Trichy Police: வண்டியை நிறுத்திட்டு இங்கே வாங்க! திருச்சி ஹைவேயில் நள்ளிரவில் டிரைவர்களை நெகிழ வைத்த போலீசார்

  • திருச்சி: சென்னை டூ திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை திடீரென நிறுத்திய போலீசார், டிரைவர்களை அழைத்து சென்று ஸ்வீட் மற்றும் மத்தாப்புகள் கொடுத்து தீபாவளி கொண்டாடிய சம்பவம் டிரைவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இது தொடர்பான வீடியோ காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    Advertisement

    இது குறித்து போலீசார் கூறுகையில், தீபாவளி நேரத்திலும் பண்டிகை நாளில், உங்கள் குடும்பத்தை விட்டுவிட்டு உழைக்கும் எண்ணத்தோடு பொதுமக்களுக்கு சேவையாற்றி இருக்கிறீர்கள். உங்கள் சேவையை பாராட்டி திருச்சி மாவட்ட காவல்துறை சார்பாக சிறிய கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்து இருக்கிறோம் என்று தெரிவித்தனர்.

    Advertisement

    வாகன ஓட்டுநர்களுக்கு சர்ப்ரைஸ்

    தீபாவளிக்கு முந்தைய நாள் இரவில் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களை நோக்கி வாகனங்கள் சாரை சாரையாக படையெடுத்துக்கொண்டு இருந்ததால் திருச்சி - சென்னை ஹைவே பரபரப்பாக காட்சியளித்தது. சரக்கு வாகனங்கள் பேருந்துகள், கார்கள் என ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று கொண்டிருந்த நிலையில், வாகன ஓட்டுநர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக திருச்சி காவல்துறை சார்பில் நள்ளிரவில் தீபாவளி கொண்டாடப்பட்டது வாகன ஒட்டிகள் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், இது பற்றிய விவரங்கள் வருமாறு:-

    துறையூர் அருகே நிறுத்தினர்

    தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாள் இரவில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை பயங்கர பிசியாக காணப்பட்டது. சென்னையில் இருந்து தனியார் ஆம்னி பஸ்கள், அரசு பஸ்கள், தொலை தூரங்களில் இருந்து சரக்கு லாரிகள் வந்து கொண்டிருந்த நிலையில், திருச்சி போலீசார் அவர்களை துறையூர் அருகே நிறுத்தினர்.

    Advertisement
    திருச்சி வார சந்தையில் காய்கறி விற்கும் நடிகர் விமல்.. என்ன ஆச்சு இவருக்கு? வெளியான போட்டோஸ்

    திடீரென போலீசார் நிறுத்துவதால் என்னமோ ஏதோ என்று பதறிய டிரைவர்களிடம் கனிவாக பேசிய போலீசார், ரொம்ப தூரத்தில் இருந்து வர்றீங்க.. வாகனத்தை கொஞ்சம் ஓரமாக போட்டுவிட்டு வாருங்கள்.. சின்னதாக ஒரு டீ பிரேக் எடுத்துக்கலாம் என்று கூறி அழைத்து சென்றனர். மொத்தமாக பல வாகனங்களும் சாலையோரம் நிறுத்தப்பட்ட சூழலில் அந்த வழியாக சென்ற பிற வாகன ஓட்டிகளும் என்னவாக இருக்கும் என சந்தேகத்துடன் பார்த்து சென்றனர்.

    ஸ்வீட் வழங்கி மத்தாப்பு கொடுத்தனர்

    ஆனால் போலீசாரோ, டிரைவர்களுக்கு ஸ்வீட் வழங்கினர். பண்டிகை நாளில், உங்கள் குடும்பத்தை விட்டுவிட்டு உழைக்கும் எண்ணத்தோடு பொதுமக்களுக்கு சேவையாற்றி இருக்கிறீர்கள். உங்கள் சேவையை பாராட்டி திருச்சி மாவட்ட காவல்துறை சார்பாக சிறிய கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்து இருக்கிறோம் என்று கூறி மத்தாப்புகளை போலீசார் கையில் கொடுத்தனர்.

    தவெக தூக்கியதாக புகார் எழுந்த எம்எல்ஏவுடன் நள்ளிரவில் ஆளுநர் மாளிகை வந்த டிடிவி! விஜய் மீது அட்டாக்

    மத்தாப்புகளை கொளுத்தி போலீசாருடன் டிரைவர்களும் தீபாவளியை கொண்டாடினர். தொடர்ந்து டிரைவர்களுக்கு ஸ்வீட் மற்றும் டீ வழங்கிவிட்டு, கவனமாக வாகனத்தை ஓட்டி பயணிகளை பாதுகாப்பாக கொண்டு சேர்க்குமாறு அட்வைசும் கொடுத்தனர். அதிவேகம் போகாமல் கவனமாக செல்லுங்கள் என்று மீண்டும் ஒருமுறை அறிவுரை கொடுத்து அனுப்பி வைத்தனர்.

    Advertisement

    டிரைவர்களை நெகிழ்ச்சி அடைய செய்தது

    திருச்சி காவல்துறையின் இந்த சிறப்பு ஏற்பாடு டிரைவர்களை நெகிழ வைத்தது. டிரைவர்களுடன் தீபாவளி கொண்டாடிய காட்சிகளை தனது சமூக வலைத்தளத்தில் காவல்துறை பகிர்ந்துள்ளது. இது தொடர்பான பதிவில், "திருச்சி வட்டம், குடும்பத்துடன் தீபாவளி கொண்டாட முடியாமல் பணியில் இருந்த ஓட்டுநர்களுக்கு, துறையூர் காவல்துறையினர் பட்டாசுகள் மற்றும் இனிப்புகள் வழங்கி தீபாவளி வாழ்த்துகளைப் பகிர்ந்து மகிழ்ச்சியை ஏற்படுத்தினர் என்ற கேப்ஷனுடன் 1.30 நிமிடங்கள் ஓடக்கூடிய வீடியோவும் பதிவிடப்பட்டு உள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.."

    English Summary

    Trichy Police: On the Chennai-Trichy national highway, police officers suddenly stopped vehicles, invited the drivers over, and presented them with sweets and sparklers to celebrate Diwali—a gesture that left the drivers deeply touched. Footage of this incident is now going viral on social media.