே ஜெரால்டு, "நான் சொல்வதைக் கேட்காவிட்டால், நம் 2 பேரின் அந்தரங்க வீடியோக்களை சோஷியல்ர மீடியாவில் லீக் செய்துவிடுவேன்" என பகிரங்கமாக மிரட்டியுள்ளார். ஆனால் அதை பேராசிரியை கண்டுகொள்ளவேயில்லை.. அப்போதும் ஜெரால்டிடமிருந்து விலகியே இருந்துள்ளார்.

    மெயில் கணவருக்கு வந்த அதிர்ச்சி

    இதனால் மேலும் ஆத்திரமடைந்த ஜெரால்டு, கடந்த 2025 டிசம்பர் மாதத்தில், பேராசிரியையின் அந்தரங்க வீடியோக்கள், போட்டோக்கள், மெசேஜ்களை என அனைத்தையும் அவருடைய கணவருக்கு மெயில் மூலம் அனுப்பி வைத்துவிட்டார்.. அதுமட்டுமல்லாமல், கல்லூரி மாணவர்கள் மற்றும் சக பேராசிரியர்களுக்கும் அந்த வீடியோக்களை ஷேர் செய்து, பேராசிரியையைப் பற்றி தவறான தகவல்களை பரப்பி விட்டார்.

    Advertisement

    இதனால் அதிர்ச்சியடைந்த பேராசிரியை, என்ஐடி கல்லூரி நிர்வாகத்திடமும், திருச்சி கிராமப்புற சைபர் கிரைம் போலீசிடமும் புகார் அளித்தார். அப்போது 2 தரப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, பிரச்சனை முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

    ஆபாச வீடியோக்கள்

    ஆனால், சமரசத்திற்கு பிறகும் புத்தி மாறாத ஜெரால்டு, மீண்டும் கல்லூரி மாணவர்களிடையே அந்த பேராசிரியையைப் பற்றி தொடர்ந்து அவதூறாகப் பேசித் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

    ஜெரால்டின் இந்தத் தொடர் லீலைகளால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான பேராசிரியை, கடந்த ஜூலை 18-ம் தேதி திருச்சி கிராமப்புற சைபர் கிரைம் போலீசில் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்தார்.

    Advertisement

    இந்தப் புகாரின் பேரில், இன்ஸ்பெக்டர் ஜி.அம்பிகா தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள்.. தன்னுடைய அடையாளத்தை மறைத்து மிரட்டல் விடுத்தது, அவதூறு பரப்பியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பாரதிய நியாய சன்ஹிதா (BNS) மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் (IT Act) கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து, நேற்றைய தினம் கைலாஷ் நகரில் உள்ள ஜெரால்டின் வீட்டிற்கு அதிரடியாகச் சென்ற சைபர் கிரைம் போலீசார், அவரைப் போக்சோ அல்லாத இந்த ரகசிய மிரட்டல் வழக்கில் கைது செய்து நீதிமன்றக் காவலில் அடைத்தனர். இந்தச் சம்பவம் திருச்சி என்ஐடி கல்லூரி வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது...!!

    English Summary

    Trichy NIT.. Wife's Video Sent to Husband by Email Shocks Campus.. Who Is Gerald?